ஒன் பிளஸ் 9 புரோ திறன்பேசியின் சிறப்பம்சங்கள் என்னென்ன?

SHARE

வெளியீட்டை நெருங்கியுள்ள ஒன் பிளஸ் 9 புரோ திறன்பேசியின் சிறப்பம்சங்கள் குறித்த விவரங்கள் வெளியாகி உள்ளன.

ஒன் பிளஸ் நிறுவனத்தின் அடுத்த ஆண்ட்ராய்டு திறன்பேசியான ஒன் பிளஸ் 9 புரோ வரும் ஏப்ரல் மாதம் 1ஆம் தேதி முதல் இந்தியாவில் விற்பனைக்கு வருகின்றது. 183 கிராம் எடை கொண்ட இந்த ஒன் பிளஸ் 9 புரோ திறன் பேசியின் முக்கிய அம்சங்கள் என்னென்ன? – பார்ப்போம்…

இதன் திரை 6.55 அங்குல அளவுள்ளது. முழு ஹெச்.டி.தரத்திலான புளூயட் எல்இடி திரை இது. பிக்சல்களில் இதன் பரப்பை 1,080×2,400 பிக்சல்கள் என்று கூறலாம். இதன் திரை விகிதம் 20: 9 ஆகும். கொரில்லா கிளாஸ் உள்ளதால் திரை எளிதில் உடையாது. 

இது 8ஜி.பி ராம் மற்றும் 12 ஜி.பி. ராம் ஆகிய இருவகை ராம்களோடு உருவாக்கப்பட்டுள்ளது.128 ஜி.பி மற்றும் 256 ஜி.பி ஆகிய இரண்டு வகை நினைவகங்களும் உள்ளன.

ஆண்ட்ராய்டு 11யை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட ஆக்சிஜன் ஓஎஸ் 11 இயங்கு தளத்தில் இந்த திறன் பேசி இயங்கும்.

பின்புறம் உள்ள கேமரா 48 மெகா பிக்சல் திறனுள்ளது. இத்தோடு ஒரு 50 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் லென்ஸ்சும், 2 மெகா பிக்சல் மோனோகிராம் சென்சாரும் உள்ளன. இதன் செல்ஃபி கேமரா 16 மெகா பிக்ஸல் திறனுள்ள சோனி ஐஎம்எக்ஸ் 471 செல்பிஃ கேமரா ஆகும்.

4500 எம்ஏஹெச் திறன் கொண்ட பேட்டரி இதில் உள்ளது. பாஸ்ட் சார்ஜ் செய்யவும் இந்தக் கைபேசி ஒத்துழைக்கும். 

டால்பி அட்மோஸ் அம்சம் கொண்ட டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் இதில் உள்ளன. அதனால் பாட்டு கேட்கும் அனுபவமும் சிறப்பாக இருக்கும்.

5ஜி, 4ஜி ஆகிய இரண்டுவகை அலைக்கற்றைகளிலும் இதனால் இயங்க முடியும். இவை தவிர வைபை 6, புளூடூத் 5.2 போன்ற அம்சங்களும் உள்ளன.

நமது நிருபர்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

வெறும் ரூ.500,700க்கு ஸ்மார்ட்போன் வாங்கலாம்- ஜியோவின் அடுத்த அதிரடி

Admin

இழுத்து மூடப்படும் வோடஃபோன் -ஐடியா கம்பெனி: பரிதவிக்கும் 27 கோடி வாடிக்கையாளர்கள்

Admin

தலைமறைவாக இருந்த யூடியூபர் மதன் கைது

Admin

எலான் மஸ்க் செய்த வேலையால் தமிழக நிறுவனத்திற்கு ரூ. 7 கோடி லாபம்?

Admin

விற்பனையில் அசத்தும் போக்கோ ஸ்மார்ட்போன்… என்ன ஸ்பெஷல்?

Admin

இனி சூப்பராக போட்டோ எடுக்கலாம்… செல்ஃபிக்கு எதிராக இணையத்தில் வைரலாகும் புதிய செயலி

Admin

வாட்ஸப்பின் அடடே அப்டேட்!.

Admin

20 லட்சம் கணக்குகளை முடக்கிய வாட்ஸ்அப் ஏன் தெரியுமா?

Admin

அதிபராக இருந்தால் என்ன தப்புதான் : அதிரடி நடவடிக்கை எடுத்த யூடியூப்!

Admin

COWIN இணையத்தில் தமிழ் மொழி சேர்ப்பு..! ஆனாலும் 12ஆம் இடம்தான்!.

Admin

கையெழுத்து போட்ட ஜோபைடன் ..அமெரிக்காவில் டிக் டாக் தடை இனி இல்லை!

Admin

முதல்வரிடம் பொதுமக்கள் புகார் அளிக்க தனி இணையதளம் தொடக்கம்!

Admin

Leave a Comment