Author: Admin

பாஜகவுடன் கூட்டணி வைத்ததால்தான் தேர்தலில் தோல்வி அடைந்தோம் என்ற அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியதற்கு பாஜக மாநிலச் செயலாளர் கே.டி.ராகவன் பதிலடி அளித்துள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தலில் பாஜக – அதிமுக கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொண்ட நிலையில் தோல்வியை தழுவி எதிர்கட்சியாக இடம்பெற்றுள்ளது. சமீப காலமாக தேர்தல் தோல்வி குறித்து இரு கட்சிகளிடையே கருத்து வேறுபாடுஎழுந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில்சமீபத்திய செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய முன்னாள் அதிமுக அமைச்சர் சி.வி.சண்முகம் பாஜகவுடன் கூட்டணி அமைத்ததால்தான் தேர்தலில் தோற்றோம்’ என பேசியது கூட்டணி கட்சிகளான அதிமுக பாஜக இடையேசர்ச்சையை ஏற்படுத்தியது.  இவ்வாறான சூழ்நிலையில் இதற்கு பதிலளித்துள்ள பாஜக மாநில பொது செயலாளர் கே.டி.ராகவன் ‘உங்களால்தான் என்ற எண்ணம் எங்களிடமும் உண்டு’ என கூறியுள்ளார்.

Read More

நடிகை சாந்தினி பாலியல் குற்றச்சாட்டு கூறிய வழக்கில் கைதான முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது நடிகை சாந்தினி முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் கூறியதால்அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். தற்போது சிறையில் இருந்து வரும் மணிகண்டன் ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார் இந்த மனு மீதான விசாரணை கடந்த சில நாட்களாக நடைபெற்ற நிலையில் சற்று முன் இந்த மனுவுக்கு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. அதில், முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது முன்னாள் அமைச்சர் மணிகண்டன் அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இரண்டு வாரங்களுக்கு ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்றும் அவரது பாஸ்போர்ட்டை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என நிபந்தனை விதித்து அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது

Read More

மேகதாது அணையை கட்டுவதில் கர்நாடக அரசு உறுதியாக உள்ளது என முதலமைச்சர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். மேகதாது அணை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா, காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டுவது உறுதி என்றும், கர்நாடக மக்களுக்கு அதில் சந்தேகம் தேவையில்லை எனவும் கூறினார். இந்த அணையால் தமிழகம் மற்றும் கர்நாடகா ஆகிய இரு மாநிலங்களுக்கும் நன்மை ஏற்படும் என குறிப்பிட்ட அவர், மேகதாது அணை சட்ட ரீதியில் கட்டி முடிக்கப்படும் எனவும் உறுதியளித்துள்ளார். மேகதாது அணை கட்டப்படுவதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது எனவும் எடியூரப்பா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். முன்னதாக மேகதாது அணையால் காவிரியில் தமிழகத்திற்கு வரும் நீர்வரத்து தடுக்கப்படும் என்பதால், அதனை செயல்படுத்த வேண்டாம் என வலியுறுத்தி எடியூரப்பாவுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Read More

