Author: Admin

ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கவுள்ள இந்திய வீரர், வீராங்கனைகளை, டெல்லி விமான நிலைய ஊழியர்கள் உற்சாகப்படுத்தி அனுப்பி வைத்தனர். ஜப்பானின் டோக்கியோவில் வரும் 23-ந் தேதி முதல் ஆகஸ்டு 8-ந் தேதி வரை ஒலிம்பிக் போட்டி நடைபெறுகிறது. கொரோனா பாதிப்பு காரணமாக பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லாமல் நடைபெறும் இந்த போட்டியில் இந்தியா 18 விளையாட்டுகளில் 68 பிரிவில் பங்கேற்கிறது. 71 வீரர்கள், 56 வீராங்கனைகள் என மொத்தம் 127 பேர் கலந்து கொள்கின்றனர். இந்த நிலையில் டெல்லியில் இருந்து விமானம் மூலம் நேற்றிரவு டோக்கியோ புறப்பட்டு சென்றனர். அப்போது, மத்திய விளையாட்டு துறை அமைச்சர் அனுராக் தாகூர் மற்றும் டெல்லி விமான நிலைய ஊழியர்கள், வீரர், வீராங்கனைகளை உற்சாகப்படுத்தி வழியனுப்பி வைத்தனர்.

Read More

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான பயிற்சி ஆட்டத்தின்போது இனவெறி தாக்குதல் நிகழ்த்தப்பட்டதால் சக வீரர்கள் மைதானத்தை விட்டு வெளியேறிய பரபரப்பு சம்பவம் அரேங்கேறியுள்ளது டோக்கியோ ஒலிம்பிக் போட்டி வரும் 23ம் தேதி தொடங்கி அடுத்த மாதம் 8ம் தேதி வரை நடைபெற உள்ளதுஇந்த போட்டியில் பங்கேற்கவுள்ள வீரர்கள், தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்று நடைபெற்ற கால்பந்து போட்டி பயிற்சி ஆட்டத்தின்போது, ஜெர்மனி அணி ஹோண்டுராஸ் அணியை எதிர்கொண்டது. ஆட்டம் முடிய 5 நிமிடங்கள் இருந்த போது இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்திருந்தன.அப்போது திடீரென ஜெர்மனி அணி வீரர்கள் திடீரென மைதானத்தை விட்டு வெளியேறினர். இந்த சம்பவம் பேசுபொருளானது இந்த சூழ்நிலையில் தாங்கள் ஏன் வெளியேறினோம் என்பதற்கான காரணத்தை கூறிய ஜெர்மனி அணி கூறியுள்ளது. அதாவது ,தங்கள் அணியைச் சேர்ந்த ஜோர்டன் டொரனாரிகா என்ற வீரர், இனவெறி தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டதால் மைதானத்தை விட்டு ஜெர்மனி வீரர்கள் வெளியேறியதாக…

Read More

சானிடைசர் எவ்வளவு நம் வாழ்க்கையின் ஒரு அங்கமாக மாறி விட்டது என்பதற்கு உதாரணமாக குழந்தை ஒன்றின் வீடியோ வைரலாக பரவி வருகிறது. உலகம் முழுவதும் சானிடைசர் பயன்பாடு கொரோனாவுக்கு முன், பின் என 2 வகைகளில் பிரிக்கும் அளவுக்கு நம் வாழ்க்கையின் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. நோய்த் தொற்றிலிருந்து பாதுகாக்க கைகளை அடிக்கடி சானிடைசர் கொண்டு கழுவ வேண்டும் என உலக சுகாதார அமைப்பும் கூறியுள்ளது. இந்நிலையில் ஒரு வயது குழந்தை ஒன்று பார்க்கும் பொருட்களை எல்லாம் சானிடைசர் என நினைத்து அதன் முன் கைகளை நீட்டி துடைத்து செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

Read More

இந்தியா – இலங்கை அணிகள் இடையிலான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெற உள்ளது. ஷிகர் தவான் தலைமையில், ராகுல் டிராவிட்டின் பயிற்சியின் கீழ் இளம் வீரர்கள் கொண்ட இந்திய அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அங்கு 3 ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இந்திய அணி விளையாட உள்ளது. இதில் முதல் ஒருநாள் போட்டி இன்று பகல்-இரவு ஆட்டமாக இன்று கொழும்பில் உள்ள பிரேமதாசா ஸ்டேடியத்தில் நடக்கிறது. இலங்கை அணியில் புதிய கேப்டன் ஷனகா தலைமையில் போதிய அனுபவம் இல்லாத வீரர்கள் அதிக அளவில் உள்ளது அந்த அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. அதேபோல் இந்திய அணி வெற்றியோடு தொடரை தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.இவ்விரு அணிகளும் இதுவரை 159 ஒரு நாள் போட்டிகளில் நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இதில் 91ல் இந்தியாவும், 56ல் இலங்கையும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு ஆட்டம் டை ஆனது. எஞ்சிய 11 ஆட்டங்களில்…

Read More

சென்னை மாநகர காவல்துறையில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு துணை கமிஷனர் ஜெயலட்சுமி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில் உள்ள 22 ஆவின் நிறுவனங்களில் முறைகேடுகள் நடந்துள்ளதாக புகார் எழுந்த நிலையில், இது தொடர்பாக ஆவினின் விஜிலென்ஸ் பிரிவுக்கு சிலர் ரகசிய தகவலையும் அளித்தனர். அதன் அடிப்படையில் விசாரணை நடைபெற்றுவந்த நிலையில், விசாரணை நேர்மையாக நடைபெற்றால் ஏராளமான அதிகாரிகள் சிக்குவார்கள் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் சென்னை காவல்துறை பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்புப் பிரிவு துணை ஆணையர் எச். ஜெயலட்சுமி, தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு லிமிடெட் ஆவின்பிரிவில் தலைமை விஜிலென்ஸ் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை உள்துறைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர் பிறப்பித்துள்ளார்.

