Author: Admin

தமிழகம் முழுவதும் சிறப்பு மெகா கொரோனா தடுப்பூசி முகாம் இன்று நடைபெற உள்ள நிலையில் பொதுமக்களுக்கு பல்வேறு சிறப்பு பரிசுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனாவில் இருந்து தற்காத்துக் கொள்ள தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனிடையே கொரோனா 3வது அலையை தடுக்கும் விதமாக, தமிழகம் முழுவதும் 4,30,051 இடங்களில் இன்று மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெறும் இன்று ஒரே நாளில் 20 லட்சம் தடுப்பூசிகளை செலுத்த தமிழக அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. தடுப்பூசி முகாம்களில் ஒரே நேரத்தில் பலர் பங்கேற்பார்கள் என்பதால் கோவின் செயலியில் பதிவேற்றம் செய்ய அங்கன்வாடி ஊழியர்களை பயன்படுத்தவும் சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளது. மேலும் ரோட்டரி சங்கங்கள் , தனியார் தொண்டு நிறுவனங்கள் , ஆசிரியர்கள் , வருவாய்த் துறையினர் , உள்ளாட்சி துறையினர் வாயிலாக பொதுமக்களுக்கு தடுப்பூசிக்கான டோக்கன்கள் விநியோகிக்கàப்பட்டுள்ளது.…

Read More

இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் இன்று திட்டமிட்டபடி நடைபெறுகிறது. கொரோனா ஊரடங்கால் தள்ளி வைக்கப்பட்ட நீட் தேர்வு செப்டம்பர் 12 ஆம் தேதி நடக்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தமிழகத்தில் மட்டும் 1,10,971 பேர் நீட் தேர்வு எழுத உள்ளனர். வழக்கமான தேர்வு விதிமுறைகளோடு கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைளுடன் தேர்வானது நடத்தப்பட உள்ளது. மேலும் இந்த ஆண்டு முதல் முறையாக தமிழ் உள்பட 13 மொழிகளில் தேர்வு நடத்தப்பட உள்ளது. கொரோனா பரவலை கருத்தில் கொண்டு மாணவர்களின் நலன் கருதி நீட் தேர்வு நடக்கும் நகரங்களின் எண்ணிக்கை 155 இல் இருந்து 198 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இருந்து நீட் தேர்வை எழுத விண்ணப்பித்துள்ளவர்களில் 40,376 மாணவர்களும் 70,594 மாணவிகளும், மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்த ஒருவரும் ஆவர். தமிழகத்திலேயே அதிகபட்சமாக சென்னையில் இருந்து 17,992 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். சென்னைக்கு அடுத்தபடியாக சேலத்தில் இருந்து 15,067 பேர் விண்ணப்பித்துள்ளனர்.…

Read More

இந்தியா – இங்கிலாந்து இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் பல்வேறு சர்ச்சைகளை கிளப்பியுள்ளது. இந்தியா – இங்கிலாந்து இடையேயான 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மான்செஸ்டர் நகரில் உள்ள மைதானத்தில் நேற்று தொடங்குவதாக இருந்தது. ஆனால் போட்டிக்கு முன்பாக இந்திய அணி நிர்வாகத்தில் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி உள்ளிட்ட 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து தொற்று அச்சத்தால் இந்திய அணி விளையாட மறுப்பு தெரிவித்ததால் போட்டி ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. தற்போது இதுதான் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் வீரர்கள் அனைவருக்கும் எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனை நெகட்டிவ் என்றே முடிவு வந்தது. இங்கிலாந்து வீரர்களோ ‘நாங்கள் களமிறங்க தயார்’ என்று தெரிவித்துவிட்ட நிலையில் இந்திய அணியும் ரெடியாகத் தான் இருந்தது. ஆனால் இப்போட்டி முடிந்த அடுத்த 2 தினங்களில் செப்டம்பர் 17 ஆம் தேதி ஐக்கிய அரபு…

Read More

குழந்தைகளை ஈன்றெடுக்கத் தான் பெண்களின் வேலை என தாலிபான்கள் தெரிவித்துள்ளது கடும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானில் சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்கப் படைகள் வெளியேறியதையடுத்து தாலிபான் அமைப்பினர் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி உள்ளனர். அங்கு முல்லா அகுந்த் தலைமையில் தாலிபான்கள் புதிய அரசை அமைத்துள்ள நிலையில் தாலிபான் ஆட்சியின் அமைச்சரவையில் பெண்கள் ஒருவர் கூட இடம்பெறவில்லை. இதுகுறித்து தாலிபான் செய்தி தொடர்பாளர் சையத் ஜெக்ருல்லா ஹாஷிமியிடம் TOLO நியூஸ் நிறுவனம் கேள்வி எழுப்பியது.அதற்கு பதிலளித்த அவர் ஒரு பெண் எப்போதும் அமைச்சராக முடியாது. அது அவர்களால் முடியாத காரியம். அவர்கள் அமைச்சரவையில் இடம் பெற செய்ய வேண்டிய அவசியமும் இல்லை. அவர்கள் குழந்தைகளை தான் ஈன்றெடுக்க வேண்டும். இங்கு போராடி வரும் பெண் போராட்டக்காரர்கள் அனைவரும் ஆப்கானிஸ்தானில் உள்ள அனைத்து பெண்களையும் சார்ந்தவர்கள் எனவும் சொல்ல முடியாது என தெரிவித்துள்ளார். ஏற்கனவே கடந்த மாதம் 20 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை…

