- தமிழ்நாடு
- இந்தியா
- உலகம்
- அரசியல்
- நூல் அறிமுகம்
- சினிமா
- தமிழ்
- தொடர்கள்
- நலவாழ்வு
- உணவு
- வரலாறு
- வினோதங்கள்
- Public Post
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: Admin
ஊரடங்கு தளர்வு நடவடிக்கையாக நாளை முதல் சென்னையின் புறநகர் ரயில் சேவை மீண்டும் செயல்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வந்ததையடுத்து மாநில அரசு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியது.கொரோனா இரண்டாம் அலை கட்டுப்பாட்டு நடவடிக்கையாக தமிழகத்தில் புறநகர் ரயில் சேவையானது ரத்து செய்யப்பட்டிருந்தது. இந்தநிலையில் தற்போது பாதிப்புகள் குறைந்து வருவதையடுத்து தமிழகத்தில் படிபடியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.அதன்படி, நாளை முதல் சென்னை எல்லைக்குட்பட்ட புறநகர் ரயில் சேவை இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. முகக்கவசம் உள்ளிட்ட அனைத்து கட்டுப்பாடு நடவடிக்கைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் முதல் முறையாக டெல்டா பிளஸ் கொரோனா வகைக்கு ஒரு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. உருமாறிய கொரோனா வைரசான டெல்டா பிளஸ் கொரோனாவுக்கு இந்தியாவில் மகாராஷ்டிரம், கேரளம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த 40 பேர் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த நிலையில் மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் டெல்டா பிளஸ் கொரோனா தொற்றுக்கு ஒருவர் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உஜ்ஜைனில் உயிரிழந்த பெண் கொரோனா நோயாளியிடமிருந்து எடுக்கப்பட்ட மாதிரியில் அவர் டெல்டா பிளஸ் கொரோனா வகையால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்தது. இவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நிலையில் கடந்த மே 23 ஆம் தேதி உயிரிழந்தார். இவரைத் தவிர மத்தியப் பிரதேசத்தில் டெல்டா பிளஸ் கொரோனா வகையால் பாதிக்கப்பட்ட 4 பேரும் தொற்றிலிருந்து மீண்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது,
‘’நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் போல் மறந்துட்டு பேசாதீங்க ’’ – எடப்பாடிக்கு பதில் கொடுத்த ஸ்டாலின் !
நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் என்பதை போல பிப்ரவரி முதல் மே மாதம் வரை பழனிசாமி தனது பணிகள் செய்ய மறந்துவிட்டார் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இன்றைய சட்டப்பேரவை கூட்டத்தில், கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் நடந்த வரவு செலவு தொடர்பாக சி.ஏ.ஜி. அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் பேசிய முதலவர் மு.க.ஸ்டாலின் மார்ச் மாதம் தொடங்கி மேஆம் 2 தேதி வரை தமிழகத்தில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பிற்கு அ.தி.மு.க. அரசே காரணம் என கூறினார். மேலும், பிப்ரவரி 26 முதல் மே 6-ந் தேதி வரை தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அ.தி.மு.க. அரசு மறந்துவிட்டதா? கொரோனா தடுப்பு பணிகள் மேற்கொள்ளக் கூடாது என எடப்பாடி பழனிசாமியின் கையை யாரும் கட்டவில்லை. ஆட்சிக்கு வரப்போவதில்லை என்று தெரிந்து அ.தி.மு.க. அரசு அலட்சியமாக இருந்துவிட்டது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். மேலும், நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் என்பதை போல் எடப்பாடி…
