Author: Admin

சசிகலாவை அதிமுகவை விட்டே நீக்குங்கள் என்று தர்மயுத்தம் நடத்தியவர் ஓபிஎஸ். ஆனால், சசிகலாவால் முதலமைச்சராக அறிவிக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமி ஓடி ஒளிகிறார். கோபமா? குற்ற உணர்ச்சியா?

Read More

இந்திய உணவு வகைகளில் அப்பளத்திற்கு என்னைக்குமே தனி மவுசுதான்.மாநிலத்திற்கு தகுந்தாற் போல் பெயர் உருவம் மாறினாலும் அப்பளம் இந்தியாவில் இல்லாத இடமே கிடையாது எனலாம். அதிலும் நம்ம தமிழ் நாட்ல அந்த கல்யாண வீடுகளில் பாயாசத்தில் போட்டு உண்ணும் உணவு ரசிகர்கள் ஏராளம். ஆசை, தோசை, அப்பளம், வடை என்ற பழமொழிக்கேற்ப தனக்கென தனி இடம் பிடித்துள்ள அப்பளத்தை, “அதிகம் சாப்பிடாதீர்கள்… கொலஸ்டிரால் அதிகம்” என மருத்துவர்கள் அறிவுறுத்தினாலும் அலட்சியப்படுத்திவிட்டு நொறுக்கி சாப்பிடுவோர் ஏராளம். இந்த நிலையில் அப்பளப் பிரியர்களில் ஒருவரின் ஆதங்கம் டெல்லி வரை ஒலித்துள்ளது. பொதுவாக, அப்பளம் வட்டமாக மட்டுமல்லாமல் சதுரம், நீள்வட்டம் என பல்வேறு வடிவங்களிலும் கிடைக்கின்றது. சீக்கிரமே பசுவை தேசிய விலங்காக அறிவிக்கணும்: அலாகாபாத் உயர்நீதிமன்றம் இதில் சதுர வடிவ அப்பளப் பிரியரான ஹர்ஷ் கோயங்கா என்பவர் ட்விட்டரில் தன் மனக்குமுறலை வெளியிட்டிருந்தார். அதில், “வட்ட வடிவ அப்பளங்களுக்கு மட்டும் ஜிஎஸ்டி வரியில் இருந்து விலக்கு…

Read More

பொருளாதார நெருக்கடி, கொரோனா பரவல் போன்ற பல்வேறு காரணங்களால், இலங்கையில் அந்நாட்டு அதிபர் கோத்தபய ராஜபக்சே பொருளாதார அவசர நிலையை பிறப்பித்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக இலங்கை பொருளாதாரம் நெருக்கடியை சந்தித்து வருகிறது. தற்போது கொரோனா பரவல் காரணமாக நாட்டின் முக்கியமான வருவாய்த் துறையான சுற்றுலாதுறை முடங்கியதால் இலங்கையின் பண மதிப்பு வெகுவாக சரிந்துள்ளது. இதனால் உணவுப்பொருட்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அவற்றின் விலை உயர்ந்துள்ளது. இந்த நிலையில், உணவுப்பொருட்களின் பதுக்கலை தடுக்கவும், அத்தியாவசிப் பொருட்களின் விலையை கட்டுப்படுத்த நாட்டில் பொருளாதார அவசர நிலையை இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே பிறப்பித்துள்ளார். இதன் மூலம், அரிசி, சர்க்கரை உள்ளிட்ட முக்கிய உணவுப்பொருட்களின் விலையை நியாயமான விதத்தில் பராமரிக்க முடியும் என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. மேலும் எரிபொருளை சிக்கனமாக உபயோகிக்கும்படி வாகன ஓட்டிகளை…

Read More

பசுவை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும் என அலஹாபாத் உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. பசுவதைத் தடைச் சட்டத்துக்குக் கீழ் கைது செய்யப்பட்ட உத்தர பிரதேச மாநிலம், சம்பல் மாவட்டத்தைச் சேர்ந்த ஜாவேத் என்பவருக்கு பசுவை திருடிக் கொன்ற வழக்கில் ஜாமீன் வழங்க மறுத்த அலாகாபாத் உயர்நீதிமன்றம் தனது உத்தரவில்( நீதிபதி சேகர் குமார் யாதவ் ) அளித்துள்ள தீர்ப்பில் : இந்திய கலாசாரத்தில் முக்கியமான அங்கம் பசு அடிப்படை உரிமையானது மாட்டிறைச்சி உண்பவர்களுக்கு மட்டுமின்றி பசுவை வழிபடுபவர்களுக்கும், பொருளாதார ரீதியாக அதைச் சார்ந்திருப்பவர்களுக்கும் உண்டு’ என கூறியுள்ள நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. வாழும் உரிமையானது கொல்லும் உரிமையைவிட மேலானது என கூறியுள்ள நீதி மன்றம் . மனுதாரருக்கு ஜாமீன் கொடுத்தால் மீண்டும் இதே குற்றத்தைச் செய்வார் என கூறியுள்ள நீதிமன்றம்,பசுக்களின் முக்கியத்துவத்தை இந்துக்கள் மட்டுமன்றி, அவை இந்திய கலாசாரத்தின் முக்கியமான அங்கமென முஸ்லிம் ஆட்சியாளர்களும் புரிந்துகொண்டுள்ளனர். உதாரணமாக, பாபர், ஹுமாயூன், அக்பர்…

