Author: Admin

ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் தலைமையில் அமைய உள்ள புதிய அரசுக்கு முகமது ஹசன் தலைமையேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 20 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் ஆப்கன் ராணுவ படைக்கு உதவி வந்த அமெரிக்க படை அந்நாட்டை விட்டு வெளியேறியது. இதனையடுத்து ஆப்கானிஸ்தானை தங்களின் கட்டுக்குள் கொண்டு வந்த தாலிபான்கள், ஆட்சியை கைப்பற்றின. ஆப்கன் முழுமையாக தாலிபான்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்து கிட்டதட்ட ஒரு வாரத்திற்கு மேல் ஆகியும் அங்கு புதிய அரசை அமைப்பதில் சிக்கல் நீடித்து வந்தது. இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் தலைமையில் அமைய உள்ள புதிய அரசின் தலைவராக முகமது ஹசன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தாலிபான் அரசின் துணை தலைவராக அப்துல் கனி பரதர் செயல்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே ஆப்கானிஸ்தானில் அமைந்திருக்கும் புதிய அரசாங்கத்தில் ஷரியா சட்டம் நிலைநாட்டப்படும் எனவும் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷரியா சட்டம் என்பது இல்லாமின் சட்ட அமைப்பு ஆகும்.

Read More

கவிஞர் புலமைப்பித்தன் மறைவுக்கு, தமிழ்நாடு முதலமைச்சர்‌ . மு.க.ஸ்டாலின்‌ அவர்களின்‌இரங்கல்‌ செய்தி வெளியானது. இதில், எம்.ஜி.ஆர் அவர்களுக்கு பக்கபலமாக விளங்கியவர் புலமைப்பித்தன் என்றும், அதிமுக தோழர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து மீண்டும் மீண்டும் நாகரிகமான அரசியலைக் கையாளுகிறார் மு.க.ஸ்டாலின் என்று கருத்துகள் சமூக வலைதளங்களில் உலவி வருகின்றன. இது தொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டதாவது: அ.தி.மு.க.வின்‌ முன்னாள்‌ அவைத்‌ தலைவரும்‌, கவிஞருமானபுலமைப்பித்தன்‌ அவர்கள்‌ உடல்நலக்‌ குறைவு காரணமாக மறைவுற்றார்‌ என்றசெய்தியறிந்து வருத்தமுற்றேன்‌. திராவிடக்‌ கொள்கைகளின்‌ மேல்‌ பற்றுகொண்டு, அரசியலில்‌ தீவிரமாகஇயங்கிய அவர்‌, எம்‌.ஜி.ஆர்‌. அவர்களுக்கு பக்கத்துணையாய்‌ விளங்கியவர்‌.அவர்‌ சட்ட மேலவை துணைத்‌ தலைவராகப்‌ பணியாற்றியவர்‌ என்பதும்‌தமிழ்நாடு அரசின்‌ பெரியார்‌ விருதினைப்‌ பெற்றவர்‌ என்பதும்‌ குறிப்பிடத்தக்கது. வயது மூப்பின்‌ காரணமாக மறைந்த அவரது பிரிவால்‌ வாடும்‌ அவரதுகுடும்பத்தினர்‌, நண்பர்கள்‌ மற்றும்‌ அ.தி.மு.க. தோழர்களுக்கு எனது ஆழ்ந்தஇரங்கலைத்‌ தெரிவித்துக்‌ கொள்கிறேன்‌.” திருமண நிதியுதவித் திட்டம்… அரசின் அரைகுறை அறிவிப்பா? கடந்தகால அரசியல்…

Read More

இந்திய கிரிக்கெட் அணி வீரர் ஷிகர் தவான், தனது மனைவி ஆயிஷா முகர்ஜியை விவாகரத்து செய்துள்ளதாக சமூகவலைதளபக்கத்தில் அறிவித்துள்ளார். கடந்த 2012 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய குத்துச்சண்டை வீராங்கனை ஆயிஷாவை, ஷிகர் தவான் திருமணம் செய்து கொண்டார். ஆயிஷா ஏற்கனவே திருமணமானவர். இந்நிலையில், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆயிஷா வெளியிட்டுள்ள பதிவில், 2-வது முறையாக விவாகரத்து செய்வதால் மிகுந்த வேதனை அடைந்துள்ளதாக பதிவிட்டுள்ளார். ஆயிஷாவுக்கு முதல் திருமணத்தில் பிறந்த இரு பெண் குழந்தைகளை ஷிகர் தவான் தத்து எடுத்த நிலையில், இத்தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தையும் உள்ளது குறிப்பிடத்தக்கது

