Author: Admin

திடீரென்று அதிகமானோர் இ- பதிவு செய்ய முயன்றதால் தமிழக அரசின் இ- பதிவு இணையதளம் முடங்கியது. கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது. தற்போது பரவல் குறைய தொடங்கியதால், ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் மளிகை கடைகளை திறக்கவும், வெளி இடங்களுக்கு செல்ல இ- பதிவு செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று காலை முதல் ஒரே நேரத்தில் அதிகமானோர் இ-பதிவு செய்ய இணையதளத்தில் ஏராளமானோர் பதிவு செய்ய தொடங்கியதால் இணையதளம் முடங்கியது. இதனால் ஏராளமானேர் ஏமாற்றமடைந்தனர். பின்னர் சிறிது நேரத்தில் இணையதளத்தில் உள்ள பிரச்சினை சரிசெய்யபட்டு செயல்பாட்டிற்கு வந்தது.

Read More

நைஜீரியாவில் ட்விட்டருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதையடுத்து அங்கு “கூ” செயலி தனது பயன்பாட்டை விரிவுபடுத்தியுள்ளது. ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவின் அதிபராக முகமது புஹாரி பதவி வகிக்கிறார்.சமீபத்தில் இவர் நைஜீரியாவில் 1967 முதல் 70 வரை நடைபெற்ற உள்நாட்டு சண்டையை மேற்கோள் காட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டிருந்தார். அவரது இந்த கருத்து வன்முறையை தூண்டும் வகையில் இருப்பதாக கூறி இந்த பதிவை ட்விட்டர் நிறுவனம் நீக்கியது. இதையடுத்து இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நைஜீரியாவில் ட்விட்டருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இந்தியாவைச் சேர்ந்த சமூக வலைத்தள நிறுவனமான கூ, நைஜீரியாவில் கால்பதித்து, ட்விட்டர் போன்ற தகவல் தொடர்பு சேவையை வழங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

Read More

பீட்சா, பர்கர், ஸ்மார்ட் போன்களை வீடுகளுக்கு சென்று விநியோகம் செய்யும் போது ரேஷன் பொருட்களை ஏன் வீடுகளுக்கு சென்று வழங்கக்கூடாது என மத்திய அரசுக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கேள்வி எழுப்பியுள்ளார். வீடுகளுக்கு நேரடியாக ரேஷன் பொருட்களை விநியோகம் செய்யும் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசிடம் அனுமதி கேட்டது டெல்லி அரசு. ஆனால் மத்திய அரசு 5 முறை இத்திட்டத்தை மறுத்து விட்டது. இந்த நிலையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வீடுகளில் ரேஷன் பொருட்களை வழங்கும் திட்டத்திற்கு மத்திய அரசு தடை விதித்தது ஏன் என கேள்வியெழுப்பியுள்ளார். மேலும், கொரோனா பரவல் உள்ள இந்த சமயத்தில் இந்த திட்டத்தை நாடு முழுவதும் அமல்படுத்த வேண்டும். இல்லாவிட்டால், தொற்று பரவும் மையமாக ரேசன் கடைகள் மாறும் என தெரிவித்தார் முதல்வர். மேலும் பீட்சா, ஸ்மார்ட் போன்கள் மற்றும் துணிகள் வீடுகளுக்கு சென்று விநியோகம் செய்யும் போது ரேஷன் பொருட்களை ஏன்…

Read More

சிறுமி வன்கொடுமை தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர் பியர்ல் வி பூரிக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக நடிகை யாஷிகா ஆனந்த் ட்விட்டரில் கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார். சிறுமி ஒருவரை ஐந்து நபர்களுடன் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாக நடிகர் பியர்ல் வி பூரி உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் யாஷிகா ஆனந்த் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “பியர்ல் வி பூரி மிகவும் மென்மையான மனிதர். எனக்குத் தெரியும் அவர் ஒரு கனிவான மனிதர். உண்மைக்காக காத்திருப்போம். எனது நண்பர் திரும்பி வருவார்“ என தெரிவித்துள்ளார். நாகினி தொடரில் நடித்ததன் மூலம் பியர்ல் வி பூரிபிரபலமானார் என்பது குறிப்பிடத்தக்கது. மூவேந்தன்

Read More

வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள சிங்கங்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியான நிலையில் முதல்வர் ஸ்டாலின் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசிய தேவைக்கு உரிய இடங்களைத் தவிர மற்ற இடங்களான உடற்பயிற்சி கூடங்கள், திரையரங்குகள், பூங்காக்கள் போன்றவை மூடப்பட்டன. அந்த வகையில் சென்னை வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா கால வரையறையின்றி மூடப்பட்டது. பூங்கா ஊழியர்கள் மட்டுமே உள்ளே சென்றுவர அனுமதி அளிக்கப்பட்டது. இதையடுத்து வனத்துறை அதிகாரிகள் வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஆய்வு செய்தனர். தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மருத்துவர்கள், பூங்கா மருத்துவர்கள் உள்ளிட்டோர் விலங்குகளை பரிசோதித்தனர். பூங்காவில் உள்ள சிறுத்தை, புலி சிங்கம் உள்பட விலங்குகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், 9 சிங்கங்களுக்கு கொரோனா இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் வண்டலூர் பூங்காவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் அங்கு ஆய்வு…