Read More

தன்னுடன் சேர்ந்து வளர்ந்த ஆட்டை பிரிய மனமில்லாமல் நாய் செய்த செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியதுடன், அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பகுதியில் விவசாயி ஒருவர் 10க்கும் மேற்பட்ட ஆடுகளை கொட்டகையில் வளர்த்து வந்துள்ளார். அதோடு சேர்த்து நாயை ஒன்றையும் வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் ஆடுகளுடன் நாய் நட்பாக பழகி ஒன்றாக சேர்ந்து வளர்ந்துள்ளது. இதற்கிடையில் கொரோனா காரணமாக வாழ்வாதாரம் இழந்த விவசாயி, ஆடுகளை விற்றுள்ளார். அப்போது ஆடுகளை லாரியில் எடுத்து செல்லும் போது, ஆடுகளை பிரிய மனமில்லாத நாய், அந்த லாரியை பல கிலோ மீட்டர் தூரத்திற்கு பின் தொடர்ந்துள்ளது. ஆடுகளை பிரிய மனமில்லாமல் நாய் நடத்திய பாசப்போராட்டம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியதுடன், இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Read More

இந்திய நாட்டிற்கு என்று தனியாக தேசியமொழி எதுவும் கிடையாது என்று மத்திய அரசின் அலுவல் மொழிகள் துறை தெரிவித்துள்ளது. தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பாண்டியராஜா, யானைகள் மீது ரயில்கள் மோதல் தொடர்பாக ஆங்கிலத்தில் கேட்ட கேள்விகளுக்கு சில வட மாநிலங்களின் ரயில்வே கோட்ட அதிகாரிகள் இந்தியில் பதில் அளித்திருந்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் மத்திய அரசின் அலுவல் மொழிகள் துறைக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் இந்திய மொழிகள் சம்பந்தமாக பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தார். இதற்கு அளிக்கப்பட்ட பதிலில், இந்தியாவிற்கு என தேசிய மொழி எதுவும் கிடையாது. தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் ஆங்கிலத்தில் கேள்வி எழுப்பினால், எந்த மொழியில் பதிலளிக்க வேண்டும் என்பது சம்பந்தமாக எந்த உத்தரவும் பிறப்பிக்கப் படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆங்கிலத்தில் கேட்ட கேள்விக்கு அதிகாரி இந்தியில் பதிலளித்தால் அவருக்கு எந்தத் தண்டனையும் கிடையாது என்றும், அலுவல்மொழி விதிகள் 1976 தமிழ்நாட்டிற்குப் பொருந்தாது…

Read More

சுமார் 1,200 கி.மீ தூரம் சைக்கிளில் பயணித்து நடிகர் சோனு சூட்டை காண மும்பையில் உள்ள அவரது வீட்டிற்கு ரசிகர் ஒருவர் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல திரைப்படங்களில் வில்லன் வேடத்தில் நடித்து ரசிகர்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமான சோனு சூட் கடந்தாண்டு முதல் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்து வருகிறார். இதனால் ரசிகர்கள் உட்பட பலரும் அவரை ஹீரோவாக கொண்டாடி வருகின்றனர்.பல ரசிகர்கள் அவரது இல்லத்திற்கு சென்று அவருக்கு தங்களது நன்றிகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் ரசிகர் ஒருவர் காலில் செருப்பு கூட அணியாமல் 1200 கி.மீ. சைக்கிளில் பயணித்து மும்பையில் உள்ள நடிகர் சோனு சூட் வீட்டிற்கு சென்றுள்ளார். அவரை வரவேற்ற சோனு சூட் அவருக்கு புது செருப்பு வாங்கி கொடுத்து வழியனுப்பி வைத்துள்ளதை ரசிகர்கள் பலரும் நெகிழ்ந்து கொண்டாடி வருகின்றனர்.

Read More

தமிழகத்தில் அதிகளவு தடுப்பூசி செலுத்துவது குறித்து பிரதமர் மோடி பாராட்டியதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது. கொரோனா 3வது அலைக்கு உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. பரவலை கட்டுபடுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்படுள்ளது. மேலும் தமிழகத்திற்கு கொரோனா தடுப்பூசி ஒதுக்கீட்டை அதிகரிக்கவும் மாநில அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு கூடுதல் தொகுப்பாக 1 கோடி தடுப்பூசி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை அமைச்சரிடம் வைத்துள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்தில் அதிகளவு தடுப்பூசி செலுத்துவது குறித்து பிரதமரே பாராட்டி உள்ளதாக அவர் கூறினார்.

Read More

மேகதாதுவில் அணை கட்ட தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் அணை கட்ட அனுமதி வேண்டுமென கர்நாடக முதல்வர் எயூரப்பா நேற்று பிரதமரை சந்தித்து பேசியுள்ளார். கர்நாடக முதலமைச்சராக பதவியேற்று 2 ஆண்டு கால நிறைவு பெற்றதை முன்னிட்டு பிரதமர் மோடியை முதல்வர் எயூரப்பா சந்தித்து பேசியுள்ளார். அப்போது மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசுக்கு அனுமதி வழங்க வேண்டும் என பிரதமரிடன் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. அந்த சந்திப்புக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாநிலத்தின் வளர்ச்சி திட்ட பணிகளுக்கு அனுமதி வழங்க வேண்டி பிரதமர் மோடியிடம் கோரியதாக தெரிவித்தார்.

Read More