- தமிழ்நாடு
- இந்தியா
- உலகம்
- அரசியல்
- நூல் அறிமுகம்
- சினிமா
- தமிழ்
- தொடர்கள்
- நலவாழ்வு
- உணவு
- வரலாறு
- வினோதங்கள்
- Public Post
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: Admin
இமாச்சலப்பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் வீரபத்ர சிங்கின் மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளார். இமாச்சலப்பிரதேச முன்னாள் முதல்வர் வீரபத்ர சிங் உடல்நலக்குறைவு காரணமாக இன்று அதிகாலை காலமானார். அவருக்கு வயது 87. கொரோனவால் பாதிக்கப்பட்டு ஏப்ரல் 13ம் தேதி மேக்ஸ் மருத்துவமனையில் வீரபத்ர சிங் சிகிச்சை பெற்று நலமுடன் திரும்பினார். சில நாட்களுக்கு பின்பு சிம்லாவில் உள்ள இந்திரா காந்தி மருத்துவமனையில் வீரபத்ர சிங் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை காலமானார்.இமாச்சலப்பிரதேச மாநிலத்தில் 9 முறை எம்எல்ஏவாகவும், 6 முறை முதல்வராகவும் இருந்தவர் வீரபத்ர சிங். இந்த நிலையில் வீரபத்ர சிங் மறைவுக்கு பிரதமர் மோடி, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ராகுல்காந்தி உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் வீரபத்ர சிங் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
கே.ஜி.எஃப். 2 படத்தின் தமிழ் வெளியீட்டு உரிமையை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான படம் கே.ஜி.எஃப். 1. இந்த படம் பல மொழிகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதைத் தொடர்ந்து கே.ஜி.எஃப். 2 படம் தயாரிக்கப்பட்டு வெளியாக உள்ளது. இந்நிலையில் கே.ஜி.எஃப். 2 படத்தின் தமிழ் வெளியீட்டு உரிமையை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. விரைவில் இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன
புதிதாக விரிவாக்கம் செய்யப்பட்ட மத்திய அமைச்சரவையில் யார் யாருக்கு என்னென்ன பதவி என்ற தகவல் வெளியாகியுள்ளது. .மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. 43 அமைச்சர்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப் பிரமாணமும் ரகசியக் காப்பு பிரமாணமும் செய்துவைத்தார். இவர்களில் 15 பேர் கேபினட் அமைச்சர்களாகப் பதவியேற்றனர். இன்று பதவியேற்றவர்களில், 7 பேர் பெண்கள் மற்றும் எட்டு பேர் மருத்துவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. யார் யாருக்கு என்ன பதவி: மீன்வளம், கால்நடை, பால்வளத்துறை, தகவல் ஒலிபரப்புத் துறை இணை அமைச்சராகியுள்ளார் தமிழக பாஜகவின் எல்.முருகன். தர்மேந்திர பிரதான்: கல்வி மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை ஹர்தீப் சிங் புரி: பெட்ரோலியம் ஊரக வளர்ச்சி வீட்டு வசதித் துறை பியூஷ் கோயல்: ஜவுளித் துறை மற்றும் நுகர்வோர் நலத்துறை ஸ்மிருதி இராணி: பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை மற்றும் தூய்மை இந்தியா திட்டம் மன்சுக் மாண்டவியா: சுகாதாரம், உரம் மற்றும் ரசாயனத் துறை…
தமிழக பாஜகவின் அடுத்த தலைவர் அண்ணாமைதான் என கூறப்படுகிறது. பிரதமர் மோடி தலைமையில் விரிவாக்கம் செய்யப்பட்ட புதிய அமைச்சரவையில் இடம்பெற்றார் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன். அவர் இன்று மத்திய அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார். எல்.முருகன் மத்திய அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டதால், தமிழக பாஜகவின் அடுத்த தலைவர் யார்? என்ற கேள்வி எழுந்துள்ளநிலையில் தமிழக பாஜகவின் துணைத்தலைவராக இருக்கும் அண்ணாமலைதான் தமிழக பாஜகவின் அடுத்த தலைவர் என்று அவருக்கு பலரும் தெரிவித்து வருகின்றனர். அதே சமயம் தமிழக பாஜகவின் அடுத்த தலைவர் யார் என்பது குறித்து முடிவு செய்ய அண்ணாமலை மற்றும் திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் இருவரின் பெயரும் இருப்பதாக பாஜக வட்டார செய்திகள் தெரிவிக்கின்றன.