Read More

ஒன்பிளஸ் நிறுவனம் புதிய ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5ஜி ஸ்மார்ட்போன் மாடலை ஜூன் 10 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இந்திய மொபைல் சந்தையில் குறிப்பிடத்தக்க இடத்தை பெற்றுள்ள ஒன் பிளஸ் நிறுவனம் அடுத்தாக நோர்ட் சிஇ 5ஜி ஸ்மார்ட்போனை தயாரித்து உள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 48எம்பி ரியர் கேமரா, 64எம்பி செல்பி கேமரா, குவால்காம் ஸ்னாப்டிராகன் 750ஜி 5ஜி சிப்செட் பிராஸசர், 6ஜிபி/8ஜிபி ரேம், 128ஜிபி/256ஜிபி மெமரி வசதி, 4500 எம்ஏஎச் பேட்டரி ஆகியவை இடம்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான முன்பதிவு ஜூன் 11ஆம் தேதி காலை தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ள நிலையில் இதன் விலை விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.- மூவேந்தன்

Read More

ஐபிஎல் தொடரின் மாதிரியை வைத்து பிஎஸ்எல் தொடரை முடிக்க பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளது. கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ள பிஎஸ்எல் தொடரை மீண்டும் நடத்தி முடிக்க பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கடும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. அதாவது எஞ்சிய போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில் ஐபிஎல் தொடரை பிசிசிஐ நடத்த கையிலெடுத்த முறைகளான பயோபபுள் முறை, துபாயில் போட்டிகளை நடத்துவது என அனைத்து வழிமுறைகளையும் பாகிஸ்தான் பின்பற்றி வருவது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதில் காமெடியான விஷயம் என்னவென்றால் இந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் ஐசிசி உலகக்கோப்பை தொடரை நடத்துவதற்கான ஐடியாவை கொடுக்கும் என தெரிவித்தது தான். இதனை இணையத்தில் பலரும் விமர்சித்து வருகின்றனர்.

Read More

மகாராஷ்டிராவில் சிவசேனா கூட்டணியினை கலைத்துவிட்டு ஆட்சியை பிட்டிக்க வேண்டுமென பாஜக அதிகார வெறி பிடித்து திரிவதாக அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே குற்றம் சாட்டியுள்ளார். மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே இணைய வழியாக செய்தியாளர்களை சந்தித்தார். அதில், கொரோனா காலத்தில் மக்களின் உயிர் தான் முக்கியம். தற்போது மகாராஷ்டிர மாநிலம் கொரோனா தொற்றிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகிறது. ஆனால் , இந்த கொரோனா காலத்திலும் சில கட்சிகள் மாநில அரசிற்கு நெருக்கடி கொடுத்து ஆட்சியை கவிழ்க்க நினைக்கின்றன – என்று அவர் கூறினார். இவ்வாறுஅதிகார வெறிப்பிடித்து அலைவது, சட்ட ஒழுங்கை பாதிக்க வழிவகுக்கும் என ஆளும் பாஜக அரசினை உத்தவ் தாக்ரே மறைமுகமாக விமர்சித்துள்ளார்.

Read More

இயக்குநர் கிருத்திகா உதயநிதி தனது அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். கடந்த 2013-ஆம் ஆண்டு வெளியான “வணக்கம் சென்னை” படத்தின் மூலம் இயக்குநராக தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானார் கிருத்திகா உதயநிதி. இதையடுத்து இவர் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் காளி திரைப்படம் வெளியாகியிருந்தது. இந்நிலையில் இப்போது கிருத்திகா உதயநிதியின் அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார், விஜய் சேதுபதியின் கருப்பன் படத்தில் நடித்து பிரபலமடைந்த தன்யா ரவிச்சந்திரன் கதாநாயகியாக நடிக்கிறார் என்பதை அதிகாரப்பூர்வமாக தனது ட்விட்டர் பக்கத்தில் கிருத்திகா உதயநிதி தெரிவித்துள்ளார். மூவேந்தன்

Read More

தி ஃபேமிலி மேன் 2 தொடரை இணையதளத்தில் இருந்து நீக்க வேண்டும் என அமேசான் நிறுவனத்துக்கு நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் கடிதம் எழுதி உள்ளார். நடிகை சமந்தா, மனோஜ் பாஜ்பாய், பிரியாமணி உட்பட பலர் நடித்து அமேசான் பிரைமில் வெளியாக உள்ள தொடர்தான் தி ஃபேமிலி மேன் 2. இந்த தொடரின் முதல் பகுதிக்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் இரண்டாம் பாகம் வெளியானது. இதில் இலங்கை தமிழரை தவறாக சித்தரிப்பதாக விமர்சனம் எழுந்தது. இதில் இலங்கை தமிழ்ப் பெண்ணாக நடித்துள்ளவர் விடுதலைப் புலிகளை விமர்சிக்கும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாக சர்ச்சையாகியுள்ளது. இந் நிலையில், இந்தத் தொடரை அமேசான் தளத்தில் இருந்து நீக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் கடிதம் எழுதி உள்ளார். அவ்வாறு நீக்கவில்லையென்றால், அமேசானுக்கு எதிராக பிரசாரம் நடத்தப்படும் என சீமான் குறிப்பிட்டுள்ளார்.

Read More