மேற்குவங்கத்தில் காலியாக உள்ள சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை விரைவில் நடந்த வேண்டுமென முதல்வர் மம்தா பானர்ஜி தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தியுள்ளார். மேற்குவங்கத்தில் கொரோனா பரவல் தற்போது கட்டுப்பாட்டுக்குள் உள்ளதாக முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார். இதனால் மேற்வங்கத்தில் சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை ஏழு நாட்களுக்குள் நடத்த வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு வலியுறுத்தியுள்ளார் முதல்வர். மேலும் அம்மாநிலத்தில் கொரோனா பரவல் 33 சதவீதமாக இருந்த போது சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது என்று சுட்டிக்காட்டிய அவர், தற்போது 3 சதவீதம் மட்டுமே உள்ள நிலையில் இடைத்தேர்தலை நடத்த தாமதிப்பதில் உள்நோக்கம் உள்ளதாகவும் குற்றம்சாட்டினார். மேற்குவங்கத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி பெற்ற நிலையில், நந்திகிராம் தொகுதியில் மம்தா தோல்வியைத் தழுவினார். எனினும் முதலமைச்சராக பதவியேற்றுள்ள அவர், நவம்பர் 5ம் தேதிக்குள் சட்டமன்ற உறுப்பினராக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கோவாக்சின் தடுப்பூசியை குழந்தைகளுக்கு செலுத்துவது பாதுகாப்பானதா என்பது 3 மாதங்களில் தெரியவரும் என எய்ம்ஸ் தலைமை மருத்துவர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார். ஐதராபாத்தை தலைமையிடமாக கொண்ட பாரத் பயோடெக் மருந்து தயாரிப்பு நிறுவனம், 2 முதல் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கோவாக்சின் தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனையை தொடங்கியுள்ளது. இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஆணையத்தின் அனுமதி பெற்றப் பிறகு மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் இந்தப் பரிசோதனை தொடங்கியுள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய எய்ம்ஸ் தலைமை மருத்துவர் ரன்தீப் குலேரியா, கோவாக்சின் தடுப்பூசியின் செயல்திறனை சோதனை செய்யும் முறை தொடங்கியுள்ளதாக குறிப்பிட்ட அவர், பரிசோதனைக்காக ஏற்கெனவே பல குழந்தைகளுக்கு தடுப்பூசி போட்டாகிவிட்டதாக குறிப்பிட்டார். 2 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு கோவாக்சின் தடுப்பூசி பாதுகாப்பானதா என்பது குறித்து இன்னும் 2 முதல் 3 மாதங்களில் தெரிய வரும் எனவும் அவர் கூறினார்.
தமிழகத்தில் ஒருவருக்கு டெல்டா பிளஸ் கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மகாராஷ்டிரா, கேரளா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் டெல்டா ப்ளஸ் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்கள் கண்டறியப்பட்ட நிலையில் நாடு முழுவதும் சோதனை நடத்த மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. அதன்படி தமிழகத்தில் மே மாதத்தின் தொடக்கத்தில் 8 பிரிவுகளில் மக்களை வகைப்படுத்தி சுமார் 1000பேரின் மரபணு மாதிரிகள் பெங்களூரில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதன் முதற்கட்ட முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில் தமிழகத்தை சேர்ந்த ஒருவருக்கு டெல்டா கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவர் பரிசோதனை கொடுத்த இடம் சென்னை என்பதால் அவர் சென்னையை சேர்ந்தவர் என்ற முடிவுக்கு வந்துவிட முடியாது. அவர் எந்த பகுதியை சேர்ந்தவர், வேறு யாருக்கேனும் டெல்டா பிளஸ் வைரஸ் தொற்று உள்ளதா என்பதை வேகமாக கண்டறியும் பணிகளை…
சேலத்தில் காவலர் தாக்கிய விவகாரத்தில் தவறு செய்தவர் யாராக இருந்தாலும் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார் சேலம் மாவட்டம் பாப்பநாயக்கன்பட்டியில் விவசாயி முருகேசன் என்பவர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த எஸ்.ஐ பெரியசாமி, காவலர் முருகன் ஆகியோர் மது போதையில் இருந்த முருகேசனை மறித்து வாகன சோதனை நடத்தியுள்ளனர். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் காவலர்கள் முருகேசனை தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில் முருகேசன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதையடுத்து அவரை தாக்கிய எஸ்ஐ தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் அவர் உட்பட மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இது குறித்து மு.க ஸ்டாலின் இன்று சட்டப் பேரவையில் காவல்துறையினரால் தாக்கப்பட்டு முருகேசன் என்பவர் உயிரிழந்தது குறித்து விரிவான விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளேன். தவறு செய்தது யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்…
