- தமிழ்நாடு
- இந்தியா
- உலகம்
- அரசியல்
- நூல் அறிமுகம்
- சினிமா
- தமிழ்
- தொடர்கள்
- நலவாழ்வு
- உணவு
- வரலாறு
- வினோதங்கள்
- Public Post
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: Admin
கீழடி ஏழாம் கட்ட அகழாய்வில் தந்தத்தால் செய்யப்பட்ட பகடை கண்டெடுக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் மானாமதுரையை அடுத்த கீழடியில் 7ஆம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. கீழடியில் 8 குழிகள் வரை தோண்டப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை சிவப்பு பானை, உறைகிணறுகள், மூடியுடன் கூடிய பானை, சுடுமண் பகடை உள்ளிட்டவை கண்டறியப்பட்டுள்ளது. இந்தநிலையில் தற்போது தந்தத்தால் செய்யப்பட்ட பகடை கண்டறியப்பட்டுள்ளது. இந்த பகடை 4 கிராம் எடையும், 1 புள்ளி 5 செ.மீ கன சதுரமும் கொண்டு ஆறு பக்கங்களிலும் 6 புள்ளிகள் குறிப்பிடப்பட்டுள்ளன. ஏற்கனவே இங்கு சுடுமண் பகடை கண்டறியப்பட்டுள்ள நிலையில் தற்போது தந்தத்தால் செய்யப்பட்ட பகடை கண்டெடுக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் இறுதி வரை இந்த பணிகள் நடைபெற உள்ளது.
உச்ச நீதிமன்றத்திற்கு 9 நீதிபதிகளின் நியமனத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. உச்ச நீதிமன்றத்தில் மொத்தம் 34 நீதிபதிகளின் இருக்க வேண்டியது. ஆனால் கடந்த 12-ஆம் தேதி உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்த நாரிமன் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து நீதிபதிகள் எண்ணிக்கை 25 ஆக குறைந்தது. இதுவரை நீதிபதிகள் நியமனம் நடைபெறாமல் இருந்து வந்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் காலியாக உள்ள இடங்களுக்கு 9 நீதிபதிகளின் பெயர்களை உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதிகள் அடங்கி கொலிஜியம் குழு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது. இதில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் உள்பட 3 பெண் நீதிபதிகளின் பெயர்களும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கொலிஜியம் குழு பரிந்துரையை ஏற்று உச்ச நீதிமன்றத்திற்கு 9 நீதிபதிகளின் நியமனத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
நடிகர் விவேக் கடந்த ஏப்ரல் மாதம் 17-ம் தேதி மூச்சுத் திணறல் காரணமாக மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். தனது நகைச்சுவை மூலமும் பல்வேறு நல்ல கருத்துக்களை மக்களிடம் எடுத்துச் சென்ற கலைஞரின் மறைவு, திரையுலகினர்களின் மத்தியில் மட்டுமல்லாது, ரசிகர்களிடமும் மீளா துயரத்தை ஏற்படுத்தியது. இதற்கிடையில் நடிகர் விவேக் இறப்பதற்கு இரு தினங்களுக்கு முன்பு தான் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார். தடுப்பூசி செலுத்திக் கொண்டதால் தான் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதா என்ற கேள்வி எழுந்து சர்ச்சை ஏற்படுத்தியது. இ இந்நிலையில் விழுப்புரத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் கொரோனா தடுப்பு ஊசி செலுத்தியதால் விவேக் மரணமடைந்தார் என்று புகார் தெரிவித்துள்ளார். அதையடுத்து தேசிய மனித உரிமை ஆணையம் விவேக் மரணம் தொடர்பான புகாரை விசாரணைக்கு ஏற்றுள்ளது. விரைவில் விவேக் மரணத்தில் உள்ள உண்மை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்ஸ்டாகிராம் செயலியில் வரவுள்ள புதிய அப்டேட் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது. வாட்ஸ் அப்பில் செயலி போன்று மக்கள் அதிகம் பயன்படுத்து வலைத்தளமாக இன்ஸ்டாகிராம் மாறியுள்ளது. வாட்ஸ் அப்பில் எப்படி அப்டேட்கள் வழங்கி வருகிறார்களோ.. அவ்வாறு இன்ஸ்டாகிராமிலும் அப்டேட்கள் அள்ளி தெளித்து வருகின்றன.அந்த புதிய அப்டேட் குறித்த தகவல்கள் ட்விட்டரில் வெளியாகி உள்ளது. இன்ஸ்டாகிராம் செயலியின் ஸ்டோரிக்களுக்கு லைக் கொடுக்கும் வகையில் உருவாக்கப்பட்டு வருகிறது. இதுவரை இதுபோன்ற அம்சம் வழங்கப்படாமல் இருந்த நிலையில், இன்ஸ்டாகிராமின் டைரெக்ட் மெசேஜ்களுக்கு வரும் ஸ்டோரிக்களுக்கு மட்டும் ரியாக்ட் செய்யும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. விரைவில் ஸ்டோரிஸ் பக்கத்திலேயே லைக் பட்டன் வழங்கப்பட இருக்கிறது. தற்போதைய தகவல்களில் ஒரே பயனர் ஒரு இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பல்வேறு லைக்குகளை பதிவிட முடியும் என கூறப்படுகிறது.
