தலைவி படத்தில் வரலாறு திரித்து கூறப்பட்டுள்ளது : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கருத்து!

SHARE

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை குறித்த திரைப்படத்தை சென்னை மயிலாப்பூரில் உள்ள திரையரங்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பார்வையிட்டார்.

அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஏ.எல்.விஜய் இயக்கத்தில் வெளி வந்துள்ள ‘தலைவி’ படக்குழுவினருக்கு மனமார்ந்த வாழ்த்துகள் எனக் கூறினார்.

வரலாற்றை திரித்து கூறுவது ஏற்புடையதல்ல. திமுகவிடம் கணக்கு கேட்டதைத் தொடர்ந்தே எம்ஜிஆர் கட்சியை விட்டு வெளியேறினார்.

ஆனால், அமைச்சர் பதவி கேட்டே திமுகவை விட்டு பிரிந்ததாக காட்சி வந்திருப்பது தவறு. ஆகவே, அந்தக் காட்சியை நீக்க வேண்டும்.

ஒட்டுமொத்தமாக பார்த்தால் சிறப்பான படம். திமுகவிற்கு ஆதரவான வகையிலேயே படம் வெளியிடப்பட்டுள்ளது. எம்ஜிஆரை ஜெயலலிதா அவமதிப்பது போல் இருக்கும் சில காட்சிகளை நீக்க வேண்டும். எம்ஜிஆரை மதிக்காமல் ஜெயலலிதா செயல்பட்டார் என்பது போன்ற சித்தரிப்பை ஏற்க முடியவில்லை.

சசிகலாவுக்கும் அரசியலுக்கும் சம்பந்தமில்லை என்றும், அவர், வீட்டு வேலைகளை கவனிக்க வந்தவர் என்பதையும் தலைவி படத்தில் சரியாக காட்சிப்படுத்தியுள்ளனர்” எனத் தெரிவித்தார்


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

ட்விட்டர் ஒரு ஆபத்தான விளையாட்டு : ராகுல்காந்தி விமர்சனம்!

Admin

ஜகமே தந்திரம் படத்தில் இந்த 2 பாடல்கள் இடம்பெறாது…!

Admin

கலைஞர் இல்லாத ஏக்கம் துரத்துகிறது… உதயநிதி ஸ்டாலின் உருக்கம்

Admin

ஏ.ஆர்.ரஹ்மானிடம் ரூ.3 கோடி நஷ்ட ஈடு கேட்டு மனு… உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Admin

ஜகமே தந்திரம் படக்குழுவினர் ரசிகர்களுடன் உரையாடல்… எங்கே ..? எப்போ தெரியுமா?

Admin

கோடநாடு: சசிகலா, எடப்பாடி பழனிசாமியை விசாரிக்க மனு: இன்று முடிவு?

Admin

பெட்ரோல் விலை குறைப்பு … நிர்மலா சீதாராமனுக்கு பதிலடி கொடுத்த பிடிஆர்

Admin

7 பேர் விடுதலையை காங்கிரஸ் ஆதரிக்காது – கே.எஸ்.அழகிரி

மாஸ் லுக்கில் ரஜினி… பட்டையை கிளப்பும் அண்ணாத்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்…

Admin

திரைப்படமாகிறது ஜீவஜோதியின் வாழ்க்கை

Admin

ரஜினிக்கு தாதாசாகேப் பால்கே விருது. யார் அந்த பால்கே?

Admin

உங்கள் நடவடிக்கை சூப்பர் : முதல்வரை பாராட்டிய உயர்நீதிமன்றம் காரணம் என்ன?

Admin

Leave a Comment