- தமிழ்நாடு
- இந்தியா
- உலகம்
- அரசியல்
- நூல் அறிமுகம்
- சினிமா
- தமிழ்
- தொடர்கள்
- நலவாழ்வு
- உணவு
- வரலாறு
- வினோதங்கள்
- Public Post
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: Admin
சர்வதேச விண்வெளி நிலையத்தில் கட்டமைப்புபணிகளுக்காக 3 வீரர்களை சீனா விண்ணுக்கு அனுப்பியுள்ளது. அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளின் பங்களிப்பில் சர்வதேச விண்வெளி நிலையம் இயங்கி வருகிறது. கருத்து வேறுபாடு காரணமக இந்த விண்வெளி நிலையத்திலிருந்து சீனா விலக்கிவைக்கப்பட்டது. இதனால், தமக்கென புதிதாக ஒரு விண்வெளி நிலையத்தை கட்டமைக்கும் பணிகளை சீனா மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில்தியான்ஹோ என்ற பெயரிடப்பட்ட இந்த விண்வெளி நிலையத்திற்கான மையப்பகுதி கடந்த ஏப்ரல் மாதம் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து எரிபொருள், விண்வெளி உடைகள், உணாவுப்பொருட்களுடன் தியான்சோ-2 என்ற விண்கலம் அனுப்பப்பட்டது. இந்நிலையில், கட்டமைப்பு பணிகளை மேற்கொள்வதற்காக 3 விண்வெளி வீரர்களை, சென்ஷூ 12 என்ற விண்கலத்தில் சீனா அனுப்பியுள்ளது. இவர்கள் 3 மாதங்கள் விண்வெளி நிலையத்தில் தங்கியிருந்து பணிகளை மேற்கொள்வார்கள் என சீனா தெரிவித்துள்ளது
சிவ சங்கர் பாபா பெண்கள் விஷயத்தில் சிறைக்கு செல்வார் என 23 வருடங்களுக்கு முன்பே யாகவா முனிவர் கூறியுள்ளது வைரலாகியுள்ளது. சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் செயல்பட்டு வரும் சுஷில் ஹரி பள்ளியின் நிறுவனர் சிவ சங்கர் பாபா மீது அப்பள்ளியின் முன்னாள் மாணவிகள் சமூக வலைதளத்தில் பாலியல் புகார் தெரிவித்தனர். இதில் அவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பிரபல தொலைக்காட்சி 23 வருடங்களுக்கு முன்பு நடந்த விவாத நிகழ்ச்சி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் 90களில் பிரபல ஆன்மீகவாதியாக இருந்த யாகவா முனிவரும், சிவசங்கர் பாபாவும் ஒரே அரங்கத்தில் விவாத நிகழ்ச்சியில் பங்கேற்றனர். காரசாரமாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பெண்ணால்தான் சிவசங்கர் பாபா சிறைக்கு செல்வார் என்று யாகவா முனிவர் கூறியிருந்தார். ஆனால் அவர் சொன்ன ஆண்டு 2001. அந்த ஆண்டு தொடக்கம் முதலே, பெண்கள் தொடர்பான சர்ச்சைகளில் சிக்க ஆரம்பித்திருந்தார் சிவ சங்கர் பாபா என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பதற்காக, 2 நாள் அரசுமுறை பயணமாக, சென்னையில் இருந்து இன்று காலை தனி விமானம் மூலம் டெல்லி விமானநிலையம் சென்றடைந்தார். அங்கு அவருக்கு, சிறப்பு பிரதிநிதி விஜயன் மற்றும் திமுக எம்பிக்கள் உற்சாக வரவேற்பளித்தனர். அதனை தொடர்ந்து, சாணக்கியாபுரத்தில் இருக்கக் கூடிய தமிழ்நாடு பொதிகை இல்லத்தில், காவல்துறையினர் அணிவகுப்பு மரியாதை கொடுக்கப்பட்டது. பின்னர், பிரதமர் நரேந்திர மோடி-முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பானது பிரதமர் நரேந்திர மோடி இல்லத்தில் நடைபெற்றது. இந்த சந்திப்பானது 25நிமிடங்கள் நடைபெற்றது. இந்த சந்திப்பின் போதுதமிழகத்தின் கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமர் மோடியிடம் வழங்கினார். இதில் நீட்தேர்வு ரத்து, தடுப்பூசி, கருப்பு பூஞ்சை மருந்து, ஜிஎஸ்டி நிலுவை தொகையை பற்றி வலியுறுத்தியதாகவும், 7 பேர் விடுதலை, மதுரை எய்ம்ஸ் பணிகள்,மேகதாது உள்ளிட்டவை குறித்து ஆலோசித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது
கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட பிறகே எம்எல்ஏக்கள் சட்டப்பேரவைக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை கூட்ட தொடர் ஜுன் 21 ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்க உள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சென்னை கலைவாணர் அரங்கில் சட்டப்பேரவை கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதையொட்டி அங்கு நடந்து வரும் பணிகளை சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு, துணை சபாநாயகர் கு. பிச்சாண்டி ஆகியோர் ஆய்வு செய்தனர். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனா விதிமுறைகளை பின்பற்றி, சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் எம்எல்ஏக்கள் அமரவைக்கப்படுவார்கள் என கூறினார். மேலும் கொரோனா பரிசோதனைக்கு பிறகே எம்எல்ஏக்கள் சட்டப்பேரவைக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அப்பாவு தெரிவித்தார்.
தொரட்டி படத்தின் கதாநாயகனும் தயாரிப்பாளருமான ஷமன் மித்ரு கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளார். நாடு முழுவதும் கொரோனாவின் இரண்டாவது அலையில் மக்கள் சிக்கி தவிக்கின்றனர். திரைபிரபலங்கள், அரசியல் பிரபலங்கள் என யாரையும் பாரபட்சம் பார்க்காமல் கொரொனா வாட்டிவதைக்கிறது. தமிழ் திரையுலகிலும் பல திறமை மிக்க கலைஞர்கள் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். அடுத்தடுத்து நிகழும் இறப்புகள் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தொரட்டி படத்தில் கதாநாயகனாக நடித்த ஷமன் மித்ரு கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் இன்று உயிரிழந்துள்ளார். ஷமன் மித்ரு கதாநாயகனாக மட்டுமல்லாது தயாரிப்பாளர் மற்றும் ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றியுள்ளார். கேவி ஆனந்த், ரவிகே சந்திரன் ஆகியோரிடம் அவர் உதவி இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார். ஷமன் மித்ரு மறைவுக்கு தமிழ்த் திரையுலகினர் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண் கணக்கீட்டு முறை அறிவிக்கப்பட்டுள்ளது.நாடு முழுவதும் கொரோனாவின் இரண்டாவது அலை தாக்கத்தை ஏற்படுத்தியதால் மாணவர்களின் நலன் கருதி சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. ஆனால் மாணவர்களுக்கு மதிப்பெண்களை எவ்வாறு கணக்கிடுவது என்ற குழப்பம் ஏற்பட்டது. இதற்கான வழிமுறைகளை ஆராய்வதற்கு மத்திய கல்வி வாரியம் 13 பேர் அடங்கிய குழுவை அமைத்தது.இந்த குழுவான தனது பரிந்துரையை மத்திய அரசிடம் ஒப்படைத்துள்ளது. இந்நிலையில் சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு மதிப்பெண் கணக்கீட்டு முறையை உச்சநீதிமன்றத்தில் சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. அதன்படி பத்து, பதினொன்று மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண்களை கொண்டு பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண்ணை கணக்கிடு செய்யலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது பத்தாம் வகுப்பு மதிப்பெண்ணில் இருந்து 30 விழுக்காடும், பதினொன்றாம் வகுப்பு மதிப்பெண்ணில் இருந்து 30 விழிக்காடும் பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண்ணில் இருந்து 40 விழுக்காடும் கணக்கீட்டுக்கு எடுத்துக் கொள்ளப்பட…