ஆப்கானிஸ்தானில் நிலவி வரும் பதட்டங்களால், அந்நாட்டுக்கு வழங்கி வந்த உதவிகளை உலக வங்கி நிறுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றியுள்ள நிலையில், அங்கு நிலைமை பதற்றத்தில் உள்ளது. தாலிபான்களின் ஆட்சி விரைவில் ஆப்கானிஸ்தானில் அமைய உள்ள நிலையில் அங்கு வாழும் மக்களின் நிலைமை மற்றும் குறிப்பாக பெண்களின் நிலைமை குறித்து உலக வங்கி கவலை தெரிவித்துள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய உலக வங்கியின் அதிகாரி, ஆப்கானிஸ்தானுக்கு வழங்கப்பட்டு வந்த உதவிகளை முற்றிலும் நிறுத்தியுள்ளதாக கூறினார். இதனிடையே, பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கான ஆப்கானிஸ்தானுக்கு 2002 ஆம் ஆண்டு முதல் 5.3 பில்லியன் டாலர்களை உலக வங்கி வழங்கியுள்ளது குறிப்பிடதக்கது.
கலைஞர் பெயரில் நூலகம் கட்டப்படும் இடம் குறித்து தவறாக கருத்துக்களை பரப்பி வருவதாகவும், ஆதாரம் இருந்தால், அந்த இடத்தை மாற்ற அரசு தயாராக இருப்பதாகவும் முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார். சட்டப்பேரவையில் இன்று கூட்டுறவுத் துறை மற்றும் உணவு துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அந்த விவாதத்தின் போது பேசிய, அதிமுக சட்டமன்ற உறுப்பினர் செல்லூர் ராஜூ, மதுரையில் உள்ள பென்னி குவிக் இல்லத்தை மாற்றி, கலைஞர் பெயரில் நூலகம் அமைக்க உள்ளதாக தகவல் வருவதாகக் கூறினார். அப்போது பொங்கி எழுந்த நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், அந்த இல்லம் பென்னி குவிக் இல்லம் இல்லை என்றும், தவறான கருத்தை பதிவு செய்ய வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார். அதை தொடர்ந்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அது பென்னி குவிக் இல்லம் என்பதற்கான ஆதாரம் இருந்தால், நிச்சயம் இடத்தை மாற்ற அரசு தயாராக உள்ளதாக விளக்கம் அளித்தார்.