Read More

Money Heist வெப் சீரிஸை பார்ப்பதற்காக ராஜஸ்தானை சேர்ந்த நிறுவனம் ஒன்று தனது ஊழியர்களுக்கு விடுமுறை அளித்துள்ளது இணையத்தில் வைரலாகியுள்ளது. உலக அளவில் புகழ்பெற்ற மணி ஹெய்ஸ்ட் வெப் சிரீஸ் கடந்த 2020 லாக்டவுனில் இதன் 4வது பாகம் வெளியான நிலையில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. ஒரு குழு வங்கியில் கொள்ளையடிப்பது போல் உருவாக்கப்பட்டிருந்த வெப் சிரீஸின் கதையை பலர் ரசித்து பார்த்தனர். இந்த நிலையில் தற்போது மணி ஹெய்ஸ்ட்ஸ் வெப் சிரீஸ் பாகத்தின் 5வது பாகத்தின் முதல் 5 எபிசோட்கள் வரும் செப்.3 ஆம் தேதி நெட் பிளிக்ஸில் வெளியாக உள்ளது இதனால் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை சேர்ந்த வெர்வ் லாஜிக் என்ற தனியார் நிறுவனம், வெள்ளிக்கிழமை வெளியாகும் Money Heist season 5 சீரிசை பார்க்க பணியாளர்களுக்கு ஒருநாள் விடுமுறை அறிவித்துள்ளது. பலரும் பொய்யான காரணங்களுக்காக விடுப்பு எடுப்பதை தவிர்ப்பதற்காகவே விடுமுறை அளித்திருப்பதாக அந்நிறுவனத்தின் சிஇஓ அபிஷேக் ஜெயின்…

Read More

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, ஜனசேனா கட்சித் தலைவர் பவன் கல்யாண் தனது டுவிட்டர் பக்கத்தில் பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில், தெலுங்கு, தமிழ் என இரு மொழிகளிலும் பதிவிட்டுள்ள பவன் கல்யாண், எந்த ஒரு கட்சியாக இருந்தாலும், ஆட்சிக்கு வர வேண்டுமென்றால் அரசியல் செய்ய வேண்டும். ஆனால், ஆட்சிக்கு வந்த பிறகு அரசியல் செய்யக் கூடாது என்பதை, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வார்த்தைகளால் அல்லாமல், செயல்பாடுகளால் செய்து வருவதாகப் பாராட்டியுள்ளார். மேலும், மு.க.ஸ்டாலினின் ஆட்சி நிர்வாகம் மற்றும் அரசின் செயல்பாடுகள், தமிழ்நாட்டிற்கு மட்டுமல்லாமல், நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் ஊக்கமளிக்கும் விதத்தில் உள்ளதாக புகழாரம் சூட்டியுள்ள பவன் கல்யாண், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

Read More

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி (வயது 63 ) மாரடைப்பால் இன்று காலமானார் தமிழகத்தின் முன்னாள் துணை முதல்வரும் தற்போது அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ. பன்னீர் செல்வத்தின் மனைவி விஜயலட்சுமிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. பெருங்குடியில் உள்ள ஜெம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை 9.30 மணி அளவில் உயிரிழந்தார். சமீபத்தில் விஜயலட்சுமிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த செய்தியை கேட்ட அதிமுக நிர்வாகிகள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Read More

சுமார் 20 ஆண்டுகள் ஆப்கானில் முகாமிட்டிருந்த அமெரிக்கப்படைகள் ஆகஸ்ட் 31ஆம் தேதி அதாவது நேற்றுடன் அமெரிக்க ராணுவம் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறியது. இந்த நிலையில்அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நேற்று நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அப்போது பேசிய அவர்: அமெரிக்க ராணுவ படை 1,20,000 அமெரிக்க குடிமக்கள், நட்பு நாடுகளின் குடிமக்களை பத்திரமாக மீட்டுள்ளது. நாம் எவ்வளவு விரைவாக முடிக்கிறோமோ, அவ்வளவு நல்லது எனக் கூறினார். மேலும், ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தால் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளது என்பதால், மக்களை விரைவாக வெளியேற்ற வேண்டும் என்றும் கூறினார். அமெரிக்க படைகள் வெளியேறிய நிலையில் அதிபர் ஜோ பைடன் என்னப் பேசப் போகிறார் என்பதை அறிய அமெரிக்கர்கள் மட்டுமல்லாது காபூலில் காத்திருந்த ஏராளமானோர் காத்திருந்த நிலையில் பைடனின் பேச்சு ஆப்கான் மக்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.

Read More

கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் கடந்த 8 மாதங்களுக்கு மேலாக பள்ளி, கல்லூரிகள் இயங்காமல் இருந்த நிலையில் இன்று முதல் திறக்கப்படுகின்றன. இதற்கான அனைத்து முன்னேற்பாடுகளையும் தமிழக அரசு செய்துள்ளது. அதனபடி மாணவர்கள் கட்டாயம் முக கவசம் அணிந்து பள்ளிக்கு வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் தனி மனித இடைவெளியை உறுதி செய்யும் வகையில் ஒரு மேஜையில் இரண்டு மாணவர்கள் மட்டுமே அமர அனுமதிக்கப்படுவார்கள் மேலும், இன்றே பாடம் நடத்தப்பட மாட்டாது எனவும், மாணவர்களை மன ரீதியாக தயார் செய்து, அதன் பிறகே பாடம் நடத்தப்படும் எனவும், ஒரு நாளைக்கு 5 வகுப்புக்கள் மட்டுமே எடுக்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. குறிப்பாக பள்ளிகள் 3.30 மணிக்கு நிறைவடையும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Read More