Author: Admin

இறங்கினேன்… உடன் யாருமற்று, உதவி கேட்க மொழி தெரியாமல் நான் மட்டும் இந்த ஊரில். இனி நடக்கப்போகும் நல்லது கெட்டத்துக்கெல்லாம் நான் மட்டுமே காரணம்.

Read More

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் 3 முறை தற்கொலை செய்து கொண்டதாக நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு முதல்வர் வேட்பாளர் தொடங்கி எதிர்க்கட்சித் தலைவர் பதவி வரை இரட்டை தலைமைகளான ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இடையே மோதல் போக்கு நிலவி வருவதாக தகவல் வெளியானது. கட்சியை ஒற்றை தலைமையாக தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி முயற்சிகள் மேற்கொண்டு வருவதாகவும், அதற்கு ஓபிஎஸ் முட்டுக்கட்டையாக இருப்பதாகவும் வெளியான தகவல் அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனிடையே பிரபல ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ள திமுக ஆதரவாளரும் திராவிட இயக்கப் பேச்சாளருமான நாஞ்சில் சம்பத், சசிகலாவுடன் ஓ.பன்னீர்செல்வம் சென்று விடுவார் என தெரிவித்துள்ளார். சசிகலாவுக்கு எதிராக கட்சியில் தீர்மானம் நிறைவேற்றாதது, அவரை விமர்சிக்காதது என அனைத்தையும் சுட்டிக்காட்டியுள்ள அவர், இவையெல்லாம் ஓபிஎஸ் சசிகலாவிடம்…

Read More

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மீசையுடன் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. இசையுலகில் ஒரு சகாப்தம் என்று சொல்லும் அளவுக்கு ஆஸ்கார் விருது உள்ளிட்ட பல உயரிய விருத்துக்கு சொந்தக்காரரான இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் பெரும்பாலும் மீசையில்லாமலே அனைத்து இடங்களிலும் தோன்றுவார். இதனால் எப்போது பார்த்தாலும் அவர் சின்ன இளைஞரைப் போல் காணப்படுவார். தற்போது பார்த்திபனின் இரவின் நிழல், சிம்புவின் வெந்து தணியும் காடு என பல படங்களுக்கு இசையமைத்து ஏ.ஆர்.ரஹ்மான் வருகிறார். இதனிடையே துபாயில் இசையமைப்பு தொடர்பான வேலைகளுக்காக சென்றுள்ள ஏ.ஆர்.ரஹ்மான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், மீசையுடன் இருக்கும் போட்டோவை முதன்முறையாக பகிர்ந்துள்ளார். அந்த பதிவில் ஜூம் மீட்டிங் ஆப்பில் மீசையுடன் இருக்கும் போட்டோ…நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? என கேட்டுள்ளார்.இந்த போட்டோவை இதுவரை ஆறு லட்சத்திற்கும் அதிகமானோர் லைக் செய்துள்ளனர்.

Read More

கொசோவோ நாட்டில் இளைஞர் ஒருவரின் வயிற்றில் இருந்து அறுவை சிகிச்சை மூலம் செல்போன் அகற்றப்பட்டுள்ளது. கொசோவோ நாட்டின் பிரிஸ்டினா பகுதியைச் சேர்ந்த 33 வயது இளைஞர் ஒருவர் அங்குள்ள அவசர அவசரமாக மருத்துவமனைக்கு சென்று தான் செல்போனை வாயின் அருகே வைத்து பேசிக் கொண்டிருந்தபோது தவறுதலாக விழுங்கியதாக தெரிவித்துள்ளார். அவரின் பேச்சைக் கேட்டு அதிர்ந்த மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து அதனை அகற்ற முடிவு செய்தனர். உடனே அவருக்கு எக்ஸ்ரே மற்றும் எண்டோஸ்கோபி பரிசோதனை மேற்கொண்டு வயிற்றில் செல்போன் இருக்கும் இடம் துல்லியமாக கண்டறியப்பட்டது. அதேசமயம் வயிற்றுக்குள் சென்ற செல்போனின் பேட்டரி மற்றும் பிற பாகங்கள் தனியாக பிரிந்தும் கிடந்தது தெரிய வந்தது. கிட்டதட்ட 2 மணி நேரம் போராடி மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து அவரது வயிற்றில் இருந்த செல்போன் அகற்றப்பட்டது. இதுகுறித்து மருத்துவர் டெல்ஜாகு தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியே எடுக்கப்பட்ட செல்போனின் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். மேலும் பேட்டரி…

Read More

அமைச்சா் எஸ்.ரகுபதிக்கு சொந்தமான வீட்டில் சிபாரிசு செய்யுமாறு கேட்டு யாரும் வரவேண்டாம் என ஒட்டப்பட்டுள்ள அறிவிப்பு போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு அனைத்து துறைகளிலும் ஊழல் இல்லாமல் அனைத்து பணிகளும் வெளிப்படையாக நடைபெறும் என்று தெரிவித்திருந்தார். அதன்படி அனைத்து அமைச்சர்களும் அவர்களின் துறைகளில் வெளிப்படையாகவும், நேர்மையாகவும் செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். குறிப்பாக டெண்டர்கள்,அரசு பணிகளில் சேருவதற்கு யாருக்கும் சிபாரிசு செய்யக் கூடாது என கூறப்பட்டுள்ளது. இதனிடையே கடந்த ஜூன் 25ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் 38 மாவட்ட நீதிமன்ற வேலை வந்தாச்சு 3557 காலியிடம் அறிவிப்பு வெளியானது. அதனைத் தொடர்ந்து காலியாக உள்ள பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வைகடந்த மாதம் ஆயிரக்கணக்கானோர் எழுதினர். இந்நிலையில் நீதிமன்ற பணியாளர்கள் நியமனம் தொடர்பாக பரிந்துரை கடிதம் கோரி யாரும் வரவேண்டாம் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதியின் வீட்டு வாசலில் அறிவிப்பு ஒட்டப்பட்டுள்ளது. காலியாக உள்ள…

