இலங்கையில் அவசர நிலை பிரகடனம் : காரணம் என்ன?

SHARE

பொருளாதார நெருக்கடி, கொரோனா பரவல் போன்ற பல்வேறு காரணங்களால், இலங்கையில் அந்நாட்டு அதிபர் கோத்தபய ராஜபக்சே பொருளாதார அவசர நிலையை பிறப்பித்துள்ளார்.

கடந்த சில ஆண்டுகளாக இலங்கை பொருளாதாரம் நெருக்கடியை சந்தித்து வருகிறது. தற்போது கொரோனா பரவல் காரணமாக நாட்டின் முக்கியமான வருவாய்த் துறையான சுற்றுலாதுறை முடங்கியதால் இலங்கையின் பண மதிப்பு வெகுவாக சரிந்துள்ளது.

இதனால் உணவுப்பொருட்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அவற்றின் விலை உயர்ந்துள்ளது.

இந்த நிலையில், உணவுப்பொருட்களின் பதுக்கலை தடுக்கவும், அத்தியாவசிப் பொருட்களின் விலையை கட்டுப்படுத்த நாட்டில் பொருளாதார அவசர நிலையை இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே பிறப்பித்துள்ளார்.

இதன் மூலம், அரிசி, சர்க்கரை உள்ளிட்ட முக்கிய உணவுப்பொருட்களின் விலையை நியாயமான விதத்தில் பராமரிக்க முடியும் என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

மேலும் எரிபொருளை சிக்கனமாக உபயோகிக்கும்படி வாகன ஓட்டிகளை இலங்கை எரிசக்தித் துறை அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

யாழ்ப்பாணம் நூலகம் தீயிட்டு எரிக்கப்பட்ட 41ம் ஆண்டு நினைவேந்தல்

Admin

லாக்டவுனில் அதிகமாக ஆபாச படம் பார்த்த இளைஞர்கள் – அதிர்ச்சி தகவல்

Admin

செக் வைத்த லண்டன் நீதிமன்றம்.. வசமாக சிக்கிய மல்லையா!

Admin

பெயர் மாற்றம் செய்யப்படும் “ஆப்கானிஸ்தான்” -தாலிபான் அதிரடி அறிவிப்பு

Admin

அமெரிக்காவில் கருப்பினத்தவர் கொலை… ஆதாரம் கொடுத்த இளம்பெண்ணுக்கு உலகின் உயரிய ஊடக விருது!.

Admin

டிரம்புக்கு தடை: அதிரடியில் இறங்கிய பேஸ்புக்!

Admin

வாட்ஸப்பின் அடடே அப்டேட்!.

Admin

டெஸ்ட் தரவரிசைப் பட்டியல்: இந்திய கிரிக்கெட் அணி முதலிடம்

Admin

வெளியேறிய அமெரிக்கா கால்பதிக்கும் தாலிபன்கள்..யார் இந்த தாலிபான்கள் ? அவர்களின் நோக்கம் என்ன?

Admin

சீக்கிரமே ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறுங்கள் அதான் நல்லது: ஜோ பைடன் பேச்சு

Admin

சூயஸ் கால்வாயில் மீண்டும் சிக்கிய சரக்கு கப்பல்…!

Admin

மக்கள் பத்திரிகையாளர் டேனிஷ் சித்திக் கொல்லப்பட்டார்

Admin

Leave a Comment