Author: Admin

தஞ்சாவூர் மாவட்டம் கும்ப கோணத்தை அடுத்த திருப்பனந் தாளில் நீலப்புலிகள் இயக்க நிறுவன தலைவர் உமர்பாரூக்கின் நினைவு நாள் பொதுக்கூட்டம் 2019 ஆம் ஆண்டு ஜூன் 5-ஆம் தேதி நடைபெற்றது. இதில், திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் கலந்துகொண்டு ராஜராஜசோழன் வரலாறு தொடர்பாக சில கருத்துகளை பேசியது சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த நிலையில், திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித்தை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என இந்து மக்கள் சார்பில் திருவிடைமருதூர் காவல் துணை கண்காணிப்பாளரிடம் புகார் அளிக்கப்பட்டது. மனுவைப் பெற்றுக்கொண்ட திருப்பனந்தாள் போலீஸார், கலகம் உண்டாக்குதல் மற்றும் சாதிமத மோதல் உருவாக்குதல் ஆகிய 2 பிரிவுகளின் கீழ் பா.ரஞ்சித் மீது வழக்கு பதிவுசெய்துள்ளனர் . இந்த வழக்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது பா.ரஞ்சித் சார்பில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் இந்தக் கருத்துகளை உள்நோக்கத்துடன் பேசவில்லை. என் கருத்து…

Read More

தேர்தலுக்காக நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று கூறிவிட்டு தற்போது நீட் தேர்வுக்கு தயாராகுங்கள் என மாணவர்களை கூறும் அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் நீட் தேர்வு எழுதி பாஸ் செய்ய தயாரா என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார் தமிழகத்தில் திமுக ஆட்சி ஏற்பட்ட உடன் முதலில் நீட் தேர்வை ரத்து செய்வோம் என திமுக தேர்தல் அறிக்கையில் கூறியிருந்த நிலையில் நடவடிக்கை எடுக்கவில்லை இந்த நிலையில் தமிழக பாஜக தலைவராக சமீபத்தில் பொறுப்பேற்ற அண்ணாமலை தேர்தலுக்காக நீட் தேர்வு ரத்து என்று கூறிவிட்டு தற்போது நீட்தேர்வு நடத்துவோம் என்று அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.  இது மாணவர்களை குழப்பம் அடையச் செய்கிறது. அமைச்சர் சுப்பிரமணியம் முதலில் நீட் தேர்வு எழுதி பாஸ் செய்யட்டும் என்று அண்ணாமலை கூறியுள்ளா

Read More

ராணி 2ம் எலிசபெத்தை ராணிக்கு கொலை மிரட்டல் விடுத்த ஓர் நபர் பிரிட்டன் காவல்துறையால் கொல்லப்பட்டுள்ளார். சுதேஷ் அம்மான் என்கிற 20 வயது இஸ்லாமிய வாலிபர் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தெற்கு லண்டன் பகுதியில் போலி தற்கொலை ஆடை அணிந்து 2 பிரிட்டன் குடிமக்களை கத்தியால் தாக்கியுள்ளார்.   இவர் ஏற்கனவே இரண்டரை ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்துள்ளார். இவரை விடுவிக்கக் கூடாது என்று உளவுத்துறை எச்சரித்தது. இந்த நிலையில் இவர் லண்டன் நீதிமன்ற உத்தரவில் விடுவிக்கப்பட்டார்.வெளியே வந்த அம்மான் ஐஎஸ் பயங்கரவாத குழுவில் இணைய ஆர்வம் காட்டினார். ராணி இரண்டாம் எலிசபெத்தை கொல்ல தான் ஆர்வமாக இருப்பதாகவும் இதற்காக தான் மனித வெடிகுண்டாக மாறத் தயார் என்றும் முன்னதாக இவர் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். தற்போது இவர் பிரிட்டன் சிறப்பு புலனாய்வு படையால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். பிரிட்டனை அச்சுறுத்தி வந்த மிகப்பெரிய இஸ்லாமிய பயங்கரவாதியான அம்மான் கொல்லப்பட்டது நான்…

Read More

பாஜகவின் நிலைப்பாடு குறித்து நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசன் விமர்சனம் செய்துள்ளார். கோவையில் செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன்நேர்மையாக வாக்களித்த மக்களுக்கு நன்றி. அவர்களுக்கும் ஜனநாயகத்திற்கும் வணக்கம் தெரிவிக்க கோவை வந்துள்ளதாக கூறினார் மேலும், கொங்குநாடு அரசியல் கோஷம் மட்டுமே, மக்கள் தேவை அல்ல. கோவை மக்களுக்கு திட்டங்களில் பிரிவினை பார்க்கப்படுகிறது. உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் பங்கு மட்டுமே இருக்க வேண்டும் என கூறிய கமல்ஹாசன். மேலும்கிழக்கிந்திய கம்பெனி போல, வடக்கில் பா.ஜ.க. எனும் வடக்கிந்திய கம்பெனி தயாராகி வருகிறது. மேகதாது விஷயத்தில் பா.ஜ.க இரட்டை வேடம் போடுவதாக கூறிய கமல்ஹாசன் கொரோனா நடவடிக்கையில் ஆளுங்கட்சி முடிந்ததை செய்கிறது. இன்னும் அதிகமாக, தீவிரமாக செயல்பட வேண்டும் என கூறினார்.

