- தமிழ்நாடு
- இந்தியா
- உலகம்
- அரசியல்
- நூல் அறிமுகம்
- சினிமா
- தமிழ்
- தொடர்கள்
- நலவாழ்வு
- உணவு
- வரலாறு
- வினோதங்கள்
- Public Post
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: Admin
ஊரடங்கு தளர்வினால் நீண்ட நாட்களுக்கு பிறகு திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையில் எலிகள் ஒயினை குடித்சம்பவம் அரேங்கேறியுள்ளது. உலகில் படைக்கப்பட்ட அனைத்து உயிர்களும் இயற்கைக்கு நன்மை செய்பவைதாம். மரங்களின் விதைகள் பல்வேறு இடங்களில் பரவுவதற்கு எலிகளின் பங்கு மிகவும் அவசியம். உலகின் உணவுச்சங்கிலி நிச்சயம் எலிகளின்றி முழுமை பெறாது. அதே சமயம் எலிகள் சில சமயம் தனது சேட்டைகளால் மனித குலத்துக்கு அவ்வப்போது தொந்தரவு கொடுத்து வருகிறது. அந்த வகையில் தான் , நீலகிரி மாவட்டம் கூடலூர் காலம்புழா பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை இன்று (ஜூலை 05) காலை மேற்பார்வையாளர் செந்தில்குமார், விற்பனையாளர் நித்தியாநந்தன் ஆகியோர் திறந்தனர். அப்போது, கடையில் இருந்த 12 குவாட்டர் பாட்டில்களின் மூடியை சேதப்படுத்தி இருந்ததுடன், அதிலிருந்த ஒயின் காலியாக இருப்பதை கண்டு, ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். கடையில் நடந்தது என்ன என்பது குறித்து ஊழியர்கள் சோதனை செய்தபோது எலிகள் பாட்டில்களை கீழே தள்ளி, மூடிகளை சேதப்படுத்தி…
அமெரிக்காவில். கால்பந்து வீரர் தனது காதலியிடம் காதலை மைதானத்தில் வெளிப்படுத்திய வீடியோ வைரலாகி வருகிறது. அமெரிக்காவைச் சேர்ந்த 24 அணிகள் மற்றும் கனாடாவைச் சேர்ந்த 3 அணிகள் என மொத்தம் 27 அணிகள் பங்கேற்று விளையாடும்மேஜர் லீம் சாக்கர் கால்பந்து தொடர் நடந்து வருகிறது இதில் தொடரின் ஒரு போட்டியில், மின்னிசோட்டா எஃப்.சி மற்றும் சான் ஜோஸ் எர்த்குவேக் ஆகிய அணிகள் நேற்று மோதின. இந்த போட்டியின் முடிவில் 2-2 என இரு அணிகளும் தலா இரண்டு கோல்களை அடித்து போட்டி டிரா ஆனது. இந்த நிலையில், போட்டி முடிந்தவுடன் மின்னிசோட்டா எஃப்.சி அணியைச் சேர்ந்த ஹஸ்ஸானி டாட்சன் ஸ்டீபன்சன் என்ற வீரர், அவரது காதலியிடம் .மைதானத்தில் மண்டியிட்டு மோதிரத்தை பரிசளித்து தனது காதலியிடம் ப்ரொபோஸ் செய்தார்.மைதானத்தில் இருந்த ரசிகர்கள் உற்சாகப்படுத்த காதலை சொன்னவுடன் வெட்கபட்ட ஹஸ்ஸானி காதலி கட்டித்தழுவி காதலை ஏற்றுக்கொண்டார். ஹஸ்ஸானி விளையாடி அந்த போட்டியில் என்னமோ அவரது…
சென்னையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து தேமுதிக சார்பில் பிரேமலதா விஜயகாந்த் சைக்கிள் ஓட்டி எதிர்ப்பை தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை உச்சத்தை தொட்டுள்ளது. ஒரு லிட்டர் பெட்ரோலில் விலை 100 ரூபாயைக் கடந்த நிலையில் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். பல்வேறு அரசியல் தலைவர்கள் பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து தேமுதிக சார்பில் அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா தலைமையில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில், சைக்கிளில் வந்து பிரமேலதா விஜயகாந்த் பங்கேற்றார். இதைத் தொடர்ந்து உரையாற்றிய அவர், பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்ந்தால் சாமானிய மக்கள் எவ்வாறு வாழ முடியும் எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.
