தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, ஜனசேனா கட்சித் தலைவர் பவன் கல்யாண் தனது டுவிட்டர் பக்கத்தில் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில், தெலுங்கு, தமிழ் என இரு மொழிகளிலும் பதிவிட்டுள்ள பவன் கல்யாண், எந்த ஒரு கட்சியாக இருந்தாலும், ஆட்சிக்கு வர வேண்டுமென்றால் அரசியல் செய்ய வேண்டும்.
ஆனால், ஆட்சிக்கு வந்த பிறகு அரசியல் செய்யக் கூடாது என்பதை, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வார்த்தைகளால் அல்லாமல், செயல்பாடுகளால் செய்து வருவதாகப் பாராட்டியுள்ளார்.
மேலும், மு.க.ஸ்டாலினின் ஆட்சி நிர்வாகம் மற்றும் அரசின் செயல்பாடுகள், தமிழ்நாட்டிற்கு மட்டுமல்லாமல், நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் ஊக்கமளிக்கும் விதத்தில் உள்ளதாக புகழாரம் சூட்டியுள்ள பவன் கல்யாண், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.