யோகா இந்தியாவில் தோன்றியது அல்ல… நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஒலி சர்ச்சை கருத்து

SHARE

யோகா இந்தியாவில் தோன்றியது அல்ல, நேபாளத்தில் தான் உருவானது என கே.பி. சர்மா ஒலி கூறியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

மனிதர்களை ஆரோக்கியமாகவும், இளமையாகவும் வைக்கும் ஆற்றலை கொண்டது யோகா. தினமும் யோகா செய்வதன் மூலம் உடலும் மனமும் சாந்தம் பெரும்.

இந்த கலைக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில் ஆண்டுதோறும் ஜூன் 21-ந் தேதி, சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்படுகிறது.

அதன்படி 7-வது யோகா தினம் நேற்று உலகமெங்கும் கொண்டாடப்பட்டது. இதையொட்டி மக்கள் வீடுகளில் தனியாகவும், பொது இடங்களில் குழுவாகவும் பல்வேறு ஆசனங்கள் மற்றும் பிரணாயாம மூச்சுப்பயிற்சிகளில் ஈடுபட்டனர்.

மலை உச்சிகள் முதல் கடற்கரை வரை, நகர சதுக்கங்கள் முதல் பூங்காக்கள் வரை என உலகம் முழுவதும் சிறப்பான யோகா கொண்டாட்டங்கள் நடைபெற்றது.

இந்நிலையில், காத்மாண்டுவில் நேற்று நடைபெற்ற சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் கே.பி. சர்மா ஒலி பேசினார் அப்போது, யோகா இந்தியாவில் தோன்றியது அல்ல. யோகா கண்டுபிடிக்கப்பட்டபோது, இந்தியா ஒரு நாடாகவே இல்லை என்றும் பல ராஜ்ஜியங்களாக இருந்தது என்றும் கூறினார்.

நேபாளத்தில் தான் யோகா தோன்றியது. அதை சர்வதேச அரங்கில் முன்னிறுத்த நாம் தவறிவிட்டோம் என்றும் ஆனால் இந்தியப் பிரதமர் மோடி அதற்கு உரிமை கோரி, சர்வதேச அங்கீகாரத்தையும் பெற்று விட்டார் என்றும் கூறினார்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

ரத்த ஆறு ஓடுவதைத் தடுக்கவே நாட்டைவிட்டு வெளியேறி உள்ளேன்.. ஆப்கான் அதிபர் அஷ்ரப் கனி

Admin

வேகமாக பரவும் குரங்கு அம்மை நோய் அதிக பாதிப்பு இல்லை

Admin

அதிகரித்த கொரோனா: பிரான்சில் மீண்டும் ஊரடங்கு

Admin

கொரோனாவை கையாளத் தவறிய ஜப்பான் பிரதமர் பதவி விலக முடிவு..!

Admin

காபூல் விமான நிலையம் அருகே அடுத்தடுத்து வெடிகுண்டுத்தாக்குதல் !

Admin

பொழுதுபோக்குக்காக பறப்பவர்களை விண்வெளி வீரர்கள் என கூறமுடியாது :கடுப்பான அமெரிக்கா!

Admin

டெல்டா கொரோனா பெரும் சவால் – அமெரிக்க மருத்துவ நிபுணர் தகவல்

Admin

ராணி எலிசபெத்தை கொல்ல விரும்பிய பயங்கரவாதி சுட்டுக்கொலை

Admin

இதென்ன சானிடைசரா? … சுட்டிக்குழந்தையின் வீடியோ வைரல்…

Admin

மலேரியாவுக்கு தடுப்பூசி… 30 ஆண்டுகால போராட்டத்துக்கு வெற்றி!.

சீன பொறியாளர்கள் சென்ற பேருந்தில் குண்டு வெடிப்பு…13 பேர் பலி…

Admin

குழந்தையின் சிகிச்சைக்காக பதக்கத்தை ஏலம் விட்ட போலந்து வீராங்கனை.!!

Admin

Leave a Comment