கொரோனா தொற்றுப்பரவலால் மூடப்பட்டிருந்த பள்ளிகள் மீண்டும் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மூன்றாம் அலைக்கான அச்சுறுத்தல் இருந்ததால் இந்த முடிவில் இழுபறி இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தமிழக அரசு உறுதியாக செடம்பர் 1ஆம் தேதி முதல் பள்ளிகள் சில வழிகாட்டு நெறிமுறைகளுடன் செயல்படும் என்று அறிவித்து விட்டது. அதே சமயம், அங்கன்வாடி மையங்கள் குறித்த எந்த அறிவிப்பும் இல்லையே என்று சமூக வலைதளங்களில் அப்போதே சலசலப்பு எழுந்தது. இந்நிலையில், செப்.1 முதல் அங்கன்வாடி மையங்களும் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்காக வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளன. நெயில் பாலிஷ் போடுவது முதல் தடுப்பூசி போடுவது வரை கவனமாக நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் அங்கன்வாடி மையங்களில் வரும் 1ந் தேதி முதல் சூடான மதிய உணவு வழங்க வேண்டும். 2 முதல் 6 வயது குழந்தைகளுக்கு பகல் 11.30 மணி முதல்…
டிக்டாக் செயலி மூலம் பிரபலமான சூர்யா தேவி தற்கொலை செய்து கொள்ள போவதாகக் கூறி, காவல் ஆணையருக்கு வீடியோ அனுப்பி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். திருச்சி மாவட்டம், மணப்பாறையில் வசிக்கும் சூர்யா தேவி டிக்டாக் செயலி மூலம் பிரபலமானர். அவரின் பொழுதுபோக்கே திரைப்பட நடிகர்கள் மற்றும் சமூக வலைத்தள பிரபலங்களை கடுமையாக திட்டி வீடியோ வெளியிடுவது தான். இந்நிலையில் அவர் கடந்த சில வாரங்களுக்கு முன், ரவுடிபேபி சூர்யாவின் ஆண் நண்பரான சிக்கந்தர் என்பவரை காலணியால் அடித்து அதை வீடியோவாக வெளியிட்டிருந்தார். இதற்கு சூர்யாதேவி மீது மதுரை போலீசார் வழக்கு பதிவு செய்த நிலையில், சூர்யா தேவி தலைமறைவானார். இந்நிலையில் மதுரை காவல்துறை ஆணையருக்கு தான் தற்கொலை செய்து கொள்வதாக கூறி, சூர்யா தேவி வீடியோ அனுப்பியுள்ளார். இதனால் உடனடியாக அப்பகுதிக்கு வந்த போலீசார், சூர்யாதேவி நாடகமாடியதை அறிந்து கொண்டு, அட்வைஸ் செய்து உறவினர் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பெரிதும் பிரபலமான பிக் பாஸ் (Biggboss) நிகழ்ச்சி அடுத்த சீசன் நடைபெறும் என்ற தகவல் உறுதியாகியுள்ளது. இதன் கூடுதல் தகவலாக, “பிக் பாஸ் சீசன் 5” புரோமோ வீடியோ படப்பிடிப்பு நடைபெற்றதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இது குறித்த புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருவதையடுத்து பிக் பாஸ் சீசன் 5 விரைவில் தொடங்கப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. ரிலீஸ் பண்ண பத்தே நிமிடத்தில்.. ஆன்லைனில் வெளியான நெற்றிக்கண் : அதிர்ச்சியில் படக்குழு
மஹாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேயை ஓங்கி அறைவேன் என்று பேசிய மத்திய அமைச்சர் நாராயண் ராணேவுக்கு ஜாமின் வழங்கப்பட்டது. மஹாராஷ்டிர மாநிலம் ராய்கட் மாவட்டத்தில் நடந்த மக்கள் ஆசி யாத்திரையில், பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சர் நாராயண் ராணே பங்கேற்றார். அப்போது உரையாற்றிய நாராயண் ராணே சுதந்திர தினத்தன்று முதல்வர் உத்தவ் தாக்கரே உரையாற்றினார். நாடு எப்போது சுதந்திரம் பெற்றது, என்பது கூட அவருக்கு தெரியவில்லை. தனக்கு பின்னால் நின்றவர்களிடம் அவர் கேட்டு பேசியுள்ளார் என்று பேசிய நாராயண் ராணே. அந்த இடத்தில் தான் இருந்திருந்தால் அவரது கன்னத்தில் ஓங்கி அறைந்திருப்பேன்’ என்று பேசினார்.இது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில்பா.ஜ., மற்றும் சிவசேனா கட்சியினர் இடையை பல இடங்களில் நேற்று மோதல் வெடித்தது. இதனை தொடர்ந்து, நாசிக் போலீசாரால் நாராயண் ராணே கைது செய்யப்பட்டார். நேற்றிரவு மாஜிஸ்திரேட் ஷைக்காபாபாசோ பாட்டீல் முன், ராணேவை…