மத்திய அமைச்சரவை விரிவாக்கம் குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் மத்திய அமைச்சரவையில் தமிழர் ஒருவர் இடம்பெற்றிருந்தும் மகிழ்ச்சி இல்லை என்றும் இதனால் நாட்டுக்கு என்ன பயன் என்று கூறியுள்ளார். புதிதாக பதவியேற்றுள்ள மத்திய அமைச்சர்களில் தமிழகத்தைச் சேர்ந்த பாஜக தலைவர் எல்.முருகனும் ஒருவர். இந்த நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழகத்திற்கு ஒரு மத்திய அமைச்சர் கிடைத்திருக்கிறார் என்று மகிழ முடியாதபடி இருக்கிறது . அமைச்சரவை விரிவாக்கம். நாடு அனைத்துத் துறைகளிலும் பின்னடைந்திருக்கிறது. இந்தச் சரிவிலிருந்து மீளும் நோக்கத்தில் அமைச்சரவை மாற்றம் நடந்திருக்கவேண்டும். ஆனால், உள்கட்சித் தலைவர்கள், வேறு கட்சிகளிலிருந்து இணைந்தவர்கள், வரவிருக்கிற மாநில தேர்தல்கள் ஆகியவற்றை மனதில் வைத்து நடந்திருக்கும் இந்த விரிவாக்கம் பாஜகவிற்கு வேண்டுமானால் நன்மை பயக்கலாம். நாட்டிற்கு இதனால் ஆகப்போவதென்ன? என கேள்விஎழுப்பியுள்ளார்.
முதுமலை காப்பகத்திலுள்ள யானைகளுக்கு ஹெர்ப்பிஸ் வைரஸ் தாக்கம் இல்லை என ஆய்வு முடிவில் வெளியாகியுள்ளதாக வனதுறையினர் தெரிவித்துள்ளனர். கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் கோட்டூர் அருகே காப்புகாடு பகுதியில் யானைகள் முகாம் உள்ளது. வனப்பகுதிகளில் பிடிக்கப்படும் யானைகள், தாயை இழந்து தவிக்கும் குட்டி யானைகள் இங்கு பராமரிக்கப்பட்டு வருகின்றன. தற்போது, குட்டிகள் உள்பட 50க்கும் மேற்பட்ட யானைகள் இங்கு உள்ளன. இந்நிலையில், இந்த முகாமில் உள்ள யானைகளை ஹெர்ப்பிஸ் என்ற வைரஸ் தாக்கி வருவது சமீபத்தில் கண்டறியப்பட்டது. கடந்த வாரம் ஒன்றரை வயதுடைய குட்டி என்ற பெயரிடப்பட்ட பெண் யானை குட்டி வைரஸ் தாக்கி இறந்தது.இதுபற்றி தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 3 யானை குட்டிகளுக்கு ஹெர்ப்பிஸ் வைரஸ் பாதிப்பு இருந்தது கண்டறியப்பட்டது. இந்த நிலையில் முதுலையில் உள்ள யானைகளுக்கு நடத்தப்பட்ட கொரோனா சோதனையின் போது ஹெர்ப்பிஸ் வைரஸ் ட்யூபர்க்ளோசஸ் போன்ற நோய்களுக்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உத்தரபிரதேசத்தில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பட்ட நிலையில் முடிவுகளில்…
பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் இரண்டரை கோடி ரூபாய் மதிப்பிலான உயர்ரக மெர்சிடிஸ் பென்ஸ் காரை வாங்கியுள்ளார். பிரபல மெர்சிடிஸ் பென்ஸ் கார் நிறுவனம் இந்தியாவில் 23 கார்களை விற்பனை செய்கிறது. பென்ஸ் கார் நிறுவனம் தன்னுடைய ப்ரீமியம் எடிஷன் கார் ரகமான Maybach வகையில் Mercedes Benz Maybach SUV GLS 600 4Matic என்ற காரை இந்திய சந்தையில் களமிறக்கியுள்ளது. இந்த நிலையில் நடிகர் ரன்வீர் சிங் நேற்று தனது 36-வது பிறந்த நாளை கொண்டாடிய நிலையில் மெர்சிடிஸ் பென்ஸ்யின் உயர்ரக காரான Mercedes Benz Maybach SUV GLS 600 4Matic காரை வாங்கியுள்ளார். இதன் ஆன் ரோட் விலை இரண்டரை கோடியாம்.அண்மையில் ரன்வீர் சிங் 3 கோடி ரூபாய் மதிப்பிலான லம்போர்கினி யூரஸ் வகை காரை வாங்கிய நிலையில் தற்போது மெர்சிடீஸ் பென்ஸ் காரை வாங்கியுள்ளார்.
