Author: Admin

யோகா இந்தியாவில் தோன்றியது அல்ல, நேபாளத்தில் தான் உருவானது என கே.பி. சர்மா ஒலி கூறியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மனிதர்களை ஆரோக்கியமாகவும், இளமையாகவும் வைக்கும் ஆற்றலை கொண்டது யோகா. தினமும் யோகா செய்வதன் மூலம் உடலும் மனமும் சாந்தம் பெரும். இந்த கலைக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில் ஆண்டுதோறும் ஜூன் 21-ந் தேதி, சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்படுகிறது. அதன்படி 7-வது யோகா தினம் நேற்று உலகமெங்கும் கொண்டாடப்பட்டது. இதையொட்டி மக்கள் வீடுகளில் தனியாகவும், பொது இடங்களில் குழுவாகவும் பல்வேறு ஆசனங்கள் மற்றும் பிரணாயாம மூச்சுப்பயிற்சிகளில் ஈடுபட்டனர். மலை உச்சிகள் முதல் கடற்கரை வரை, நகர சதுக்கங்கள் முதல் பூங்காக்கள் வரை என உலகம் முழுவதும் சிறப்பான யோகா கொண்டாட்டங்கள் நடைபெற்றது. இந்நிலையில், காத்மாண்டுவில் நேற்று நடைபெற்ற சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் கே.பி. சர்மா ஒலி பேசினார் அப்போது, யோகா இந்தியாவில் தோன்றியது அல்ல. யோகா…

Read More

புதிய கல்வியாண்டு துவங்கியுள்ள நிலையில், ஸ்மார்ட் போன் இல்லாத மாணவர்கள் எத்தனை பேர்? என அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களிடம் மத்திய அரசு விவரங்களை கேட்டுள்ளது. கொரோனா காரணமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது, இதனால் பள்ளி, கல்லூரிகள் தங்களது படிப்பை டிஜிட்டல் முறையில் கற்கின்றனர். தினமும் மாணவ, மாணவிகளுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வருகிறது. புதிய கல்வியாண்டு தொடங்கியுள்ள நிலையில், ஆன்லைன் வகுப்புகளில் அனைத்து மாணவர்களையும் பங்கேற்க வைக்க மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. இதையடுத்து, ஸ்மார்ட் போன் இல்லாததால், ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க இயலாத மாணவர்கள் எத்தனை பேர்? என்று மாவட்ட வாரியாக தகவல் திரட்டி ஒப்படைக்குமாறு சமக்ரா சிக்‌ஷா மாநில திட்ட இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் அரசுப் பள்ளிகளில் பயிலும் ஏழை மாணவர்களின் கல்வி தடைபடாமல் இருக்க விரைந்து பட்டியலை அனுப்புமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் சமக்ரா சிக்‌ஷா மாநில திட்ட இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.இதையடுத்து…

Read More

குளத்தில் மூழ்க இருந்த மான்குட்டியை, நாய் ஒன்று காப்பாற்றி, அதனுடன் நட்பு பாராட்டும் வீடியோ காண்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது. விர்ஜினியாவை சேர்ந்த ரால்ஃப் டோர்ன் என்பவர் அண்மையில் தனது வளர்ப்பு நாயின் செயலை பாராட்டி முகநூலில் வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார். அதில், அவரது வளர்ப்பு நாய் ஹார்லி, வீட்டின் பின்புறம் உலாவிக்கொண்டிருந்தபோது, அங்கிருந்த குளத்தில் மான்குட்டி ஒன்று மூழ்க இருந்ததை கண்டு ஓடோடிச்சென்று காப்பாற்றி உதவியுள்ளது. இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக மான்குட்டி தனது மூக்கை, ஹார்லியின் மூக்குடன் நேருக்கு நேர் உரசியதோடு, நட்பு பாராட்ட தொடங்கியுள்ளது. மேலும் தினமும் ஹார்லியை சந்திப்பதை வழக்கமாக கொண்டுள்ளது. ஹார்லியும் பதிலுக்கு மான் குட்டியின் உடலை நாவால் முத்தமிட்டு தனது அன்பினை வெளிப்படுத்துகிறது. இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், பலரும் நெகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர்.

