குடும்பம் தான் முக்கியம்… பிக்பாஸ் இல்லை : ஜி.பி.முத்து அதிரடி

SHARE

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தான் கலந்துக் கொள்வதாக தகவல் பரவிய நிலையில் அதுகுறித்து டிக்டாக் பிரபலம் ஜி.பி.முத்து விளக்கமளித்துள்ளார்.

விஜய் டிவியின் பிரபல நிகழ்ச்சியான பிக்பாஸ் தொடரின் சீசன்-5 விரைவில் தொடங்கவிருக்கும் நிலையில் அதில் பங்கேற்கும் போட்டியாளர்கள் குறித்து உறுதிப்படுத்தாத தகவல்கள் நாள்தோறும் வெளிவந்து கொண்டிருக்கிறது.

இதில் டிக்டாக் பிரபலம் ஜி.பி.முத்துவும் ஒருவர்.இதனை உறுதிப்படுத்தும் வகையில் பிக்பாஸ் வீட்டின் முன் தான் இருக்கும் புகைப்படத்தை அவர் பகிர்ந்திருந்ததையடுத்து ஜி.பி.முத்து இந்நிகழ்ச்சியில் கலந்துக் கொள்வதாக தகவல் வெளியாகி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக சமூக வலைத்தளங்களில் மீம்ஸ்களும் வைரலானது.இந்நிலையில் இந்த கேள்விகளுக்கு ஜி.பி.முத்து பதிலளித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் பிக்பாஸ் வீட்டுக்குள் நான் இருப்பது பற்றி நானே யோசித்து தான் சொல்ல வேண்டும். ஏனென்றால் மொபைல் இல்லாமல் ஒரு நாள் கூட என்னால் இருக்க முடியாது என கூறியுள்ளார்.

அதேசமயம் என்னுடைய குழந்தைகளை பார்க்காமலும் என்னால் இருக்க முடியாது. எத்தனை தடைகள் வந்தாலும் எனக்கு, என்னுடைய மனைவியும் குழந்தைகளும் தான் முக்கியம். அவர்களை பார்க்காமல் என்னால் இருக்கவே முடியாது என தெரிவித்துள்ளார்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

குத்துப் பாட்டு மூலம் பாடகியாக அறிமுகமான லாஸ்லியா!

Admin

மீண்டும் அரசியலுக்கு வருகிறாரா ரஜினி? வெளியான பரபரப்பு செய்தி?

Admin

தி ஃபேமிலி மேன் 2 தொடரை உடனே தூக்குங்க: அமேசானுக்கு கடிதம் எழுதிய சீமான்

Admin

விஜய்க்கு வில்லனாகும் செல்வராகவன்.. தெறிக்கவிடும் பீஸ்ட் அப்டேட்..

Admin

தொரட்டி படத்தின் கதாநாயகன் ஷமன் மித்ரு கொரோனாவால் பலி!

Admin

40 கல்யாணம் பண்ணுவேன் நான்: வனிதா பரபரப்பு பேட்டி!

Admin

அமெரிக்கா செல்கிறார் ரஜினிகாந்த்.. தனி விமானத்தில் பயணிக்க மத்திய அரசு அனுமதி

Admin

மாஸ் லுக்கில் ரஜினி… பட்டையை கிளப்பும் அண்ணாத்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்…

Admin

உலகளவில் சிறந்த 25 படங்கள்! யோகிபாபு , தனுஷ் நடித்த படங்கள் தேர்வு!

Admin

பெரும் வரவேற்பைப் பெற்ற அனபெல் சேதுபதி டிரைலர்

நடிகர் விவேக் பங்கேற்ற கடைசி நிகழ்ச்சி… ஓடிடி வெளியீட்டு தேதி அறிவிப்பு

Admin

ரூ.1.3 கோடிக்கு கார்!: குக் வித் கோமாளி குழுவினர் குதூகலம்…

Admin

Leave a Comment