இன்று மாலை 6 மணிக்கு மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படுவதையடுத்து ஹர்ஷவர்தன், ரமேஷ் பொக்ரியால் உள்ளிட்ட பல முக்கிய அமைச்சர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான புதிய அமைச்சரவை கடந்த 2019ம் ஆண்டு பொறுப்பேற்று, 2 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இந்நிலையில் இன்று மாலை 6 மணிக்கு அமைச்சரவை விரிவாக்கம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், 43 புதிய அமைச்சர்கள் பதவியேற்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ் கங்குவார் மற்றும் கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் ஆகியோர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இந்த நிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தனும், தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். மேலும், சில அமைச்சர்கள் பதவி விலக இருப்பதாகவும் கூறப்படுகிறது
தேச நலன் மற்றும் தமிழ்நாட்டின் நலன் கருதி பாஜக உடனான அதிமுக கூட்டணி தொடரும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் தோல்வியடைந்தது குறித்து பாஜகவும், அதிமுகவும் மாறி மாறி குற்றஞ்சாட்டி வருகிறது.சமீபத்தில் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்ததால் தான் சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வியடைந்ததாக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் கருத்து தெரிவித்தார். இதற்கு பாஜகவின் கேடி ராகவன் பதிலடி கொடுத்திருந்தார்.இந்த கருத்து மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், பாரதிய ஜனதா கட்சி மீதும், பிரதமர் மோடி மீதும் அதிமுக முழு நம்பிக்கை வைத்துள்ளதாகவும், தேச நலன் கருதியும், தமிழ்நாட்டின் நலன் கருதியும், அதிமுக-பாஜக இடையேயான கூட்டணி தொடரும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், கூட்டணி தொடர்பாக எவ்வித மாற்றுத் கருத்திற்கும் இடமில்லை என்றும் ஓபிஎஸ் குறிப்பிட்டுள்ளார்.
திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி பேராசிரியர் பால் சந்திரமோகன் பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் தமிழ்துறைத் தலைவர் பால் சந்திரமோகன் மீது ஐந்து மாணவிகள் பாலியல் சீண்டல் புகார் கொடுத்தனர். இந்த புகாரையடுத்து சந்திரமோகன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அவர் மீதான புகார் குறித்து மாவட்ட ஆட்சி தலைவரின் உத்தரவின் பேரில் 7 பேர் கொண்ட விசாரணைக்குழு விசாரணை நடத்தியது. விசாரணை அடிப்படையில் விசாரணை அறிக்கை மாவட்ட ஆட்சியரிடம் சமர்பிக்கப்பட்டது மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரை அடுத்து ஸ்ரீரங்கம் மகளிர் போலீஸ் நடவடிக்கை எடுத்துள்ளது. மாவட்ட சமூக நல அலுவலர் புகாரில் பேரில் பால் சந்திரமோகன் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்துள்ளனர்