Read More

உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் முதியவர் தாக்கப்பட்ட வீடியோ தொடர்பான விவகாரத்தில், டுவிட்டரின் பதில் திருப்தியளிக்கும் வகையில் இல்லை என காவல்துறை தெரிவித்துள்ளது. காஜியாபாத்தை சேர்ந்த முதியவர் ஒருவரை, மர்ம நபர்கள் அடித்து, உதைத்து தாடியை மழித்தது போன்ற வீடியோ டுவிட்டரில் வைரலானது. இது பேரதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இந்த வீடியோவை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தியதாக டுவிட்டர், பத்திரிகையாளர்கள், காங்கிரஸ் தலைவர்கள் உள்ளிட்டோர் மீது வழக்கு தொடரப்பட்டது. இதுதொடர்பாக பதிலளிக்க டுவிட்டரின் இந்திய தலைவர் மணிஷ் மகேஷ்வரிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. மேலும் காவல்துறை இமெயில் வாயிலாக கேள்வி எழுப்பியிருந்தும் மணிஷ் பதிலளிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனிடையே வீடியோ கான்பிரன்ஸ் வாயிலாக விசாரணையை எதிர்கொள்வதாக மணிஷ் மகேஷ்வரி கூறியுள்ளார். மகேஸ்வரியின் இந்த பதில் திருப்தி அளிக்கும் வகையில் இல்லை என கூறி, 2வது முறையாக அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது

Read More

பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட சிவசங்கர் பாபாவை இன்று காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிருந்த நிலையில், அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் சிவசங்கர் பாபாவின் மருத்துவ அறிக்கையை சி.பி.சி.ஐ.டி போலீசார் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா. இவர் அப்பள்ளியில் படிக்கும் மாணவிகள் மற்றும் குழந்தைகளிடம்பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனை தொடர்ந்து மாணவிகள் 3 பேர் நேரடியாக அளித்த புகாரின் அடிப்படையில் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில், டெல்லி காசியாபாத்தில் தலைமறைவாக இருந்த சிவசங்கர் பாபாவை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து செங்கல்பபட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதை தொடர்ந்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் சிவசங்கர் பாபாவுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதாகவும், இதனால் அவரை மருத்துவமனையில் அனுமதித்து…

Read More

தமிழக சட்டப்பேரவையின் 16ஆவது கூட்டத் தொடர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று கூடியது. அந்த கூட்டத்தொடரில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கூட்டத் தொடரில் கலந்து கொண்டனர். ஆளுநர் உரையுடன் சட்டப்பேரவை தொடங்கியது. சட்டப்பேரவைக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தமிழக அரசின் மீது குற்றச்சாட்டுகளை சரமாரியாக முன்வைத்தார். தேர்தல் பிரச்சாரத்தின்போது மு.க.ஸ்டாலின் 550 வாக்குறுதிகளை அளித்தார். அதில் ஒன்றுகூட இன்றைய ஆளுநர் உரையில் இல்லை என்பது ஏமாற்றத்தை அளிக்கிறது. திமுக ஆட்சி அமைந்த உடன் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று தெரிவித்து விட்டு இன்று அதை பற்றி விசாரிக்க குழு அமைக்கபட்டிருக்கிறது. ஆட்சிக்கு வருவதற்கு முன்பு ஒரு பேச்சு, ஆட்சிக்கு வந்தவுடன் ஒரு பேச்சு என எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். திமுக ஆட்சி அமைந்து 45 நாட்கள் ஆகிறது. விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில்…

Read More

மனிதக்கழிவுகளை எந்திரத்தின் மூலம்அகற்றும் முறைக்கு மாநிலத்தில் முதன்முறையாக சேப்பாக்கம் தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். திமுக தனது தேர்தல் அறிக்கையில் மனிதர்களை கொண்டு கழிவு அகற்றும் முறை ஒழிக்கப்பட்டும் என கூறப்பட்டிருந்தது. இந்த நிலையில் சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலினின் தனது ட்விட்டர் பக்கத்தில்பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், மனிதக்கழிவுகளை மனிதனே அகற்றுவதை ஒழிப்போம் என தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தோம் அதன்முன்னெடுப்பில், எந்திரத்தைக் கொண்டு கழிவை அகற்றும் முறையை முதன்முறையாக சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் அறிமுகம் செய்து வைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த செயலை பலரும் தற்போது பாராட்டி வருகின்றனர்.

