- தமிழ்நாடு
- இந்தியா
- உலகம்
- அரசியல்
- நூல் அறிமுகம்
- சினிமா
- தமிழ்
- தொடர்கள்
- நலவாழ்வு
- உணவு
- வரலாறு
- வினோதங்கள்
- Public Post
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: Admin
தமிழில் விலங்குகளைக் குறிக்கும் சொற்களில் ஒன்று கால்நடை. இது பொதுவாக வீட்டு விலங்குகளான ஆடு, மாடுகளைக் குறிக்கப் பயன்படுகிறது. இந்த சொல்லைப் பயன்படுத்தும் சிலருக்கு ஒரு ஐயம் வரக் கூடும், ‘ஆடு மாடுகள் மட்டுமா காலால் நடக்கின்றன? மனிதனும் காலால்தானே நடக்கிறான்… மனிதனை ஏன் கால்நடை என்று சொல்வதில்லை?’ – என்று. இத்தனைக்கும் ஒருவர் நடந்து பயணம் செய்வதை ‘அவர் கால்நடையாக பயணித்தார்’ என்று சொல்வது உண்டு. ஆனால் ஏன் மனிதர்களைக் கால்நடைகள் பட்டியலில் சேர்ப்பது இல்லை?. இதற்கான விளக்கத்தை கிருபானந்த வாரியார் அவர்கள் ஒரு மேடையில் அளித்தார். அவரது விளக்கத்தின்படி, ஆடு, மாடுகளைப் போலவே மனிதனும் கால்நடையாக பயணிக்கக் கூடியவன். ஆனால் அவனுக்கு மேலும் இரண்டு வகையான நடைகள் உள்ளன. முதலாவது ‘நா நடை’ அதாவது பேச்சு நடை. இப்போதும் ஒருவர் பேசும்போது ‘உங்கள் நடை நன்றாக இருந்தது’ என்று பாராட்டப்படுவதைப் பார்க்கிறோம் அல்லவா, அந்த நடைதான் இது. இரண்டாவது…
கிராமத்துக்காரி – இது 90களின் உலகம். பகுதி 3: வேலு தாத்தா அபிநயா அருள்குமார் பகுதி 2 Link: கருத்த, ஒல்லியான தேகம், முறுக்கு மீசை, தலையில் முண்டாசு கூடவே அந்த வியர்வை வாசம்…எழுதும் போதும் மணக்குது எனக்கு..என் தாத்தன். ..வேலு ..ஊருக்கு வேலு அய்யா. அம்மாவின் அப்பா!. 8 வயது எனக்கு இருக்கும் அப்போது. “தாத்தோவ்” ” ஆயாலு”….எந்துச்சிட்டியா, ஓடியா…” முதல்நாள் இரவு பறித்து வந்த கோரைச் செடியைக் கொண்டு கூடை முடைந்து கொண்டிருந்தார் வேலு தாத்தா. நான் கண்ட கனவுகளை ,வெள்ளை நிறமாக வெளியுலகத்திற்கு காட்டிய அந்த உமிழ்நீர் கோட்டை அழித்துக்கொண்டே, “தாத்தா இது என்னா” ” கூட பின்னுறேன்” ”எதுக்கு?!” ”உன்ன இதுக்குள்ள போட்டு கவுக்க…” கேலியும் கிண்டலும் ஊரிப்போன மனிதன்…சிரிக்காமலே சிரிக்க வைப்பார்… இன்றைய வழக்கத்தில் சொல்லப்போனால் மனுசர் மரண கலாய் காலாய்ப்பார். “போயா கிழவா”.. ” ஹா ஹா….பல்ல விளக்கு ஓடு “ “இரு…
