“தமிழக மக்களுக்கு காத்திருக்கும் பரிசு மழை” – இன்று மெகா தடுப்பூசி முகாம்

SHARE

தமிழகம் முழுவதும் சிறப்பு மெகா கொரோனா தடுப்பூசி முகாம் இன்று நடைபெற உள்ள நிலையில் பொதுமக்களுக்கு பல்வேறு சிறப்பு பரிசுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவில் இருந்து தற்காத்துக் கொள்ள தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனிடையே கொரோனா 3வது அலையை தடுக்கும் விதமாக, தமிழகம் முழுவதும் 4,30,051 இடங்களில் இன்று மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.

காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெறும் இன்று ஒரே நாளில் 20 லட்சம் தடுப்பூசிகளை செலுத்த தமிழக அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.

தடுப்பூசி முகாம்களில் ஒரே நேரத்தில் பலர் பங்கேற்பார்கள் என்பதால் கோவின் செயலியில் பதிவேற்றம் செய்ய அங்கன்வாடி ஊழியர்களை பயன்படுத்தவும் சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளது.

மேலும் ரோட்டரி சங்கங்கள் , தனியார் தொண்டு நிறுவனங்கள் , ஆசிரியர்கள் , வருவாய்த் துறையினர் , உள்ளாட்சி துறையினர் வாயிலாக பொதுமக்களுக்கு தடுப்பூசிக்கான டோக்கன்கள் விநியோகிக்கàப்பட்டுள்ளது.

மெகா தடுப்பூசி முகாமையொட்டி திருவண்ணாமலையில் இன்று தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழை காண்பித்தால் மட்டுமே டாஸ்மாக் கடைகளில் மதுபானம் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் தடுப்பூசிக் பரிசுகள் வழங்கப்படும் என பேரூராட்சி வர்த்தக சங்கம் அறிவித்துள்ளது. குலுக்கல் முறையில் முதல் பரிசாக செல்போன், இரண்டாம் பரிசாக மின்சார அடுப்பு மற்றும் மூன்றாம் பரிசாக உடலின் சர்க்கரை அளவை பரிசோதனை செய்யும் கருவி

ஆகியவை இதில் வழங்கப்பட உள்ளன.

SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

பிக் பாஸ் நாட்கள். நாள் 28. ‘வெளியேறினார் சின்னப்பொண்ணு’

இரா.மன்னர் மன்னன்

சிற்ப இலக்கணம் தொடர். பகுதி: 9. ’24 வகை தொழிற்கை முத்திரைகள்’ – ஒரு நினைவூட்டல்.

”மரணத்துக்கு முந்தைய அமைதி!” மரணத்தின் விலை – தொடர். அத்தியாயம் 1.

இரா.மன்னர் மன்னன்

பிக் பாஸ் நாட்கள். நாள் 24 ‘நானும் தலைவர்தான்..!’

சே.கஸ்தூரிபாய்

பிக் பாஸ் நாட்கள். நாள் 17: ‘பிரியங்காவின் போங்காட்டம்’

இரா.மன்னர் மன்னன்

மகசூல் – பயணத் தொடர்… பகுதி 1

Admin

சிற்ப இலக்கணம் தொடர். பகுதி: 10. 24 வகை தொழிற்கை முத்திரைகள் – சிறு பயிற்சி.

மகசூல் – பயணத் தொடர் – பகுதி 6

Admin

பிக் பாஸ் நாட்கள். நாள்: 9. ’பிரியங்காவுக்கு டிஸ்லைக்!’

இரா.மன்னர் மன்னன்

பிக்பாஸ் நாட்கள். நாள்: 7 குட்டையை குழப்பிவிட்ட கமல்…

இரா.மன்னர் மன்னன்

”காக்கும் கையெழுத்து” – மரணத்தின் விலை தொடர். அத்தியாயம் 4.

இரா.மன்னர் மன்னன்

சிற்ப இலக்கணம் தொடர். பகுதி 7: தொழிற் கை முத்திரையின் வகைகள் (17 – 20)

Leave a Comment