ரோசாப்பூ என்று ஏன் ஆண் குழந்தைகளுக்குப் பெயர் வைக்கப்படுகின்றது?

SHARE

மலர்களின் பெயரைப் பொதுவாக பெண்குழந்தைகளுக்குச் சூட்டுவது தமிழர்களின் வழக்கம். முல்லை, தாமரை, ரோஜா, அல்லி – இதெல்லாம் பெண் குழந்தைகளின் பெயர்களாக உள்ளன.

தமிழகத்தில் மதுரை, தேனி மாவட்டங்களில் மட்டும் ஆண் குழந்தைகளுக்கு ரோசாப்பூ மற்றும் ரோசாப்பூ துரை என்ற பெயர்கள் வைக்கப்படுகின்றன. இது ஏன்?.

இங்கு ஆண் குழந்தைகளின் பெயரில் உள்ள ரோசாப்பூ – என்பது ரோஜா மலரைக் குறிக்கும் சொல் அல்ல. அது ‘ஜோசப்’ – என்ற பெயரைக் குறிக்கக் கூடியது!. ஜார்ஜ் ஜோசப் துரை – என்ற ஒரு நபரின் பெயரை 19ஆம் நூற்றாண்டின் மக்கள் உச்சரிக்கத் தெரியாமல் ரோசாப்பூ அல்லது ரோசாப்பூ துரை – என்று அழைத்தனர்.

இன்றும் அவரின் நினைவாகவே குழந்தைகளுக்கு ரோசாப்பூ அல்லது ரோசாப்பூ துரை ஆகிய பெயர்களை வைத்தும் வருகின்றனர். யார் இந்த ஜார்ஜ் ஜோசப்? மதுரை, தேனி மக்கள் இவரை நினைவுகூரக் காரணம் என்ன?.

1887ல் கேரளாவில் ஒரு வசதியான குடும்பத்தில் பிறந்த ஜார்ஜ் ஜோசப், சென்னையில் பட்டம் படித்து, இங்கிலாந்தில் வழக்கறிஞர் பணிக்கான பாரிஸ்டர் படிப்பில் சேர்ந்தார். பின்னர் அவரது படிப்புக்கு ஏற்ற அரசு வேலையும் கிடைத்தது. ஆனால், சுதந்திர தாகத்தால் வேலையை உதறிய அவர், தனது சட்ட அறிவைக் கொண்டு சாமானிய மக்களுக்கு உதவ நினைத்தார்.

அதற்காக முதலில் சென்னைக்கு வந்தவர் பின்னர் நிரந்தரமாக மதுரையில் தங்கி மக்களுக்காகப் பாடுபட்டார். ஆங்கில அரசு மதுரையில் கைநாட்டுச் சட்டம் மூலம் மக்களுக்கு இழைத்த அநீதிகளுக்கு எதிராக இவர் சட்டப் போராட்டம் நடத்தினார்.

மேலும் மதுரையில் இயங்கிய நூற்பாலைகளில் படிப்பறிவற்ற மக்கள் கொத்தடிமைகளைப் போல நடத்தப்பட்டதைக் கண்டு, அவர்களுக்கு சங்கம் அமைத்து சரியான ஊதியம் கிடைக்கச் செய்தார்.

இவற்றின் காரணமாகவே மதுரை மக்கள் இன்றும் இவரது பெயரை நன்றியோடு நினைவு கூர்கிறார்கள். இந்திய வரலாற்றின் பல்வேறு இடங்களில் காணப்படும் பெயர் ஜார்ஜ் ஜோசப் அவர்களுடையது.

ஒருமுறை மகாத்மா காந்தி மதுரைக்கு வந்திருந்தபோது, அங்கிருந்த ஒரு விவசாயி அணிய சட்டை இல்லாமல் பணியாற்றுவதைப் பார்த்து, அங்குதான் மேல் சட்டை அணியும் தனது வழக்கத்தை நிறுத்தினார்.

அந்த சம்பவத்தின் போது, காந்தியின் உடனாக இருந்தவர், விவசாயிகளின் துயரத்தை காந்திக்கு விரிவாகச் சொன்னவர் இந்த ஜார்ஜ் ஜோசப் அவர்கள்தான்.

மேலும், இந்திய சுதந்திரப் போராட்டம், கேரளத்தில் நடந்த வைக்கம் போராட்டம், ஹோம்ரூல் இயக்கம் உள்ளிட்ட அனைத்திலும் இவர் பங்கேற்றார். ஆங்கிலேயர்களுக்கு எதிராக 5 இதழ்களில் கட்டுரைகளை எழுதினார்.

சில இதழ்களில் ஆசிரியராகவும் பணி செய்தார். ஆங்கிலேயர்களுக்கு எதிரான கட்டுரைகளுக்காக மன்னிப்பு கேட்க மறந்து சிறைக்கும் சென்றார். காந்தியடிகள், மோதிலால் நேரு, ஜவஹர்லால் நேரு, பெரியார் உள்ளிட்ட பல பெரிய தலைவர்களுக்கு நண்பராக இருந்த இவர் 1938ல் மறைந்தார். 

இன்றும் ஜூன் 5 அன்று இவரது பிறந்தநாள் மதுரை, தேனி பகுதிகளில் கொண்டாடப்படுகின்றது. இந்திய அரசியலில் இவர் செய்த அளப்பரிய பணிகளை பிற பகுதி மக்கள் மறந்த நிலையில், இவரது பெயரை உச்சரிக்கவும் தெரியாத மதுரை, தேனி பகுதி மக்கள் இன்றும் இவரை நினைவுகூர்வது தமிழர்களின் நன்றியறிதலுக்கு சான்றாக உள்ளது.

இரா.மன்னர் மன்னன் 


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

கீழடியின் கொடை குறைவதில்லை : அமைச்சர் தங்கம் தென்னரசு உருக்கம்

Admin

வேர்ச்சொற் கட்டுரைகள் – நூல் அறிமுகம்…

கோவின் செயலி ஹேக் செய்யப்பட்டதா..? மத்திய அரசு விளக்கம்

Admin

நிலக்கடலை ஏன் மல்லாட்டை என்று அழைக்கப்படுகிறது?

Admin

உலகின் மிகச் சுவையான மாம்பழ வகை எது?

வெள்ளைக் காகிதம் ஏன் டெம்மி பேப்பர் என அழைக்கப்படுகின்றது?

Admin

சர்க்கரை ஏன் அஸ்கா என்று அழைக்கப்படுகிறது?

Admin

வயிறு எரிவதால் அகழாய்வினை எதிர்த்து எழுதுகிறார்கள் – அமைச்சர் தங்கம் தென்னரசு

Admin

கீழடி அகழாய்வில் கண்டறியப்பட்ட சிவப்பு நிற பானைகள்

Admin

தமிழ்நாட்டை காவிமயமாக்குவதுதான் திராவிட மாடலா? சீமான் காட்டம்

Admin

காமத்தை விட அழகானது கண்ணியம் – ஓவியர் இளையராஜாவின் ஓவியங்கள் தொகுப்பு.

ஓரு அடி ஆழத்தில் 3000 ஆண்டுகள் பழமையான தங்கக் காதணி!. ஆதிச்சநல்லூரில் அடுத்த ஆச்சரியம்!.

Leave a Comment