ஆண்களை அலறவிட்ட பக்கிங்ஹாம் அரண்மனை பகுதி 3: அல்லல்பட்ட அரசர்கள்இரா.மன்னர் மன்னன் பகுதி 2 Link: அரசர் நான்காம் வில்லியம்ஸ் பக்கிங்ஹாம் அரண்மனையில் குடியேறும் முன்பே இறந்துபோன நிலையில், 18ஆவது வயதில் மகாராணியாக முடிசூடிய விக்டோரியா பக்கிங்ஹாம் அரண்மனைக்கு இடம் மாறினார். பக்கிங்ஹாம் அரண்மனையில் மூன்றாம் ஜார்ஜ் அரசரின் மனைவி சார்லெட் வசித்தபோது எந்த பிரச்னையும் ஏற்படவில்லை. அதுபோல தனக்கும் எந்த பிரச்னைகளும் வராது என விக்டோரியா நம்பினார். ஆனால் அவரது நம்பிக்கைக்கும் மேலே பக்கிங்ஹாம் அரண்மனை அவருக்கு அள்ளிக் கொடுத்தது. பக்கிங்ஹாம் அரண்மனையில் கால் வைத்தது முதல் அடுத்த 63 ஆண்டுகள் 7 மாதங்களுக்கு அவர் எல்லா வளங்களும் நலங்களும் பெற்று ஆண்டார். உலக வரலாற்றில் ராணி விக்டோரியா ஆண்ட காலகட்டம் ‘விக்டோரியன் எரா’ என்றே அழைக்கப்படும் அளவுக்கு அவரது ஆட்சி உலகின் முக்கிய மையமாக இருந்தது. ஒரு கட்டத்தில் ஐரோப்பாவின் மிகப் பெரும்பாலான நாடுகளின் அரண்மனைகளின் மராராணி விக்டோரியாவின்…
கிராமத்துக்காரி – இது 90களின் உலகம். பகுதி 2. திருவிழாக்கு போனேன்!. அபிநயா அருள்குமார் பகுதி 1 Link : ”ஆயி(வட்டார வழக்கு)……மத்தியானத்துக்கு பள்ளிக்கூடம் விட்டாலும் விட்டுருவோ!” ”ஏன் பெரியப்பா?” என்றபடி, பழைய சாதத்தை , எருமைத் தயிரில் முக்கி , கொஞ்சம் சுட்ட கருவாட்டை உதவியாக வைத்து வயிற்றுக்காக வழி அனுப்பிக் கொண்டிருந்தேன்!. இன்னைக்கு கரம்பயத்தாவுக்கு (கரம்பயம் மாரியம்மன் கோவில்) சின்ன திருவுழாவுல ஆயி!!. இரண்டு பிடி சாதத்தை ஒரே வாயில் குதப்பிக்கொண்டு, ”வுவ்வு, வுவ்வு ….வ்வ்வ்” என்றேன்!. ”சோத்த முழுங்கிட்டு பேசுப்பா!” என்றார் பெரியப்பா சிரித்தப்படி (பெரியப்பாவுக்கும், பெரியம்மாவுக்கும் இரண்டு மகன்கள் இருக்காங்க. ஆனா தங்கச்சி மகளான என் மீது எப்போதுமே ஒரு அலாதிப் பிரியம். அதனால ”அவளுக்கு விவரம் தெரியுற வரைக்கும் எங்க கூட இருக்கட்டும்” என அம்மாவிடம் பேசி,ச மாதனம் செய்து ஊருக்கே அழைச்சுட்டு வந்துட்டாங்க.) கடைவாயில் ஒட்டியிருந்த சோற்றுக்கு நாக்கால் விடுதலை அளித்து பின்பு…
மலர்களின் பெயரைப் பொதுவாக பெண்குழந்தைகளுக்குச் சூட்டுவது தமிழர்களின் வழக்கம். முல்லை, தாமரை, ரோஜா, அல்லி – இதெல்லாம் பெண் குழந்தைகளின் பெயர்களாக உள்ளன. தமிழகத்தில் மதுரை, தேனி மாவட்டங்களில் மட்டும் ஆண் குழந்தைகளுக்கு ரோசாப்பூ மற்றும் ரோசாப்பூ துரை என்ற பெயர்கள் வைக்கப்படுகின்றன. இது ஏன்?. இங்கு ஆண் குழந்தைகளின் பெயரில் உள்ள ரோசாப்பூ – என்பது ரோஜா மலரைக் குறிக்கும் சொல் அல்ல. அது ‘ஜோசப்’ – என்ற பெயரைக் குறிக்கக் கூடியது!. ஜார்ஜ் ஜோசப் துரை – என்ற ஒரு நபரின் பெயரை 19ஆம் நூற்றாண்டின் மக்கள் உச்சரிக்கத் தெரியாமல் ரோசாப்பூ அல்லது ரோசாப்பூ துரை – என்று அழைத்தனர். இன்றும் அவரின் நினைவாகவே குழந்தைகளுக்கு ரோசாப்பூ அல்லது ரோசாப்பூ துரை ஆகிய பெயர்களை வைத்தும் வருகின்றனர். யார் இந்த ஜார்ஜ் ஜோசப்? மதுரை, தேனி மக்கள் இவரை நினைவுகூரக் காரணம் என்ன?. 1887ல் கேரளாவில் ஒரு வசதியான…