Read More

பிரபல கவிஞரும், பாடலாசிரியருமான புலமைப்பித்தன் உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் இன்று காலமானார். 1968 ஆம் ஆண்டு எம்ஜிஆர் நடித்த குடியிருந்த கோயில் படத்தில் வரும் நான் யார் நீ யார் என்ற பாடல் மூலம் தமிழ் சினிமாவில் பாடலாசிரியராக அறிமுகமான புலமைப்பித்தன் சிவாஜி, ரஜினி, கமல் முதல் விஜய் விக்ரம், சூர்யா, விக்ரம் பிரபு, ஜெயம் ரவி உள்ளிட்ட தற்கால ஹீரோக்கள் வரை அனைவரது படத்திற்கும் பாடல்கள் எழுதியுள்ளார். முன்னாள் முதல்வர் எம்ஜிஆரால் தமிழக அரசின் அரசவை கவிஞராக நியமிக்கப்பட்ட புலமைப்பித்தன் சட்டமன்ற உறுப்பினர் குழுவின் துணைத் தலைவராகவும் பதவியில் இருந்துள்ளார்.85 வயதான அவருக்கு கடந்த வாரம் திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து சென்னை அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட புலமைப்பித்தனுக்கு செயற்கை சுவாசம் மூலம் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவரது உடல்நிலையை தொடர்ந்து டாக்டர்கள் குழு கண்காணித்து வந்த நிலையில் நேற்று சசிகலா நேரில் சந்தித்து…

Read More

சினிமாவில் நடிக்க விரும்புவது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல்.திருமாவளவன் வெளிப்படையாக கருத்து தெரிவித்துள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற மக்களவைத் தொகுதி உறுப்பினருமான தொல். திருமாவளவன் சமீபத்தில் நடத்திய போட்டோஷூட் மிகப்பெரிய அளவில் வைரலானது. இதனிடையே பிரபல ஊடகம் ஒன்றிற்கு அவர் பேட்டி அளித்துள்ளார். அதில் தன்னுடைய பிறந்த நாளையொட்டி புகைப்படங்கள் எடுக்க வேண்டும் என கட்சியினர் விருப்பப்பட்டதாகவும், தொடர்ந்து தொழில் முறை புகைப்படக்காரர்கள் மற்றும் கட்சியினர் வலியுறுத்தியதால் போட்டோ ஷூட்டிங்கிற்கு சென்றதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் திரைப்படங்கள் மூலமாக உங்களுடைய கொள்கைகளை மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பதற்கு ஏதாவது திட்டம் உள்ளதா? என கேட்கப்பட்ட கேள்விக்கு தன்னை 2 படங்களில் கெஸ்ட் ரோலில் கூட நடிக்க அழைத்தார்கள் என்றும், படப்பிடிப்பில் அவர்கள் சொல்லிக் கொடுத்தை செய்ததாகவும் திருமாவளவன் நினைவு கூர்ந்துள்ளார். இயக்குனர் களஞ்சியம் என்னை வைத்து படம் எடுப்பதாக கூறி தாடி வளர்க்கச் சொன்னார் என தனது…

Read More

மகாராஷ்டிராவில் கொரோனா 3வது அலை தொடங்கி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் மக்களிடையே பீதி ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் கடந்த 4 மாதங்களாக பெரும் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா 2வது அலை தற்போது தான் மெல்ல மெல்ல குறைந்து வரும் நிலையில் அக்டோபர் மாதங்களில் 3வது அலை பரவ வாய்ப்புள்ளதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்தியாவில் தற்போது பண்டிகை காலம் தொடங்கியுள்ளதால் கொரோனா தொற்றை கருத்தில் கொண்டு வீட்டிலேயே பொதுமக்கள் கொண்டாட வேண்டும் என மத்திய, மாநில அரசால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனிடையே மகாராஷ்டிராவில் கொரோனா தினசரி பாதிப்பு சுமார் 4 ஆயிரம் முதல் 5 ஆயிரமாக இருப்பதால் நோய்த்தொற்று விரைவில் கட்டுக்குள் வந்து விடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடந்த சில நாட்களாக பொதுமக்களுக்கு செய்யப்பட்ட பரிசோதனையில் பாதிப்பு சதவீதம் மெல்ல மெல்ல அதிகரித்து வருவது தெரிய வந்தது. இதனால் 3வது அலை உருவாகி விட்டதா என்ற அச்சம் ஏற்பட்ட நிலையில்,…