Read More

திமுக ஆட்சி ஏற்றவுடன் சட்டமன்றத்தின் முதல் கூட்டத்தொடர் இன்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் உரையுடன் தொடங்கியுள்ளது. சட்டமன்ற முறைப்படி சபாநாயகர் அப்பாவு ஆளுநரை வரவேற்றார். பின்னர் அவையில் பேசிய ஆளுநர், தமிழ் மொழி இனிமையான மொழி என புகாழாரம் சூட்டினார். மேலும்,தமக்கு வாக்களித்த, வாக்களிக்காத மக்கள் என்று பாரபட்சம் பார்க்காத இந்த அரசு சமூகநீதி, சமத்துவத்தை அடித்தளமாகக் கொண்ட அரசாக செயல்படும் என்று கூறினார். தொடர்ந்து பேசிய ஆளுநர் தமிழை இந்திய அலுவல் மொழியாக்க தமிழக அரசு தொடர்ந்து பாடுபடும் என பேசினார். முதல்வருக்கு பாராட்டு: மேலும்,முழு கவச உடை அணிந்து கொரோனா வார்டை பார்வையிட்டு முன்கள பணியாளர்களை ஊக்குவித்தார் முதல்வர் ஸ்டாலின். அரசியல் கட்சிகள் அனைத்தும் தோளோடு தோள் நின்று கொரோனாவை எதிர்த்து பணிபுரிகின்றனர். கொரோனா காலத்தில் மக்களுக்கு ரூ.4 ஆயிரம் வழங்கியுள்ளது தமிழக அரசு. முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.335 கோடி நிதி குவிந்துள்ளது. நிதிநிலை குறித்த வெள்ளை…

Read More

இ -பதிவில் தவறான தகவல் அளித்தால் சிவில் மற்றும் கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஊரடங்கின் போது அளிக்கப்பட்டுள்ள கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு இன்று முதல் 27 மாவட்டங்களில் திருமணத்திற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. திருமண நிகழ்விற்கு வரும் அத்தனை விருந்தினர்களுக்கும் சேர்த்து ஒரு பதிவு மட்டுமே செய்ய வேண்டும் என்றும் தவறான தகவல்கள் தந்திருந்தாலோ, ஒரு நிகழ்விற்கு ஒன்றுக்கு மேற்பட்ட இ-பதிவுகள் செய்திருந்தாலோ சிவில் மற்றும் கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.  மேலும் ஒரே பதிவிலேயே அனைத்து வண்டிகளுக்கும் இ-பதிவு செய்ய வழி வகுக்கப்பட்டுள்ளது. திருமணத்தில் நேரடியாக சார்ந்துள்ள மணமகள், மணமகன், தாய், தந்தை, போன்றோர் ஒருவர் மட்டுமே இப்பதிவை மேற்கொள்ளலாம். விண்ணப்பதாரர் பெயர் பத்திரிக்கையில் கண்டிப்பாக இருக்க வேண்டும். திருமண அழைப்பிதழை கண்டிப்பாக பதிவேற்றம் செய்ய வேண்டும். தவறான தகவல்களை அளித்தாலோ, ஒரு…

Read More

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு உரையாற்றிய பிரதமர் மோடி, திருக்குறளை சுட்டிக்காட்டி பேசியுள்ளார். சர்வதேச யோகா தினமான இன்று பிரதமர் நரேந்திர மோடி காலை 6.30 மணிக்கு யோகாவால் ஏற்படும் நன்மைகள் குறித்து தொலைக்காட்சியில் உரையாற்றினார். அவர் பேசியதாவது: இன்று சர்வதேச யோக தினம் கொண்டாடப்படுகிறது. ‘ஆரோக்கியத்திற்கு யோகா’ என்பது தான் இந்தாண்டின் கருப்பொருள். இந்தியா உள்பட உலகம் முழுவதும் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு வருவதாக கூறிய பிரதமர் மோடி இந்த கொரோனா காலகட்டத்தில் யோகா புதிய நம்பிக்கை ஒளியை ஏற்படுத்துவதாக கூறினார். மேலும், தெய்வப் புலவர் திருவள்ளுவர், நோய் நாடி முதல் நாடி அது தணிக்கும்வாய் நாடி வாய்ப்பச் செயல் எனக் கூறியுள்ளார். இதன் மூலம் ஒரு நோயின் அடிப்படை காரணத்தை கண்டறிந்து நாம் சிகிச்சை அளிக்க வேண்டும் என்று திருவள்ளுவர் கூறியுள்ளார். அதே போல் கண்ணுக்கு தெரியாத கொரோனா தொற்றை வெல்ல நாம் யோகாவை கடைப்பிடிக்க வேண்டும். மருத்துவர்கள்…

Read More