கர்நாடகா உள்ளிட்ட 8 மாநில ஆளுநர்களை மாற்றி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கர்நாடகத்திற்கு தாவர் சந்த் கெலாட், அரியானாவிற்கு பண்டாரு தத்தாத்ரேயா, கோவா மாநிலத்திற்கு ஸ்ரீதர் பிள்ளை, மத்திய பிரசதேத்திற்கு மங்குபாய்படேல், மிசோரமிற்கு ஹரிபாபு, ஹிமாச்சல் பிரதேசத்திற்கு ராஜேந்திரன் விஸ்வநாத், திரிபுராவிற்கு சத்யதேவ் நாராயணன், ஜார்கண்ட் ரமேஷ்பயல் ஆகியேரை மாநில ஆளுநர்களாக நியமித்திருக்கிறார் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த். இதில் கர்நாடகமாநிலத்திற்கு நியமிக்கப்பட்டுள்ள தாவர் சந்த் கெலாட், அரியானா மாநிலத்திற்கு நியமிக்கப்பட்டுள்ள பண்டாரு தத்தாத்ரேயா ஆகியோர் மத்திய அமைச்சர்களாக பதவி வகித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனலுக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையைச் சேர்ந்த 6 பேர் யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்து அதில் சமையல் செய்யும் வீடியோவை வெளியிட்டனர். முதல் வீடியோவுக்கே மிகப்பெரிய வரவேற்பை பெற்றதை அடுத்து சமையல் தொடர்பாக பல வீடியோக்கள் பதிவு செய்தனர். இந்த நிலையில் இன்று அந்த யூடியூப் சேனலுக்கு ஒரு கோடி சப்ஸ்கிரைபர் கிடைத்துள்ளது. ஒரு கோடி சப்ஸ்கிரைப்களைக் கொண்ட முதல் தமிழ் யூடியூப் சேனல் இன்று பெருமையை பெற்றுள்ளது வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல். இந்த நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து, இந்த யூடியூப் சேனலின் நிர்வாகிகள் 10 லட்சம் ரூபாயை நிவாரண நிதிக்கு வழங்கினர். இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தனது பேஸ்புக் பக்கத்தில், “வில்லேஜ் குக்கிங் சேனல் அடைந்த உயரத்திற்கு எனது இதயப்பூர்வமான வாழ்த்துக்கள். தமிழக அரசுக்கு கொரோனா நிவாரணமாக தங்களது பங்களிப்பை அளித்ததற்கும்…

Read More

ஆபாசமாக பேசி யூடியூப்பில் வீடியோ வெளியிட்ட வழக்கில் கைதான பப்ஜி மதனின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு. தடை செய்யப்பட்ட பப்ஜி விளையாட்டை யூ-டியூப் சேனல் மூலம் நேரலை ஒளிபரப்பு செய்து, பெண்கள் குறித்து ஆபாசமாக பேசி வந்தார் மதன். இந்த நிலையில் மதன் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், மதனின் வங்கிக் கணக்குகளை முடக்கி, அவரின் சொகுசு கார்களையும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். இதனிடையே தனக்கு எதிராக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் எதுவும் உண்மை இல்லை என கோரி மதன் ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவானது முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி முன் விசாரணைக்கு வந்தது. அதில் விசாரணை முழுமையாக முடிவடையாததால், தற்போது மதனுக்கு ஜாமீன் வழங்க கூடாது என்றும் ஜாமீன் வழங்கினால்  சாட்சிகளை கலைக்க வாய்ப்புள்ளது’ என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.…

Read More

கோவிலில் சாமி வந்தவரிடம் அஜித் ரசிகர்கள் வலிமை அப்டேட் கேட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. நடிகர் அஜித் – இயக்குனர் வினோத் கூட்டணியில் உருவாகி வரும் வலிமை படம் குறித்து அப்டேட் கேட்டு ரசிகர்கள் டையடாகி விட்டனர். இந்த படத்தின் அப்டேட்டுக்காக வெறித்தனமாக காத்திருக்கும் அஜித் ரசிகர்கள், மோடி, எடப்பாடி தொடங்கி இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் மொயீன் அலியிடம் கூட அப்டேட் கேட்டு அதிர்ச்சி கொடுத்தனர். அஜித் தரப்பில் அறிக்கையே விட்ட நிலையிலும் அடங்காத அஜித் ரசிகர்கள், சாமி வந்த ஒருவரிடம் வலிமை அப்டேட் கேட்கும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. கன்னியாகுமரியில் அஜித் ரசிகர்கள் கோயில் ஒன்றில் பூசாரியிடம் வலிமை அப்டேட் கேட்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது

Read More

தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் அடுத்த 5 மாதத்திற்கு இலவசமாக கூடுதலாக 5 கிலோ அரசி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை சாஸ்திரி பவனில் தென் மண்டல இந்திய உணவு கழக இயக்குனர் நசீம் மற்றும் தமிழக பொது மேலாளர் சைஜூ ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது மத்திய அரசு ரூ. 18க்கு நெல்லை கொள்முதல் செய்து, 1 கிலோ அரிசிக்கு ரூ.38 வரை செலவு செய்வதாகவும், அதனை மாநில அரசுகள் அரிசி ரூ.3க்கும், கோதுமை ரூ.2க்கும் விற்பனை செய்வதாகவும் தெரிவித்தனர். பிரதமரின் கரிப் கல்யாண் திட்டத்தின் கீழ் கொரோனா நேரத்தில் 80 கோடி மக்களுக்கு எப்போதும் வழங்கப்படும் 5 கிலோ அரிசியை விட கூடுதலாக 5 கிலோ அரசி வழங்கப்பட்டதாகவும், இந்த திட்டம் அடுத்த 5 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டு உள்ளதாகவும் கூறினார். தமிழகத்திற்கு எப்போதும் 3 லட்சத்து 6 ஆயிரம் டன் வழங்கி வருவதாகவும், தற்போது பிரதமர் யோஜனா…

Read More

சிவசிங்கர் பாபா’வின் பக்தைகள் ஐந்து பேருக்கு நிபந்தனை முன் ஜாமின் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தவிட்டுள்ளது மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக சிவசங்கர் பாபாவை சிபிசிஐடி கைது செய்த நிலையில்தேடப்பட்டு வந்த பள்ளியின் ஆசிரியை தீபா வெங்கடராமன், ஜானகி சினிவாசன், கருணாம்பிகை, திவ்யா, பாரதி முன் ஜாமீன் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த நிலையில் இன்று இது தொடர்பான வழக்கினை விசாரித்த நீதி மன்றம் பதிவு செய்யப்பட்ட ஒப்புதல் வாக்குமூலத்தை காவல்துறையினர் தாக்கல் செய்தனர் சிவசங்கர் பாபா மீதான குற்றச்சாட்டுகளில் இவர்களுக்கு எந்த நேரடி தொடர்பும் இல்லை என தீர்பளித்த நீதிபதிகள். இவர்கள் காவல் நிலையத்தில் 2 வாரங்களுக்கு கையெழுத்து இட வேண்டும்; பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும் நிபந்தனையோடு ஜாமீன் வழங்கினர்.

Read More

திருச்சியை சேர்ந்த பாதிரியார் ஸ்டேன் சாமி, கடந்த 2018ஆம் ஆண்டில் பீமா கோரேகான் வன்முறையை தூண்டியதாகவும், எல்கர் பரிஷத் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசியதன் மூலம் வன்முறையை ஏற்படுத்தியதாகவும் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இவர், தலேஜா சிறையில் பர்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். ஸ்டேன் சாமிக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க மனித உரிமைகள் ஆணையமும், ஐநா முக்கிய பிரமுகரும் அறிவுறுத்தி இருந்த நிலையில் அவர் சிறையிலேயே காலமானார். சமூக ஆர்வலர் ஸ்டேன் சாமியின் மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரஙகலை தெரிவித்து வரும் நிலையில் வி.சி.க கட்சி தலைவர் திருமாவளவன் தனது ட்விட்டர் பதிவில் பாஜக அரசால் பொய்வழக்கில் கைதுசெய்யப்பட்ட பழங்குடி மக்களின் பணியாளர் பாதிரியார் ஸ்டான்சாமி உயிரிழந்தார் பாஜக அரசு சட்டத்தின் துணையோடு செய்திருக்கும் படுகொலையென்றே கூறவேண்டும். பாஜக அரசு சட்டத்தின் துணையோடு செய்திருக்கும் படுகொலையென்றே கூறவேண்டும். பாஜக அரசின் இந்த ‘சட்டம்சார் பயங்கரவாதத்தை’ வன்மையாகக் கண்டிக்கிறோம்” எனக் கூறியுள்ளார்.

Read More