அபிநயா அருள்குமார் கிராமத்துக்காரி – இது 90களின் உலகம். பகுதி1: பிடிக்காத பழம் ”ஹே..! ஹே சுகந்தி மணி எத்தனல..?” ”3 மணி 04 நிமிசம்ல !.“ – சிங்கப்பூர் ஆத்தா வாங்கி வந்த, பிங்க் பொம்மை போட்ட டிஜிட்டல் கடிகாரத்தை பார்த்தபடி மணி சொன்னாள் சுகந்தி. சற்று நேரத்தில். ”சுகந்தி இப்போ எவ்வளவுல?” என்றேன் கைகளில் முதல் நாள் இரவு மெனக்கட்டு போட்ட நெயில் பாலிஷ உதிர்த்தபடியே… ”ஏல! 3:07 தான்ல ஆவுது! எதுக்குல ஓயாம அதையே கேட்குற?” ”ஒன்னும்மில்லல…..சும்மாத்தான்” – என கலர் கலராக படம் போட்டிருக்கும் மூன்றாம் வகுப்பு ஆங்கிலப் புத்தகத்தை திறந்து, பார்த்துக்கொண்டே ஏங்கிக்கொண்டிருந்தேன் நான்! அதே சமயம், நேற்று வயல்காட்டில் தான் கொள்ளிவாய் பிசாசை பார்த்ததாக கூட இருக்கும் சக தோழிகளிடம் சுவாரசியம் குறையாமல் கைகளை ஆட்டி கதை அளந்து கொண்டிருந்தாள் என்நெருங்கிய தோழி சுகந்தி!. நல்ல கதை ஆசிரியராகும் திறமை அந்த வயதில் …
காவிரி டெல்டா பகுதியில் உள்ளவர்கள் வெள்ளைக் காகிதத்தை டெம்மி பேப்பர் என அழைக்கிறார்கள். சிலர் டிம்மி பேப்பர் என்றும் அழைப்பது உண்டு. காவிரி டெல்டா பகுதியைச் சேர்ந்த திரைப்பட இயக்குநரான லிங்குசாமி இயக்கிய ஆனந்தம் திரைப்படத்தில் மளிகைக் கடைக்கு வரும் ஒருவர் டெம்மி பேப்பரை கேட்டு வாங்கிக் கொண்டு போவதாக ஒரு பின்னணிக் காட்சி இருக்கும். வெள்ளைக் காகிதத்தை சென்னை உள்ளிட்ட இடங்களில் ஒயிட் பேப்பர் அல்லது ஒயிட் ஷீட் – என்றுதான் பொதுவாக அழைக்கிறார்கள், டெல்டா பகுதியில் அது எப்படி டெம்மி பேப்பரானது?. டென்மார்க் நாட்டில் இருந்து தமிழகத்திற்கு வந்த சீகன் பால்கு 1715ஆம் ஆண்டில் ஜெர்மனியில் இருந்து ஒரு அச்சு எந்திரத்தை தரங்கம்பாடிக்கு வரவழைத்தார். அதன் மூலம் இந்தியாவின் மிக முக்கிய அச்சுக்கூடமாக தரங்கம்பாடி ஆனது. அதன் பின்னர் தரங்கம்பாடியை சுற்றி இருந்த பகுதிகளில் அச்சுக் கூடங்கள் பெருகின. இந்த அச்சுக் கூடங்களில் பணியாற்றிவர்களில் பெரும்பாலானவர்கள் அருகில் இருந்த…
பட்டாணி குடும்பத்தைச் சேர்ந்த நிலத்தடியில் காய்க்கும் தாவரமான நிலக்கடலையை ஆதி இந்தியர்கள் உண்டது இல்லை. தென்னமெரிக்க நாடான பெரு-வில் சுமார் 3000 ஆண்டுகளுக்கு முன்பே உணவாகப் பயன்படுத்தப்பட்ட இந்த நிலக் கடலையானது தமிழகத்திற்குள் பிலிப்பைன்ஸ் நாட்டினரின் தாக்கத்தால் நுழைந்தது!. பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகரமான மணிலாவில் விளைந்து தமிழகத்திற்குள் வந்த நிலக் கடலைகளை மக்கள் மணிலா அல்லது