சேலம் மாவட்டத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் சசிகலாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த சசிகலா, அதிரடியாக அரசியலில் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அரசியலை விட்டு ஒதுங்கப் போவதாக கூறினார்.ஆனால் அவ்வபோது அதிமுக தொண்டர்களுடன் பேசியதை போன்ற ஆடியோக்களை வெளியிட்டு அதிமுகவில் கலகம் ஏற்படுத்த முயற்சி செய்து வருகிறார் சசிகலா. அதிமுக தொண்டர்களுடன் சசிகலா பேசும் ஆடியோக்கள் வெளியான விவகாரம் தொடர்பாக கடந்த 14ஆம் தேதி நடைபெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்தத் தீர்மானத்தை வலியுறுத்தி அதிமுக மாவட்ட கழகத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு வருகிறது. அந்த வகையில் சேலம் மாவட்டம் எடப்பாடியில் நடைபெற்ற கூட்டத்தில் சசிகலாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் குள்ளநரி சசிகலாவை விரட்டுவோம் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரான்ஸ் நட்சத்திர கால்பந்து வீரர் பீர் பாட்டிலை அகற்றுமாறு யூரோ கோப்பை பத்திரிகையாளர் சந்திப்பில் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முன்தினம் செய்தியாளர் சந்திப்பின்போது தன்முன் வைக்கப்பட்டிருந்த கோகோ கோலா பாட்டிலை அகற்றிவிட்டு, தண்ணீர் குடிக்குமாறு, போர்ச்சுக்கல் கேப்டன் கிறிஸ்டியானா ரொனால்டோ கூறியது இணையத்தில் வைரலானது. அதனால் அந்நிறுவனத்திற்கு சுமார் ரூ.29,377 கோடி நஷ்டம் ஏற்பட்டது. இந்நிலையில் பிரான்ஸ் நட்சத்திர வீரரான பால் போக்பா தன்முன் வைக்கப்பட்டிருந்த பீர் பாட்டிலை அகற்றுமாறு தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இஸ்லாமிய மார்க்கத்தை பின்பற்றும் பால் மதுவுக்கு எதிரானவர் என்பதால், யூரோ கோப்பை ஸ்பான்ஸர் நிறுவனமான ஹெனிக்கன் நிறுவனத்தின் பீர் பாட்டிலை அகற்றுமாறு கூறியதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
கட்சி அலுவலகத்தில் தொண்டர்கள் கோஷமிடுவது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதிமுகவில் ஓ பன்னீர்செல்வத்துக்கும் எடப்பாடி பழனிச்சாமிக்கும் இடையே கோஷ்டி மோதல் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் எதிர்க்கட்சி துணைத்தலைவராக ஓபிஎஸ் நியமிக்கப்பட்டதை அடுத்து அவரின ஆதரவாளர்கள் கட்சி அலுவலகத்தில் அவரை வாழ்த்தி கோஷமிட்டனர். இது கட்சி வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில் ஓபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கட்சி அலுவலகத்தில் மறைந்த முதல்வர்கள் எம் ஜி ஆர் மற்றும் ஜெயலலிதாவின் பெயர்களை தவிர வேறு யார் பெயரையும் சொல்லி கோஷமிட வேண்டாம் எனக் கூறியுள்ளார்.
இந்தியாவில் இரண்டாம் அலையில் கர்ப்பிணிகளுக்கு அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், 2 ஆம் அலையின்போது 387 கர்ப்பிணிகளில் 111 பேருக்கு தொற்று (28.7% பேர்) ஏற்பட்டதாகவும், ஆனால் முதல் அலையில் 1,143 கர்ப்பிணிகளில் 162 பேருக்கு (14.2% பேர்) மட்டுமே பாதிப்பு ஏற்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. அதேபோல் கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகளை பெற்றெடுத்த தாய்மார்களின் இறப்பு விகிதம் முதல் அலையின்போது 0.7% ஆகவும், 2வது அலையில் 5.7% ஆகவும் பதிவாகியுள்ளது.