தமிழகத்தில் நீட் தேர்வு விலக்கு தொடர்பாக அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு அதிமுக துணை நிற்கும் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் இன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் இரண்டாவது நாளாக நடைபெற்று வருகிறது. இதில், முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், பல்வேறு கட்சிகளின் சட்டப்பேரவைக் குழுத் தலைவர்கள், எம்எல்ஏக்கள் பங்கேற்றனர். தமிழக சட்டப்பேரவையில் நீட் தேர்வு ரத்து தொடர்பாக விவாதம் நடந்தது. இந்த விவாதத்தில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி நீட் தேர்வு நடைபெறுமா என்பது குறித்து முதல்வர் ஸ்டாலின் தெளிவுபடுத்த வேண்டும் என்றார். இதற்கு விளக்கம் அளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நீட் தேர்விற்கு விலக்கு அளிக்கும் நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ளதாக தெரிவித்தார். நீட் தேர்வுக்கு விலக்கும் பெற போராடுவோம்..வெற்றி பெறுவோம் என்றும் முதலமைச்சர் சூளுரைத்தார். இதை தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிசாமி தமிழகத்தில் நீட் தேர்வு விலக்கு தொடர்பாக அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு அதிமுக…
ஒன்றிய அரசு எனக் கூறுவதன் காரணத்தைக் கேட்ட பாஜக சட்டமன்ற உறுப்பினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்தார். சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் மூன்றாம் நாளான இன்று ஆளுநர் உரை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. சட்டப்பேரவையில் பேசிய பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன், மத்திய அரசு என்று குறிப்பிடாமல் ஒன்றிய அரசு என சொல்வதன் நோக்கம் என்ன? என்பதை முதல்வர் விளக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அதற்கு பதில் அளித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒன்றிய அரசு என கூறுவதை சமூக குற்றம் என நினைக்க வேண்டாம், இந்தியா மாநிலங்களை கொண்ட ஒன்றியம் என்றே அரசியல் அமைப்புச் சட்டத்தில் உள்ளதாகக் குறிப்பிட்டார் ஸ்டாலின். அதனால் தான் தற்போது மத்திய அரசை, ஒன்றிய அரசு என பயன்படுத்துவதாகவும், பேரறிஞர் அண்ணா நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதும் ஒன்றியம் என்ற வார்த்தையையே குறிப்பிட்டுள்ளார் என்பதையும் முதலமைச்சர் நினைவு கூர்ந்தார். மேலும், ஒன்றியம் என்ற வார்த்தையில்…
தமிழகத்தில் மின்வெட்டு அதிகம் ஏற்படுவது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் விமர்சித்ததற்கு அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலடி கொடுத்துள்ளார் . திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே தமிழகம் முழுதும் அவ்வபோது மின் வெட்டு ஏற்படுவதாக சமூகதளங்களில் மக்கள் கருத்துகளை கூறி வந்தனர். இந்த நிலையில் சில நாட்களுக்கு முன் செய்தியாளர்களை சந்தித்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி புள்ளி விவரங்களை அள்ளித் தெளித்தார். அதில் தமிழ்நாட்டில் மின் கம்பிகளின் மீது விழும் நிலையில் இருக்கும் 83 ஆயிரத்து 553 மரக்கிளைகளை அகற்ற வேண்டியுள்ளது என்று மரக்கிளைகளை கூட எண்ணி சொல்லிய அமைச்சர் செந்தில்பாலாஜி, “கடந்த அதிமுக ஆட்சியில் கடந்த ஒன்பது மாதங்களாக மின்சார பராமரிப்புப் பணியே செய்யவில்லை. இதனால் தான் மின்சார உள்கட்டமைப்பில் பலத்த சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.எனவே பத்து நாட்களில் மின் பராமரிப்பு பணிகளின் போது மின் வெட்டு ஏற்படும். அதுவும் முன் அறிவிப்பு அளித்த பின்னரே…