Read More

நீட் தேர்வை ஒத்திவைக்க கோரிய வழக்குகள் அனைத்தையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் இளங்கலை மருத்துவப் படிப்புக்களுக்கான நீட் தேர்வு வருகிற செப்டம்பர் 12 ஆம் தேதி நடைபெறும் என்று தேசிய தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது. விண்ணப்பங்கள் அனுப்பும் பணி கடந்த ஜூலை 13 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 14 ஆம் தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் அளிக்கப்பட்டது. கொரோனா காலம் என்பதால் மாணவர்களின் நலன் கருதி நீட் தேர்வு நடக்கும் நகரங்கள் எண்ணிக்கை 155 இல் இருந்து 198 ஆகவும் அதிகரிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. இதனிடையே சிபிஎஸ்இ தொடர்பான மற்ற தேர்வுகளும் அடுத்தடுத்து நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டதால் நீட் தேர்வு எழுதுவதில் மாணவர்களுக்கு குழப்பம் ஏற்படலாம் என கருதி நீட் தேர்வை ஒத்திவைக்க கோரி உச்சநீதிமன்றத்தில் பல்வேறு தரப்பில் இருந்து வழக்குகள் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரணை செய்த உச்சநீதிமன்ற நீதிபதிகள்…

Read More

இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 157 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. லண்டன் ஓவல் மைதானத்தில் செப்டம்பர் 2 ஆம் தேதி தொடங்கிய இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 191 ரன்களும், இங்கிலாந்து அணி 290 ரன்களும் எடுத்தன. பின்னர் 99 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சைதொடங்கிய இந்திய அணி 466 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் இங்கிலாந்து அணிக்கு 368 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதனையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி 4 ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 77 ரன்கள் எடுத்திருந்தது. இந்நிலையில் இன்று 5 வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடைபெற்றது. இரு அணிகளும் வெற்றிக்காக மல்லுக்கட்டிய நிலையில் இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சில் இங்கிலாந்து அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்து வந்தது. அந்த அணியில் அதிகப்பட்சமாக ஹசீப் ஹமீத்…

Read More

திருடர்கள் ஜாக்கிரதை என்ற நோட்டீசுக்கு கீழே உட்கார்ந்து கொண்டுதான் அந்த சிறுமி என்னிடம் சிப்ஸ் வேண்டுமா என்று கேட்டாள்

Read More

ஆப்கானிஸ்தானில் மீண்டும் உள்நாட்டுப் பயணிகள் விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது. அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேற தொடங்கிய நிலையில் அங்கு 20 ஆண்டுகளுக்கு பின் தாலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளனர். அவர்களது ஆட்சியில் உயிர்வாழ பயத்து ஏராளமான மக்கள் நாட்டை விட்டு வெளியேற தொடங்கியதால், 3 வாரங்களுக்கு முன் காபூல் விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது. இதனிடையே கடந்த ஆகஸ்ட் மாதம் 31 ஆம் தேதியுடன் அமெரிக்கப் படை உள்ளிட்ட வெளிநாட்டுப் படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து முற்றிலுமாக வெளியேறியது. இதனால் அங்கு மீண்டும் விமான சேவையைத் தொடங்க கத்தார் தொழில்நுட்பக் குழுவினரின் உதவியை தாலிபான்கள் கோரியிருந்தனர்.இந்நிலையில் உள்நாட்டுப் பயணிகள் விமான சேவை மீண்டும் தொடங்கியுள்ளது. காபூல் மற்றும் 3 முக்கிய நகரங்கள் இடையே விமானங்கள் இயக்கப்படுவதால் மீண்டும் ஆப்கானிஸ்தானில் இயல்பு நிலை திரும்பி வருகின்றது.

Read More

இந்தியாவிலேயே அதிக மொழிகள் பேசும் மாவட்டங்களின் பட்டியலில் பெங்களூரு முதலிடம் பிடித்துள்ளது. ப்ரூக்கிங்ஸ் நிறுவனத்தை சேர்ந்த மூத்த ஆய்வாளர் ஷாமிகா ரவி, இந்திய புள்ளியியல் நிறுவனத்தில் பணியாற்றும் பேராசிரியர் முடித் கபூர் ஆகியோர் இணைந்து இந்தியாவில் அதிக மொழிகள் பேசப்படும் நகரம் குறித்து ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர். இதில் 2011 ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, நாட்டில் அதிகமான மொழிகள் பேசப்படும் மாவட்டம் கர்நாடக மாநிலத்தின் தலைநகர் பெங்களூரு என தெரியவந்துள்ளது. அங்கு மொத்தமாக 107 மொழிகளை பேசும் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இதில் 22 இந்தியாவின் அலுவல் மொழிகளாக குறிப்பிடப்பட்டுள்ள மொழிகளாகும்.பெங்களூருவில் 44.62% மக்கள் கன்னடமும், 15% தமிழும், 14% தெலுங்கும், 12% உருதும், 6% இந்தியும் ,3% மலையாளமும், 2% மராத்தியும், 0.6% கொங்கனியும் பேசுகின்றனர். இதற்கு அடுத்தபடியாக நாகாலாந்தின் திமாபூர் மாவட்டத்தில் 103 மொழிகளும், அசாமின் சோனித்பூர் மாவட்டத்தில் 101 மொழிகளும் பேசப்படுகின்றது. குறைந்தபட்சமாக தமிழகத்தில்…

Read More