பிக்பாஸ் லாஸ்லியா தான் நடித்துள்ள பிரண்ட்ஷிப் படத்தில் இடம்பெறவுள்ள “அடிச்சு பறக்கவிடுமா” பாடல் பாடியுள்ளதன் மூலம் பாடகியாகவும் அறிமுகமாகி உள்ளார். இலங்கை செய்தி வாசிப்பாளராக இருந்து வந்த லாஸ்லியா பிக்பாஸ் 3 நிகழ்ச்சி மூலம் தமிழ் ரசிகர்களிடம் அறிமுகமானார். இந்த நிகழ்ச்சி மூலம் தனக்கென ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கிய லாஸ்லியா தற்போது ‘பிரண்ட்ஷிப்’ என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணிப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இப்படத்தின் ‘அடிச்சு பறக்கவிடுமா’ என்ற பாடலை லாஸ்லியா பாடியுள்ளார். இந்தப் பாடல் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. நடிகையாக கலக்க ஆரம்பித்துள்ள லாஸ்லியா படகியாகவும் மக்கள் மனதைக் கொள்ளை கொள்ளத் துவங்கியுள்ளார்.
வில்லேஜ் குக்கிங் என்ற தமிழ் யூடியூப் சேனல் நிர்வாகிகள் முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்து ரூ.10 லட்சம் ரூபாய் நிவாரண நிதியை வழங்கியுள்ளனர். புதுக்கோட்டையைச் சேர்ந்த 6 பேர் யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்து அதில் சமையல் செய்யும் வீடியோவை வெளியிட்டனர். முதல் வீடியோவுக்கே மிகப்பெரிய வரவேற்பை பெற்றதை அடுத்து சமையல் தொடர்பாக பல வீடியோக்கள் பதிவு செய்தனர். இந்த நிலையில் இன்று அந்த யூடியூப் சேனலுக்கு ஒரு கோடி சப்ஸ்கிரைபர் கிடைத்துள்ளது. இந்த நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து, இந்த யூடியூப் சேனலின் நிர்வாகிகள் 10 லட்சம் ரூபாயை நிவாரண நிதிக்கு வழங்கி உள்ளனர். ஒரு கிராமத்தில் விவசாயம் செய்து கொண்டிருந்த 6 பேர் யூடியூப் சேனலை ஆரம்பித்து இன்று கோடீஸ்வரர்களாக உள்ளது அனைவரிடமும் ஆச்சரியத்தையும் ஊக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
உத்திரபிரதேசத்தில் இன்று முதல் திரையரங்குகளை திறக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. உத்திர பிரதேசத்தில் கொரோனாவின் தாக்கம் அதிகரிக்க, பரவலை கட்டுப்படுத்த மாநில அரசு ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது பாதிப்பு படிப்படியாக குறைந்து வருவதால் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி இன்று இதல் திரையரங்குகள், உடற்பயிற்சி கூடங்கள், மல்டிபிளெக்ஸ்கள், விளையாட்டு அரங்குகள் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை திறக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இவை வாரத்தில் 5 நாட்களுக்கு மட்டுமே திறக்கவும் 50 சதவீதம் வாடிக்கையாளர்களுடன் இயங்கவும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.திரையரங்குகளை பொறுத்தவரை டிக்கெட்டுகள் ஆன்லைன் மூலம் மட்டுமே விநியோகிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள உடற்பயிற்சி கூடங்களை திறக்க அனுமதியில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சர்வதேச அளவில் பிரபல ஆன்லைன் வர்த்தக நிறுவனமாக விளங்கும் அமேசானின் தலைமை செயல் அதிகாரி ஜெஃப் பிஸோஸ் பதவியிலிருந்து விலக முடிவு செய்துள்ளார். அமேசான் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான ஜெஃப் பெசோஸ், 200 பில்லியன் டாலர் செல்வத்தை ஈட்டிய உலகின் முதல் நபராக மாறியுள்ளார். சுமார், 56 வயதான அவர் தற்போது 205 பில்லியன் டாலர் மதிப்புடையவர். உலகின் நம்பர் ஒன் பணக்காரரான இவர், இன்று அமேசான் சி.இ.