Read More

நடிகர் சிம்பு நடித்துள்ள மாநாடு படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர்கள் சிம்பு, எஸ்.ஜே.சூர்யா,கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஏ.சந்திரசேகர், கருணாகரன், பிரேம்ஜி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் மாநாடு. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் மாநாடு படம் தீபாவளி தினத்தன்று திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர். ஏற்கனவே 2021 ஆம் ஆண்டு தீபாவளிக்கு ரஜினியின் அண்ணாத்த படமும், அஜித்தின் வலிமை படமும் வெளியாகவுள்ள நிலையில் சிம்புவும் இணைந்துள்ளது சினிமா ரசிகர்களை பெரும் எதிர்பார்ப்பில் ஆழ்த்தியுள்ளது.

Read More

மக்கள் ஆதரவு கொடுத்தால் கண்டிப்பாக அரசியலுக்கு வருவேன் என நடிகை கங்கனா ரணாவத் தெரிவித்துள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறை அடிப்படையாக கொண்டு ஏ.எல்.விஜய் இயக்கத்தில் நடிகை கங்கனா ரணாவத்,நடிகர்கள் அரவிந்த்சாமி,சமுத்திரக்கனி ஆகியோர் நடிப்பில் உருவான ‘தலைவி’ திரைப்படம் நேற்று தமிழ்,தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. சமீபகாலமாக பெரும் சர்ச்சைகளுக்கு பெயர் போன பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத்திடம் செய்தியாளர்கள் சந்திப்பில் எதிர்காலத்தில் அரசியலுக்கு வரும் திட்டம் உண்டா? என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு பதிலளித்து பேசிய அவர் நான் தேசியவாதி என்பதால் நாடு சம்பந்தப்பட்ட பிரச்னைகளை பேசுவேன். இதனால் மக்கள் நான் அரசியல் பிரச்னைகள் குறித்து பேசுவதாக நினைக்கின்றனர். இரண்டும் ஒன்றுபோல் இருக்கலாம். ஆனால் எனக்கு அப்படி இல்லை. ஏனென்றால் நான் அரசியல்வாதி கிடையாது என கூறியுள்ளார். மேலும் நான் பொறுப்புள்ள இந்திய நாட்டின் குடிமகனாக பேசுகிறேன். மக்களால் பிரபலப்படுத்தப்பட்ட நான் மக்களின் உரிமைக்காகவும்,…

Read More

கண்ணூர் பல்கலைக்கழகத்தில் சாவர்க்கர், கோல்வால்கர் உள்ளிட்டவர்களின் வரலாறு சேர்க்கப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. கேரள மாநிலம் கண்ணூர் பல்கலைக்கழகத்தில் எம்ஏ நிர்வாகம் மற்றும் அரசியல்.துறையின் 3வது செமஸ்டர் பாடத்திட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். சிந்தனைவாதிகளான  சாவர்க்கர்,கோல்வால்கர், தீனதயாள் உபாத்தியாயா ஆகியோரின் வரலாறு சேர்க்கப்பட்டுள்ளன.  இதற்கு கேரள மாணவர் அமைப்பு(KSU), கேரள இஸ்லாமிய மாணவர்கள் கூட்டமைப்பு (MSF) ஆகியவை எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டது.இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியதை தொடர்ந்து கண்ணூர் பல்கலைக்கழக துணைவேந்தர் கோபிநாத் ரவிந்திரன் விளக்கம் ஒன்றை அளித்தார். . அரசியல் பாடப்பிரிவை கண்ணூர் பல்கலைக்கழகம் காவி மயமாக்குவதாக கூறப்படுவது தவறு. பாடத்திட்டத்தை தயாரித்தவர்கள் பல்வேறு இயக்கங்களின் தொடக்க உரைகளையும் இணைத்துள்ளதாக தெரிவித்தார். மேலும்  இந்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்  சுதந்திர போராட்டத்தை புறக்கணிந்த எந்த சித்தாந்தத்தையும் தலைவர்களையும் பெருமைப்படுத்த மாட்டோம் என்பதில் தாங்கள் தெளிவாக உள்ளோம். யாரும் அதை செய்ய மாட்டார்கள் என திட்டவட்டமாக…