Read More

சத்தியம் டிவி அலுவலகத்திற்குள் பட்டா கத்தியுடன் புகுந்த மர்ம நபர் ஒருவர், அங்கிருந்த கணினி, கண்ணாடி உள்ளிட்ட பொருட்களை அடித்து நொறுங்கும் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளது. சென்னை ராயபுரத்தில் அமைந்துள்ள சத்தியம் டிவி அலுவலகத்திற்கு நேற்று மாலை சுமார் 6.45 மணியளவில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் உள்ளே வந்துள்ளார். அலுவலகத்திற்குள் வந்ததும் தனது guitar bagஇல் மறைந்து வைத்திருந்த பட்டா கத்தியை எடுத்து அலுவலகத்தில் இருந்தவர்களை மிரட்டியுள்ளார். மேலும், அங்கிருந்த அலுவலக கண்ணாடி, கணினி, டேபிள் உள்ளிட்டவற்றையும் அடித்து நொறுக்கியுள்ளார். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், தாக்குதலில் ஈடுபட்ட நபரைப் பிடித்துச் சென்றனர். அப்போது அங்கிருந்த ஊழியர்கள் சிலர் அந்த நபரை வீடியோ எடுத்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர் ஆபாச சொற்களால் அவர்களைத் திடியுள்ளார் மேலும், . நாளைக்கு இது எல்லாம் முக்கிய செய்திகள்ல வரனும்” என்றும்…

Read More

சுதந்திர தின விழாவில் கலந்துகொள்ளும்படி ஒலிம்பிக்கில் பங்கேற்றுள்ள இந்திய குழுவினருக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டியானது கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் இந்திய வீரர்களும் பங்கேற்று, பலரும் தங்களின் திறமையை வெளிப்படுத்தி சர்வதேச அரங்கில் இந்தியாவை கவுரவித்து வருகின்றனர். இந்தநிலையில் ஒலிம்பிக்கில் பங்கேற்ற இந்திய குழுவினர் செங்கோட்டையில் நடைபெறவுள்ள 75- வது சுதந்திர தின நிகழ்ச்சியில் பங்கேற்கும்படி பிரதமர் மோடி அழைத்து விடுத்துள்ளார். அதுமட்டுமின்றி ஒலிம்பிக் வீரர்கள் நாடு திரும்பியதும் அவர்களை தனித்தனியே நேரில் சந்தித்து மோடி உரையாட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Read More

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைதான சிவசங்கர் பாபாவின் ஜாமீன் மனுக்களில் சிபிசிஐடி ஒரு வாரத்தில் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா. இவர் அப்பள்ளியில் படிக்கும் மாணவிகள் மற்றும் குழந்தைகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. சிவசங்கர் பாபா மீது பாலியல் தொல்லை கொடுத்ததாக 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இந்த 3 போக்சோ வழக்குகளும் சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றப்பட்ட நிலையில், 2 போக்சோ வழக்குகளில் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் இன்று 3வது போக்சோ வழக்கில் சிவசங்கர் பாபா-வை கைது செய்த சிபிசிஐடி போலீசார், செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். இதனையடுத்து சிவசங்கர் பாபாவின் ஜாமீன் மனுக்களில் சிபிசிஐடி ஒரு வாரத்தில் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Read More

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை விதித்து பிறப்பிக்கப்பட்ட சட்டத்தை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2020ம் ஆண்டு நவம்பர் 21 ம் தேதி ஆன்லைன் ரம்மி, போக்கர் போன்ற சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை விதித்து தமிழக அரசு சட்டம் இயற்றியது. முந்தைய அதிமுக ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட இந்த சட்டத்தை ரத்து செய்யக்கோரி ஜங்லி கேம்ஸ், ப்ளே கேம்ஸ், ரீட் டிஜிட்டல் ஆகிய நிறுவனங்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகள் விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில் குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு ஆன்லைன் விளையாட்டுக்களுக்கு ஒட்டுமொத்தமாக தடை விதிக்க முடியாது எனவும், உரிய விதிகளுடன் புதிய சட்டம் கொண்டு வர அரசுக்கு எந்த தடையும் இல்லை எனவும் தீர்ப்பளித்தனர்.

Read More

இ-ருபி என்ற ரசீது முறை பணப் பரிவா்த்தனை வசதியை பிரதமா் மோடி தொடங்கி வைத்தார். கொரோனா காலகட்டத்தில் இணையவழி பணப் பரிவா்த்தனையின் பயன்பாடுகள் அதிகரித்துள்ளன. இந்நிலையில், பணப் பரிவா்த்தனையை மேலும் எளிமைப்படுத்தும் வகையில் இ-ருபி என்ற புதிய வசதியை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் இதனை தொடங்கி வைத்தார். இந்த புதிய வசதியின்படி, இணையவழியில் முன்கூட்டியே பணத்தைச் செலுத்தி ரசீதுகளை வாடிக்கையாளா்கள் வாங்கிக் கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பிரதமர் மோடி பேசியதாவது, இந்த புதிய சேவை பணப்பரிவர்த்தனை வசதி மக்களிடம் வெளிப்படைத் தன்மையை கொண்டதாக இருக்கும் எனவும், மக்கள் மத்தியில் தொழில்நுட்பத்தை எளிதாக பயன்படுத்தும் வகையில் அமையும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Read More

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நாளை கூடுகிறது. தமிழகத்தின் நிதிநிலை அறிக்கை ஆகஸ்ட் 13ம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. நிதிநிலை அறிக்கையை இறுதிசெய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின், துறை ரீதியான ஆய்வுகளை மேற்கொண்டு அதிகாரிகளின் கருத்துக்களை கேட்டறிந்தார். இந்நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் நாளை நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் புதிய தொழில் திட்டங்களுக்கான அனுமதி, நிதிநிலை அறிக்கைக்கு மற்றும் வேளாண்மை நிதிநிலை அறிக்கைக்குக்கு ஒப்புதல் அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Read More