மணிலா கொட்டை என்ற பெயர்களில் அழைத்தனர். மணிலா கொட்டை என்ற சொற்கள்தான் திரிந்து இப்போது மல்லாட்டை என வழங்குகின்றது. மணிலா என்ற சொல் பிலிப்பைன்ஸ் தலைநகரமான மணிலாவுடன் தொடர்புடையதுதான் என்று காட்டக் கூடிய இன்னொரு சான்று ‘மணிலா கயிறு’ ஆகும். ஆங்கிலேயர் காலத்தில் இந்தியாவில் தூக்கு தண்டனைக்கான கயிறுகள் பிலிப்பைன்ஸ் தலைநகரான மணிலாவில் இருந்துதான் இறக்குமதி செய்யப்பட்டன. தற்போது இந்தக் கயிறுகள் பிஹாரின் பக்ஸர் சிறையில் தயாரிக்கப்பட்டாலும் தூக்குக் கயிறை ‘மணிலா கயிறு’ என்று அழைக்கும் வழக்கம் மட்டும் இந்தியாவில் இன்னும் மாறவில்லை. இன்னொரு…
தமிழ்நாட்டில் சில இடங்களில் சீனி அல்லது வெள்ளைச் சர்க்கரையை அஸ்கா என்று அழைக்கின்றனர். எங்கிருந்து வந்தது இந்தச் சொல்?. ஆசியாவின் முதல் வெள்ளைச் சர்க்கரை ஆலையானது கி.பி.1824ஆம் ஆண்டில் ஒரிசா மாநிலம் கஞ்சம் வட்டத்தில் உள்ள அஸ்கா என்ற நகரத்தில் நிறுவப்பட்டது. அதுவரை பழுப்பு நிறம் மற்றும் பொன்னிறத்திலான சர்க்கரைகளை மட்டுமே உண்டு வந்த மக்கள் அஸ்காவில் உருவான வெள்ளை நிறச் சர்க்கரையைப் பார்த்தபோது ‘அஸ்கா சர்க்கரை’ என்றே அதை அழைத்தனர். பின்னர் அஸ்கா என்ற சொல்லே வெள்ளைச் சர்க்கரையைக் குறிக்கும் சொல்லாக மாறிப் போனது. இதனால் தமிழ் மட்டுமின்றி இன்னும் பல்வேறு மொழிகளிலும் அஸ்கா என்ற சொல் வெள்ளைச் சர்க்கரையைக் குறிக்கும் சொல்லாக இன்றும் புழங்குகின்றது. அஸ்காவின் வருகை காரணமாக ஒரிஸா மக்கள் அதிக இனிப்பு சாப்பிடுபவர்களாக ஆனார்கள். பெரும்பாலான மக்கள் ஜிலேபியை காலை உணவாக்கிக் கொண்டார்கள். பல்வேறு உணவுப் பழக்க வழக்கங்கள் அஸ்காவால் அழிந்தன. இன்று இந்திய நாடானது…
வெளியீட்டை நெருங்கியுள்ள ஒன் பிளஸ் 9 புரோ திறன்பேசியின் சிறப்பம்சங்கள் குறித்த விவரங்கள் வெளியாகி உள்ளன. ஒன் பிளஸ் நிறுவனத்தின் அடுத்த ஆண்ட்ராய்டு திறன்பேசியான ஒன் பிளஸ் 9 புரோ வரும் ஏப்ரல் மாதம் 1ஆம் தேதி முதல் இந்தியாவில் விற்பனைக்கு வருகின்றது. 183 கிராம் எடை கொண்ட இந்த ஒன் பிளஸ் 9 புரோ திறன் பேசியின் முக்கிய அம்சங்கள் என்னென்ன? – பார்ப்போம்… இதன் திரை 6.55 அங்குல அளவுள்ளது. முழு ஹெச்.டி.தரத்திலான புளூயட் எல்இடி திரை இது. பிக்சல்களில் இதன் பரப்பை 1,080×2,400 பிக்சல்கள் என்று கூறலாம். இதன் திரை விகிதம் 20: 9 ஆகும். கொரில்லா கிளாஸ் உள்ளதால் திரை எளிதில் உடையாது. இது 8ஜி.பி ராம் மற்றும் 12 ஜி.பி. ராம் ஆகிய இருவகை ராம்களோடு உருவாக்கப்பட்டுள்ளது.128 ஜி.பி மற்றும் 256 ஜி.பி ஆகிய இரண்டு வகை நினைவகங்களும் உள்ளன. ஆண்ட்ராய்டு 11யை அடிப்படையாகக்…
