- தமிழ்நாடு
 - இந்தியா
 - உலகம்
 - அரசியல்
 - நூல் அறிமுகம்
 - சினிமா
 - தமிழ்
 - தொடர்கள்
 - நலவாழ்வு
 - உணவு
 - வரலாறு
 - வினோதங்கள்
 - Public Post
 
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: Admin
இங்கிலாந்துக்கு எதிரான 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடியது. லண்டன் ஓவல் டெஸ்டை இந்திய அணி வென்று டெஸ்ட் தொடரில் 2-1 என முன்னிலை பெற்றது. 5-வது டெஸ்ட், மான்செஸ்டரில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால், இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, பந்துவீச்சுப் பயிற்சியாளர் பரத் அருண், ஃபீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள். இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் ஜூனியர் பிசியோதெரபிஸ்ட் யோகேஷ் பார்மருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் அஇந்திய அணியின் வியாழக்கிழமை பயிற்சி ரத்தானது. அனைத்து இந்திய வீரர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் யாருக்கும் கொரோனா இல்லை என்பது உறுதியானது. இந்த நிலையில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திடம் பேச்சுவார்த்தை நடத்தியது பிசிசிஐ. 5-வது டெஸ்ட் ரத்தானதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. 5-வது டெஸ்டை வேறொரு தருணத்தில் நடத்த விரும்புவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்த நிலையில் என்ன காரணத்துக்காக…
லைகா தயாரிப்பில் நடிகர் வடிவேலு நடிப்பில் புதிதாக உருவாகவுள்ள திரைப்படம் குறித்த செய்தியாளர் சந்திப்பு சென்னை தியாகராயநகரில் நடைபெற்றது அப்போது பேசிய நடிகர் வடிவேலு, என்னுடைய பிரச்சனை சாதரணப் பிரச்சினை. என்னை வைகைப்புயல். வைகைப்புயலுன்னு சொல்லுவாங்க, ஆனால் என் வாழ்க்கையிலே சூறாவளியே வந்துடுச்ச. என் மனசு சரியில்லை ராத்திரி தூக்கமில்லை.. உடம்பு சரியில்லை ஒரு டாக்டருக்கு போன எடத்துலே மனசை ரிலாக்ஸ் செய்ய பக்கத்துல நடக்கற சர்க்கசில் ஒரு பபூன் பண்ற சேட்டையை பாரு ரிலாக்ஸ் கிடைக்குமுன்னு சொன்னாரு அந்த பபூனே நாந்தான்னு டாக்டர்கிட்டே மட்டுமில்லாம உங்ககிட்டேயும் பகிர்ந்துகிடறேன். சர்க்கஸ் பஃபூன் போலத்தான் இத்தனை நாட்களாக வாழ்ந்தேன் எனக் கூறினார் வடிவேலு. மேலும்’ கொரோனா உலகத்தையே ஆட்டி படைத்திருக்கிறது. என்னுடைய காமெடி ஊரடங்கு நேரத்தில் மக்களுக்கு மருந்தாக இருந்தது எனக்கு மகிழ்ச்சி அளித்தது. மக்களை மீண்டும் மகிழ்வித்த பிறகே இந்த உயிர் என்னைவிட்டு போகும். முதல்வரை சந்தித்த பிறகே எனக்கு நல்லது…
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள அண்ணாத்த படத்தில் நடிகர் ரஜினிகாந்த், நடிகைகள் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, பிரகாஷ்ராஜ், சூரி,சதீஷ் என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். டி.இமான் இசையமைத்துள்ள இப்படம் நவம்பர் 4 ஆம் தேதி தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர் ஆகியவை விநாயகர் சதுர்த்தி தினமான இன்று வெளியாகும் என நேற்று அறிவிப்பு வெளியானது. உடனே சமூக வலைத்தளங்களில் கொண்டாட்டங்கள் களைக்கட்ட தொடங்கின. இந்நிலையில் அண்ணாத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.இதில் வேட்டி சட்டையில் ரஜினி தனது வழக்கமான மாஸ் லுக்கில் சிரிப்பது போல படம் இடம்பெற்றுள்ளது. அவருக்குப் பின்னால் திருவிழாவில் ஏதோ பாடலில் இடம் பெற்றுள்ள காட்சி ஒன்று உள்ளது. அநேகமாக ரஜினியின் அறிமுக பாடலில்…
டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியின் ஆலோசகராக தோனி செயல்படுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கொரோனா காரணமாக இந்தாண்டுக்கான டி20 உலகக்கோப்பை தொடர் திட்டமிட்டபடி இந்தியா சார்பில் ஐக்கிய அரபு அமீரகத்தில் அக்டோபர் 17 ஆம் தேதி முதல் நவம்பர் 14 ஆம் தேதி வரை நடக்கவுள்ளது. இதற்கான இந்திய அணி நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்ட நிலையில்விராட் கோலி தலைமையிலான இந்திய அணியில் ரோகித் சர்மா, கே.எல்.ராகுல், ரிஷப் பண்ட் , இஷான் கிஷன், ஹர்திக் பாண்ட்யா, சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, ராகுல் சாஹர், ரவிச்சந்திரன் அஸ்வின், அக்ஸர் படேல், வருண் சக்கரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா, புவனேஸ்வர் குமார், முகமது சமி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இந்த தொடரின் போது அணியின் ஆலோசகராக முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி செயல்படுவார் என பிசிசிஐ அறிவித்துள்ளது. இது ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்திய நிலையில் தற்போது சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. மத்திய பிரதேச கிரிக்கெட் வாரியத்தின்…
கொரோனா தடுப்பூசி விவகாரத்தில் ஜிம்பாப்வே அரசாங்கம் அரசு ஊழியர்களுக்கு மிகக் கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளது. உலகம் முழுவதும் முதல், இரண்டாம் மற்றும் 3வது என குறிப்பிட்ட கால இடைவெளியில் வகை வகையாக தாக்குதலை நடத்தி வரும் கொரோனா தொற்று தடுப்பூசியின் முக்கியத்துவத்தை உலக மக்களுக்கு நன்றாகவே உணர்த்தியுள்ளது. அந்த வகையில் தென் ஆப்பிரிக்காவில் உள்ள ஜிம்பாப்வே நாடானது தற்போது கொரோனாவின் மூன்றாவது அலையை எதிர்கொண்டு வருகிறது. அங்கு இதுவரை இல்லாத அளவிற்கு தினசரி தொற்று பாதிப்பு புதிய உச்சம் தொட்டுள்ளது. இதனால் ஜிம்பாப்வேயில் இந்தாண்டு இறுதிக்குள் மொத்த மக்கள் தொகையில் மூன்றில் ஒருபங்கு பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்காக தகுதியுடைய 12 மில்லியன் பேருக்கு தடுப்பூசி போட சீனாவில் இருந்து தடுப்பூசிகளை இறக்குமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனாவை விரட்டி அடிக்கும் முயற்சியாக தடுப்பூசி விவகாரத்தில் அந்நாட்டு அரசு கெடுபிடி காட்டத் தொடங்கியுள்ளது. அதன்படி தடுப்பூசி கட்டாயம்…
மத்திய நேரடி வரிகள் வாரியம் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும் தேதியை இரண்டாவது முறையாக நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. இன்போசிஸ் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட புதிய வருமானவரித்துறை போர்ட்டல் இணையதளத்தில் வருமான வரி தாக்கல் செய்வதில் தொடர்ந்து பயனாளர்களுக்கு சிக்கல் நிலவி வந்தது. குறிப்பாக வரி செலுத்துவோர் வருமான வரி அறிக்கையை முழுமையாகத் தாக்கல் செய்ய முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டனர். இதனை உணர்ந்த மத்திய நேரடி வருமான வரித்துறை மத்திய நிதியமைச்சகத்தின் ஒப்புதலுடன் 2021-22 ஆம் ஆண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்ய டிசம்பர் 31 வரை கால அவகாசம் அளிப்பதாக அறிவித்துள்ளது. இதற்கிடையில் கடந்த வாரம் மத்திய நிதியமைச்சகம் மற்றும் புதிய வருமான வரித் தளத்தை உருவாக்கிய இன்போசிஸ் நிறுவனம் இடையே நடந்த கூட்டத்தில் புதிய தளத்தில் இருக்கும் அனைத்து பிரச்சனைகளும் வருகிற செப்டம்பர் 15 ஆம் தேதிக்குள் தீர்க்கப்படும் என இன்போசிஸ் உறுதியளித்தது. இந்த கால நீட்டிப்பு வரி செலுத்துவோரிடையே…
