இன்று திட்டமிட்டபடி நீட் தேர்வு..நாளை நீட்டுக்கு எதிராக தீர்மானம்…

SHARE

இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் இன்று திட்டமிட்டபடி நடைபெறுகிறது.

கொரோனா ஊரடங்கால் தள்ளி வைக்கப்பட்ட நீட் தேர்வு செப்டம்பர் 12 ஆம் தேதி நடக்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தமிழகத்தில் மட்டும் 1,10,971 பேர் நீட் தேர்வு எழுத உள்ளனர்.

வழக்கமான தேர்வு விதிமுறைகளோடு கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைளுடன் தேர்வானது நடத்தப்பட உள்ளது. மேலும் இந்த ஆண்டு முதல் முறையாக தமிழ் உள்பட 13 மொழிகளில் தேர்வு நடத்தப்பட உள்ளது.

கொரோனா பரவலை கருத்தில் கொண்டு மாணவர்களின் நலன் கருதி நீட் தேர்வு நடக்கும் நகரங்களின் எண்ணிக்கை 155 இல் இருந்து 198 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இருந்து நீட் தேர்வை எழுத விண்ணப்பித்துள்ளவர்களில் 40,376 மாணவர்களும் 70,594 மாணவிகளும், மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்த ஒருவரும் ஆவர்.

தமிழகத்திலேயே அதிகபட்சமாக சென்னையில் இருந்து 17,992 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். சென்னைக்கு அடுத்தபடியாக சேலத்தில் இருந்து 15,067 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

தமிழ்நாட்டில் 18 நகரங்களில் தேர்வு நடைபெற உள்ளது. இந்நிலையில் சட்டமன்ற முதல் கூட்டத் தொடரின் கடைசி நாளான நாளை செப்டம்பர் 13 ஆம்தேதி நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானம் முதல்வர் மு.க. ஸ்டாலினால் கொண்டு வரப்பட உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

அத்துடன் திமுக தேர்தல் அறிக்கையில் கூறியதைப்போல, அந்த தீர்மானத்தை குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

ஒரு காலத்தில் இந்து மகா சபா என்றால்..தேவாரமும் திருவாசகமும் தான்ஆனால் இப்போது?? சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வேதனை!

Admin

ஓபிஎஸ் இபிஎஸ் அதிரடி.. சசிகலாவுடன் தொலைபேசியில் பேசியோர், புகழேந்தி அதிரடி நீக்கம்

Admin

தமிழக முதல்வருக்கு இயக்குநர் ஷங்கர் நன்றி..!!

Admin

ஒன்றிய அரசு என சொல்வதன் நோக்கம் என்ன? சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் விளக்கம்

Admin

நாளை முதல் அருங்காட்சியகங்கள் புராதன சின்னங்களை மக்கள் பார்வையிடலாம்… தொல்லியல் துறை அறிவிப்பு!

Admin

தலிபான்கள் ஆதிக்கம் இந்தியாவுக்கு அச்சுறுத்தலாக அமையும்: காா்த்திக் சிதம்பரம் எம்.பி.

Admin

சமூக வலைதளங்களில் திரும்பும் திசையெல்லாம் ரங்கன் வாத்தியார் மீம்ஸ் !

Admin

ரூ.30,000 விலை போகின்றதா இந்த 5 ரூபாய் நோட்டு?

‘‘1000 ரூபாய்” யார் யாருக்கு தெரியுமா? விளக்கம் கொடுத்த நிதியமைச்சர்

Admin

சென்னை ஏடிஎம்களில் நூதன கொள்ளை… ஹரியானாவில் ஒருவர் கைது

Admin

உதயநிதி ஸ்டாலினுடன் இறகுப் பந்து விளையாடிய முதல்வர் மு.க.ஸ்டாலின்.!!

Admin

பப்ஜி மதனின் யூடியூப் பக்கத்தை முடக்கிய காவல்துறை

Admin

Leave a Comment