Read More

ஆப்கானிஸ்தானில் புதிய இடைக்கால அரசை தாலிபான்கள் அறிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறியதையடுத்து அங்கு தாலிபான்கள் 20 ஆண்டுகளுக்குப் பின் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளனர். இதனையடுத்து அங்கு புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கான பணியில் அவர்கள் ஈடுபட்டு வந்தனர். இந்தநிலையில் ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் தலைமையிலான அரசில் இடம் பெற்று உள்ளவர்கள் குறித்த விபரங்களை தாலிபான் அமைப்பின் தலைமை செய்தித் தொடர்பாளர் ஜபிஹூல்லா முஜாஹித் வெளியிட்டுள்ளார். அதன்படி பிரதமராக முல்லா முகமது ஹசன் அகுந்தும், துணை பிரதமராக முல்லா அப்துல் கனி பரதர் நியமிக்கப்பட்டு உள்ளார். அதேபோல் வெளியுறவுத் துறை அமைச்சராக அமீர் கான் முத்தாகியும், துணை வெளியுறவுத்துறை அமைச்சராக அப்பாஸ் ஸ்டானிக்ஜாயும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மேலும் ராணுவ அமைச்சராக முல்லா யாகூப்புக்கும், ஆட்சி அதிகாரத்தில் முக்கிய முடிவு எடுக்க, முல்லா முகமது ஹசன் அகுந்திற்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இவர்களின் பதவியேற்பு விழா எப்போது நடைபெறும், இவா்கள் எவ்வளவு காலம் பொறுப்பில் இருப்பாா்கள்…

Read More

கோவில் சொத்துக்களுக்கு உரிமையாளர் பூசாரியா? அல்லது தெய்வமா? என்ற வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடியான தீர்ப்பை வழங்கியுள்ளது. மத்தியப்பிரதேசத்தில் உள்ள கோவில் சொத்துக்களை பூசாரிகள் சட்ட விரோதமாக விற்பதை தடுக்கும் வகையில் வருவாய் பதிவேட்டில் இருந்து அவர்களின் பெயர்களை நீக்க வேண்டுமென நில வருவாய் சட்டத்தின் கீழ் அம்மாநில அரசு அரசாணை வெளியிட்டது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் மத்தியப்பிரதேச உயர்நீதிமன்றம் அந்த அரசாணையை ரத்து செய்தது. இதை எதிர்த்து மத்தியப்பிரதேச அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் ஹேமந்த் குப்தா, ஏ.எஸ். போபண்ணா அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், கோயிலை ஒட்டிய நிலத்திற்கான உரிமையாளரின் பெயர் குறிப்பிடும் இடத்தில் தெய்வத்தின் பெயரைத்தான் எழுத வேண்டும். கோயில் நிலங்களுக்கு அக்கோயிலில் இருக்கும் கடவுள்தான் சட்டப்பூர்வ உரிமையாளர் என தெரிவித்தனர். மேலும் பூசாரி என்பவர் கடவுளின் சொத்தை பராமரிக்கும் ஒரு மேலாளர் மட்டுமே.…

Read More

தமிழகத்தில் வீரபாண்டிய கட்டபொம்மன், மருது சகோதரர்கள் உள்ளிட்ட சுதந்திர போராட்ட வீரர்களுக்கும் அப்துல் கலாம் போன்ற தலைவர்களுக்கும் சிலை நிறுவப்படும் என சட்டப்பேரவையில் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்துள்ளர். தமிழக சட்டப்பேரவையில் இன்று பேசிய செய்தித் துறை அமைச்சர் மு.பெ சாமிநாதன் வீரபாண்டிய கட்டபொம்மன் மற்றும் மருது சகோதரர்களின் சிலைகள் சென்னை கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் அமைக்கப்படும் என தெரிவித்தார். மேலும், தென்னிந்தியாவின் ஜான்சி ராணி என்று அழைக்கப்பட்ட சுதந்திரப் போராட்ட வீராங்கனை அஞ்சலை அம்மாளுக்கு கடலூரிலும் சமூக சீர்திருத்தவாதி மூவலூர் ராமாமிர்தம் அம்மையாருக்கு மயிலாடுதுறையிலும் சிலை அமைக்கப்படும் என கூறினார். இந்தியாவின் முதல் பெண் எம்எல்ஏ முத்துலட்சுமி ரெட்டிக்கு புதுக்கோட்டையிலும், முன்னாள் அமைச்சர் நெடுஞ்செழியனுக்கு சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையிலும் சிலை நிறுவப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

Read More