சாவு பயத்த காட்டிட்டாங்க பரமா..6300 அடி உயரத்திலிருந்து விழுந்து உயிர் தப்பிய பெண்கள்- வைரல் வீடியோ

SHARE

நூலிழை வித்தியாசத்தில் ஒருவர் உயிர் தப்புவது மிகவும் ஆச்சரியமான ஒன்று. அந்த வகையில் இரு பெண்கள் தங்களுடைய வாழ்வில் மரணத்தின் விளிம்பு வரை சென்று உயிர் தப்பியுள்ளனர்.

ரஷ்யாவின் டாகெஸ்டான் பகுதியில் அமைந்துள்ள மலைப் பகுதியில் காஸ்பியன் கடலுக்கு மேல் ஒரு இடம் உள்ளது.

இந்த இடம் ரஷ்யாவில் மிகவும் பிரசித்தி சுற்றுலா இடம். இந்த இடத்தில் வருபவர்கள் 6300 அடி உயரத்தில் இருந்து காஸ்பியன் கடலின் அழகை ரசிக்கும் வகையில் அமைந்துள்ளது.

இந்த நிலையில் இந்த உயர்மான இடத்தில் இரண்டு நாட்களுக்கு முன்பாக ஊஞ்சல் வைத்து சிலர் ஆடியுள்ளனர்.

அந்த சமையத்தில் இரு பெண்கள் இந்த ஊஞ்சலில் ஏறி ஆடியுள்ளனர். பின்னே இருந்து ஒருவர் அந்த ஊஞ்சலை தள்ளிவிட்டு வந்துள்ளார்.

திடீரென அந்த ஊஞ்சலின் கயிறு எதிர்பாராத விதமாக அறுந்து உள்ளது. அப்போது ஊஞ்சலில் இருந்த இரண்டு பெண்களும் கீழே விழுந்துள்ளனர். இவர்கள் இருவரும் அதிர்ஷ்டவசமாக அங்கு ஒரு இருந்த மட்டமான பகுதியில் விழுந்ததால் உயிர்தப்பினர்.

இதனைத் தொடர்ந்து அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்த விபத்து தொடர்பாக வீடியோ ட்விட்டர் தளத்தில் 1 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பார்த்துள்ளனர்.

அத்துடன் ஆபத்தான இடத்தில் அவர்கள் எதற்காக ஊஞ்சல் வைத்து ஆட வேண்டும் என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளனர் ட்விட்டர் வாசிகள்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

பிரிட்டனின் உயரிய விருதினை பெற்ற இந்திய வம்சாவளி பெண்

Admin

இயல்பு நிலைக்கு திரும்பும் ஆப்கானிஸ்தான்…உள்நாட்டு விமான சேவை தொடக்கம்…

Admin

தற்பாலின ஜோடிகளின் திருமணம் – வாடிகனின் உத்தரவை மீறும் ஜெர்மனி பாதிரியார்கள்!.

கொரோனாவை கையாளத் தவறிய ஜப்பான் பிரதமர் பதவி விலக முடிவு..!

Admin

மக்கள் பத்திரிகையாளர் டேனிஷ் சித்திக் கொல்லப்பட்டார்

Admin

கையெழுத்து போட்ட ஜோபைடன் ..அமெரிக்காவில் டிக் டாக் தடை இனி இல்லை!

Admin

அதிகரித்த கொரோனா: பிரான்சில் மீண்டும் ஊரடங்கு

Admin

கொரோனா தடுப்பூசி எடுக்கலைனா கைது தான் .. எச்சரிக்கும் அதிபர் எங்கு தெரியுமா?

Admin

ஆஸ்கர் விருதுகளை அள்ளிக் குவித்த படங்கள் எவை? – பட்டியல் இதோ…

சைபர் தாக்குதல்களை தடுக்காவிட்டால் பொருளாதார தடைதான்: ரஷிய அரசுக்கு அமெரிக்கா எச்சரிக்கை !

Admin

யோகா இந்தியாவில் தோன்றியது அல்ல… நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஒலி சர்ச்சை கருத்து

Admin

டெல்டா கொரோனா பெரும் சவால் – அமெரிக்க மருத்துவ நிபுணர் தகவல்

Admin

Leave a Comment