ஓ. பதவியை விட்டு விலக உள்ளார். காரணம் ஜெஃப் பிஸோஸ் தனது தனியார் விண்வெளி ஆய்வு நிறுவனம் விரிவாக்கப் பணிகளில் ஈடுபட உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் அமேசானின் நிர்வாகத் தலைவராக அவர் நீடிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக ஆண்டி ஜாஸி புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக பொறுப்பேற்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்துக்களும் முஸ்லீம்களும் தங்களை ஆதிக்க சக்தியாக நினைத்துக் கொள்ளக்கூடாது என ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். புத்தக வெளியீட்டு நிகழ்வு ஒன்றில் பேசிய அவர், இஸ்லாமியர்களை இந்தியாவை விட்டு வெளியேறுமாறு கூறுபவர்கள் தங்களை இந்துக்கள் என கூறிக்கொள்ள தகுதியற்றவர்கள் எனக் கடுமையாக விமர்சித்தார். மேலும் இந்தியாவில் இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பில்லை என்ற அச்சத்தை சிலர் உருவாக்க நினைப்பதாகவும், அதுபோன்ற தவறான பேச்சுக்களில் அவர்கள் சிக்கிக்கொள்ளக்கூடாது என்றும் கேட்டுக்கொண்டார். அதேபோல் இரு மதங்களுக்கு இடையேயான பிரச்னையை பேச்சுவார்த்தை மூலமே தீர்க்க வேண்டும். ஒருபோதும் ஒற்றுமைக்கான பணியை அரசியல் கட்சிகளிடம் ஒப்படைத்து விடக்கூடாது எனவும் மோகன் பகவத் கூறியுள்ளார். அனைவரும் இந்தியர்கள் என்ற எண்ணமே மனதில் இருக்க வேண்டும் என குறிப்பிட்ட அவர், பசுக்காவலர்கள் என்ற பெயரில் தாக்குதல் நடத்துவது இந்துத்துவாவுக்கு எதிரானது என குறிப்பிட்டார்.
தோனி குறித்து இந்திய அணி வீரர் கே.எல்.ராகுல் கூறியிருக்கும் நெகிழ்ச்சி தகவல் ஒன்று ரசிகர்களின் மனதை உருகவைத்துள்ளது. இந்திய அணியின் வெற்றி கேப்டனாக வலம் வந்த எம்.எஸ். தோனி கடந்தாண்டு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். அவரின் சாதனைகளை நாடுகள் கடந்து ரசிகர்களும் அவ்வளவு எளிதில் மறக்காது இன்று வரை ரசிகர்கள் மிஸ் செய்வது சமூக வலைதளங்களில் நம்மால் காண இயலும். இந்த நிலையில் இந்திய அணியின் வீரர் கே.எல்.ராகுல் தோனி குறித்து கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். அதில் கேப்டன் என்று கூறினாலே அனைவரின் மனதிலும் முதலில் வருவது தோனியாக தான் இருக்கும் என்றும், இந்த தலைமுறைக்கு அப்படி ஒரு தாக்கத்தை அவர் ஏற்படுத்தியுள்ளார் என்றும் கூறியுள்ளார். மேலும் ஒரு கேப்டனுக்கு மிகப்பெரும் வெற்றி என்பது சக அணி வீரர்கள் அவருக்கு மிகுந்த மரியாதையை கொடுப்பது தான். தோனிக்காக எங்களில் யார் வேண்டுமானாலும் துப்பாக்கி தோட்டாவை நெஞ்சில் வாங்கிக் கொள்வோம். யோசிக்க…
இங்கிலாந்தைச் சேர்ந்த பெண் குழந்தை மிகவும் அரிதான மரபணு நோயால் பாதிக்கப்பட்டிருப்பது காண்பவர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த அலெக்ஸ் மற்றும் டேவ் என்ற தம்பதியினருக்கு கடந்த ஜனவரி 31 ஆம் தேதி பெண் குழந்தை பிறந்தது. லெக்ஸி ராபின்ஸ் என பெயரிடப்பட்ட அக்குழந்தை பிறந்த சில நாட்களில் கை விரல்களில் அசைவின்மை உள்ளிட்ட பிரச்சனைகள் இருப்பதை கண்டறிந்த அவரது பெற்றோர் மருத்துவர்களிடம் பரிசோதனை செய்துள்ளனர். இதில் அக்குழந்தை ஃபைப்ரோடிஸ்பிளாசியா ஆசிஃபிகான்ஸ் புரோகிரிசிவா (FOP) எனும் மிகவும் அரிய வகை மரபணு நோயால் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெற்றோரை இன்னொரு தகவலும் துன்பத்திற்குள்ளாக்கியது. 20 லட்சம் பேரில் ஒருவரை மட்டுமே தாக்கக்கூடிய இந்த FOP நோய்வாய்ப்பட்ட ஒருவரின் உடலில் உள்ள தோல் கொஞ்சம் கொஞ்சமாக கல்லாக மாறும் என்றும் இவர்களின் ஆயுட்காலம் அதிகபட்சம் 40 ஆண்டுகள் மட்டுமே இருக்கும் எனவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். குழந்தைக்கு எந்தவொரு…