பிக்பாஸ் நிகழ்ச்சியில் தான் கலந்துக் கொள்வதாக தகவல் பரவிய நிலையில் அதுகுறித்து டிக்டாக் பிரபலம் ஜி.பி.முத்து விளக்கமளித்துள்ளார். விஜய் டிவியின் பிரபல நிகழ்ச்சியான பிக்பாஸ் தொடரின் சீசன்-5 விரைவில் தொடங்கவிருக்கும் நிலையில் அதில் பங்கேற்கும் போட்டியாளர்கள் குறித்து உறுதிப்படுத்தாத தகவல்கள் நாள்தோறும் வெளிவந்து கொண்டிருக்கிறது. இதில் டிக்டாக் பிரபலம் ஜி.பி.முத்துவும் ஒருவர்.இதனை உறுதிப்படுத்தும் வகையில் பிக்பாஸ் வீட்டின் முன் தான் இருக்கும் புகைப்படத்தை அவர் பகிர்ந்திருந்ததையடுத்து ஜி.பி.முத்து இந்நிகழ்ச்சியில் கலந்துக் கொள்வதாக தகவல் வெளியாகி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக சமூக வலைத்தளங்களில் மீம்ஸ்களும் வைரலானது.இந்நிலையில் இந்த கேள்விகளுக்கு ஜி.பி.முத்து பதிலளித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பிக்பாஸ் வீட்டுக்குள் நான் இருப்பது பற்றி நானே யோசித்து தான் சொல்ல வேண்டும். ஏனென்றால் மொபைல் இல்லாமல் ஒரு நாள் கூட என்னால் இருக்க முடியாது என கூறியுள்ளார். அதேசமயம் என்னுடைய குழந்தைகளை பார்க்காமலும் என்னால் இருக்க முடியாது. எத்தனை தடைகள் வந்தாலும்…
சிரித்தபடியே அவள் சொன்ன ’பையாஆஆ’ வில் ஏதோ ஆகிப் போனேன். மத்தியப் பிரதேசத்தின் முதல் தங்கச்சி.
நாகாலாந்து ஆளுநராகப் பணியாற்றிவரும் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார் தமிழகத்தின் புதிய ஆளுநராக கேரளாவை சேர்ந்த ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி ரவீந்திர நாராயண ரவி நியமித்து குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்தார். உளவுத்துறை சிறப்பு இயக்குநர், தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகராகவும் ஆர்.என்.ரவி பணியாற்றியுள்ளார். பீகாரை சேர்ந்த இவர் காவல் துறை அதிகாரி மற்றும் இந்திய உளவுத்தறையின் முன்னாள் சிறப்பு இயக்குனர். நாகலாந்து கிளர்ச்சியாளர்களுடன் அமைதி ஒப்பந்தம் ஏற்பட முக்கிய காரணமானவர் . . ஆர்.என். ரவி 1976 ஆம் ஆண்டு ஐபிஎஸ் பேட்ச்சை சேர்ந்தவர். முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகராகவும் இவர் பதவி வகித்துள்ளார். உளவுத் துறையின் சிறப்பு இயக்குனராகவும் பணியாற்றிய அனுபவம் ஆர்.என். ரவிக்கு உண்டு. தற்போது தமிழக ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோஹித் பஞ்சாப் மாநில ஆளுநராக கூடுதல் பொறுப்பு வகித்த நிலையில் தற்போது முழுநேர ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார் ஆர்.என்.ரவி .
சட்டப்பேரவையில் முதல்வர் மு.க ஸ்டாலினுக்கும், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே காரசார விவாதம் ஏற்பட்டது. அதில், சட்டப்பேரவை நிகழ்வு நேரலை செய்யப்படும் என திமுக தேர்தல் வாக்குறுதி அளித்தது குறித்து கேள்வி எழுப்பினார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி. தொடர்ந்து, அதிமுக ஆட்சியில் கட்டப் பஞ்சாயத்து, நில அபகரிப்பு இல்லை என இபிஎஸ் தெரிவித்தார். அதற்கு துப்பாக்கிச்சூடு சம்பவம் அதிமுக ஆட்சியில்தான் நடத்தது; பிறந்தநாள் விழாவின்போது ரவுடி கத்தியால் கேக் வெட்டியது அதிமுக ஆட்சியில்தான் நடந்தது என்று துரைமுருகன் பதில் கூறினார். அப்போது முதல்வர் குறுக்கிட்டு, மறைந்த முதல்வர் ஜெயலலிதா கோடநாட்டில் இருந்து அலுவல் பணிகளை மேற்கொண்டு வந்தார். நீங்கள் முதலமைச்சராக இருந்தபோது ஜெயலலிதா அலுவல் பணிகளை மேற்கொண்ட இடத்தில் சிசிடிவி எப்படி அகற்றப்பட்டது? கோடநாடு இல்லத்தில் கொலை, கொள்ளை நடந்தபோது ஏன் சிசிடிவி கேமராக்கள் செயல்படவில்லை எனவும் எடப்பாடி பழனிசாமிக்கு அடுக்கடுக்கான கேள்வி எழுப்பினார் முதலவ்ர் ஸ்டாலின் மேலும்,…
