ஆப்கானிஸ்தானில் நிலவி வரும் பதட்டங்களால், அந்நாட்டுக்கு வழங்கி வந்த உதவிகளை உலக வங்கி நிறுத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றியுள்ள நிலையில், அங்கு நிலைமை பதற்றத்தில் உள்ளது.
தாலிபான்களின் ஆட்சி விரைவில் ஆப்கானிஸ்தானில் அமைய உள்ள நிலையில் அங்கு வாழும் மக்களின் நிலைமை மற்றும் குறிப்பாக பெண்களின் நிலைமை குறித்து உலக வங்கி கவலை தெரிவித்துள்ளது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய உலக வங்கியின் அதிகாரி, ஆப்கானிஸ்தானுக்கு வழங்கப்பட்டு வந்த உதவிகளை முற்றிலும் நிறுத்தியுள்ளதாக கூறினார்.
இதனிடையே, பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கான ஆப்கானிஸ்தானுக்கு 2002 ஆம் ஆண்டு முதல் 5.3 பில்லியன் டாலர்களை உலக வங்கி வழங்கியுள்ளது குறிப்பிடதக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்