Read More

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை குறித்த திரைப்படத்தை சென்னை மயிலாப்பூரில் உள்ள திரையரங்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பார்வையிட்டார். அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஏ.எல்.விஜய் இயக்கத்தில் வெளி வந்துள்ள ‘தலைவி’ படக்குழுவினருக்கு மனமார்ந்த வாழ்த்துகள் எனக் கூறினார். வரலாற்றை திரித்து கூறுவது ஏற்புடையதல்ல. திமுகவிடம் கணக்கு கேட்டதைத் தொடர்ந்தே எம்ஜிஆர் கட்சியை விட்டு வெளியேறினார். ஆனால், அமைச்சர் பதவி கேட்டே திமுகவை விட்டு பிரிந்ததாக காட்சி வந்திருப்பது தவறு. ஆகவே, அந்தக் காட்சியை நீக்க வேண்டும். ஒட்டுமொத்தமாக பார்த்தால் சிறப்பான படம். திமுகவிற்கு ஆதரவான வகையிலேயே படம் வெளியிடப்பட்டுள்ளது. எம்ஜிஆரை ஜெயலலிதா அவமதிப்பது போல் இருக்கும் சில காட்சிகளை நீக்க வேண்டும். எம்ஜிஆரை மதிக்காமல் ஜெயலலிதா செயல்பட்டார் என்பது போன்ற சித்தரிப்பை ஏற்க முடியவில்லை. சசிகலாவுக்கும் அரசியலுக்கும் சம்பந்தமில்லை என்றும், அவர், வீட்டு வேலைகளை கவனிக்க வந்தவர் என்பதையும் தலைவி படத்தில் சரியாக காட்சிப்படுத்தியுள்ளனர்” எனத் தெரிவித்தார்

Read More

நடிகர் விவேக் மரணம் குறித்து 8 வாரத்திற்குள் விசாரணை நடத்தி அறிக்கை சமர்பிக்க மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. நகைச்சுவை நடிகர் விவேக் கடந்த ஏப்ரல் மாதம் 17 ம் தேதி மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அவரது மரணம் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நடிகர் விவேக் இறப்பதற்கு இரண்டு நாட்கள் முன் தடுப்பூசி செலுத்திக்கொண்டு மக்களுக்கிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார். தடுப்பூசி செலுத்திய மறு நாள் மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட்டு நடிகர் விவேக் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால், நடிகர் விவேக் தடுப்பூசி போட்டுக்கொண்டதால் தான் உயிரிழந்தார் என கூறப்பட்டது இந்த நிலையில், விழுப்புரத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் சரவணன் என்பவர் நடிகர் விவேக் கொரோனா தடுப்பு ஊசி போடப்பட்ட பிறகு மரணமடைந்ததாக தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து, நடிகர் விவேக் மரணம் குறித்து 8 வாரத்திற்குள் விசாரணை நடத்தி அறிக்கை சமர்பிக்க மனித…

Read More

தமிழக ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோஹித், பஞ்சாப் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார் இந்த நிலையில், நாகாலாந்து மாநிலத்தின் ஆளுநராக இருந்த ஆர்.என்.ரவி தமிழகத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். அதிரடி நடவடிக்கைக்கு பெயர் போன ஆர்.என்.ரவி என்கிற ஸ்ரீ ரவீந்திர நாராயண் ரவி பீகார் மாநிலம் பாட்னாவில் பிறந்தவர். இயற்பியலில் முதுகலைப் பட்டம் பெற்ற அவர் சில காலம் பத்திரிகைத் துறையில் பணியாற்றியுள்ளார். கேரளாவில் ஐபிஎஸ் அதிகாரியாக 10 ஆண்டுகளுக்கு மேலாகப் பணியாற்றினார். பின்னர் மத்திய அரசுப் பணிக்கு மாற்றலாகி நாட்டின் பல்வேறு பகுதிகளில் பணியாற்றினார். 2012ஆம் ஆண்டு அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்ற ஆர்.என்.ரவி தேசிய பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பாக கட்டுரைகளை எழுதி வந்தார். சில ஆண்டுகள் பிரதமர் அலுவலகத்தில் சில காலம் பணியாற்றினார். 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1 தேதி நாகாலாந்து ஆளுநராக நியமிக்கப்பட்டர். அப்போது நாகா குழுக்களுடனான அமைதி முயற்சியில் மத்திய அரசின் சார்பில் மத்தியஸ்தராகவும் நியமிக்கப்பட்டார். கடந்த…

Read More