பப்ஜி மதன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது..!!

SHARE

ஆபாசமாக பேசி யூடியூப்பில் வீடியோ வெளியிட்ட வழக்கில் கைதான பப்ஜி மதனின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு.

தடை செய்யப்பட்ட பப்ஜி விளையாட்டை யூ-டியூப் சேனல் மூலம் நேரலை ஒளிபரப்பு செய்து, பெண்கள் குறித்து ஆபாசமாக பேசி வந்தார் மதன். இந்த நிலையில் மதன் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும், மதனின் வங்கிக் கணக்குகளை முடக்கி, அவரின் சொகுசு கார்களையும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். இதனிடையே தனக்கு எதிராக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் எதுவும் உண்மை இல்லை என கோரி மதன் ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார்.
 
இந்த மனுவானது முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி முன் விசாரணைக்கு வந்தது. அதில் விசாரணை முழுமையாக முடிவடையாததால், தற்போது மதனுக்கு ஜாமீன் வழங்க கூடாது என்றும் ஜாமீன் வழங்கினால்  சாட்சிகளை கலைக்க வாய்ப்புள்ளது’ என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை கேட்ட நீதிபதி, மதனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார்.

இந்நிலையில் பப்ஜி மதன் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவு பிறப்பித்துள்ளார்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

அதிமுகவுக்கு ஆதரவாக செயல்பட்ட 34 இன்ஸ்பெக்டர்கள்… டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி உத்தரவு

Admin

பெண்களின் துன்ப வாழ்க்கைக்கு விடியலை தாங்க ஸ்டாலின்… வானதி சீனிவாசன் போராட்டம்

Admin

ஜெயலலிதா மரணம் விவகாரம்: 90% விசாரணை முடிந்துவிட்டது – ஆறுமுகசாமி ஆணையம் தகவல்

Admin

ஆடி அமாவாசையும் முன்னோர் வழிபாடும்…

ஜூன் 4 ஆம் தேதி ரிசல்ட் : தமிழ்நாட்டுக்கு தேர்தல் எப்போது? வெளியானது தேர்தல் தேதி

Admin

நடிகர் ஆர்யா மோசடி செய்யவில்லை… ஜெர்மனி பெண் விவகாரத்தில் சென்னை காவல் ஆணையர் விளக்கம்..

Admin

வெளியானது பிளஸ் 2 ரிசல்ட்.. மதிப்பெண்களில் திருப்தி இல்லையெனில் தேர்வு எழுதலாம்

Admin

செப்டம்பர் 15- வரை ஊரடங்கு நீட்டிப்பு : எவற்றுக்கெல்லாம் தடை

Admin

அம்மா மினி கிளினிக்குகள் விரைவில் திறக்கப்படும் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Admin

கவனம் ஈர்க்கும் கரூர் மாவட்ட ஆட்சியர் … என்ன செய்தார் தெரியுமா?

Admin

ஆவி பிடித்தால் நுரையீரல் பாதிப்பு வரலாம்!: சுகாதாரத் துறை அமைச்சர் எச்சரிக்கை!.

நாளை டாஸ்மாக் கடைகள் திறப்பு… வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு

Admin

Leave a Comment