- தமிழ்நாடு
- இந்தியா
- உலகம்
- அரசியல்
- நூல் அறிமுகம்
- சினிமா
- தமிழ்
- தொடர்கள்
- நலவாழ்வு
- உணவு
- வரலாறு
- வினோதங்கள்
- Public Post
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: Admin
காஜியாபாத்தில் இளம்பெண் ஒருவர் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து தவறி விழும் வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகியுள்ளது. காஜியாபாத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் பெண் ஒருவர், பால்கனி அருகே நின்று கொண்டிருந்தபோது திடீரென நிலைத்தடுமாறி கீழே விழுந்தார். அப்போது அங்கிருந்த தடுப்பினை அப்பெண் பிடித்துக்கொண்டு சத்தமிட்டுள்ளார். இந்தநிலையில் அவரது சத்தம் கேட்டு ஓடோடி வந்த அவரது கணவர், பெண்ணின் கையை பிடித்து மீட்க முயற்சி செய்தார். ஆனால் அவரது பிடியிலிருந்து நழுவிய அப்பெண் கீழே விழுந்து படுகாயமடைந்தார். இந்தநிலையில் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வரும் இளம்பெண்ணின் உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில், 100வது வயதை எட்டிய மூதாட்டிகள் 3 பேர் குடும்பமாக ஒன்று சேர்ந்து பிறந்த நாளை கொண்டாடியுள்ளனர். நியூயார்க் நகரில் உள்ள மன்ஹாட்டன் பகுதியில் வசிக்கும் 3 மூதாட்டிகள் சமீபத்தில் தடுப்பூசிகளுக்கான இரு டோஸ்களை செலுத்திக்கொண்டுள்ளனர். தற்போது ஆரோக்கியமாக இருக்கும் அவர்கள் ஜூன் மாத தொடக்கத்தின் ஒரே வாரத்தில் அடுத்தடுத்து 3 பேரும் நூறாவது பிறந்த நாளை கண்டுள்ளனர். இந்த 100வது பிறந்த நாளை மூவரும் கொண்டாட விரும்பினர். அவர்களுள் ஒருவரான ரூத் ஸ்வார்ட்ஸ் என்பவரின் வீட்டில் கடந்த ஜூன் 8-ம் தேதி குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து பிறந்தநாளை கொண்டாடினர். நீண்ட நாள் ஊரடங்கிற்கு பின் இந்த சந்திப்பு மகிழ்ச்சியை அளித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
ரோல்ஸ் ராய்ஸ் கார் நுழைவு வரி விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து நடிகர் விஜய் மேல்முறையீடு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது ராய்ஸ் கோஸ்ட்’ காருக்கு, நுழைவு வரி செலுத்துவதில் இருந்து விலக்கு கேட்டு, நடிகர் விஜய் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டு அத்துடன், விஜய்க்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த அபராத தொகையை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு அளிக்கும்படியும் தெரிவிக்கப்பட்டது. மேலும் இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி வரி என்பது கட்டாயமாக வழங்க வேண்டிய பங்களிப்பு, நன்கொடை அல்ல, நடிகர்கள் உண்மையான ஹீரோக்களாக இருக்க வேண்டும், ரீல் ஹீரோக்களாக இருக்கக் கூடாது எனவும்தெரிவித்துள்ளார். இந்த நிலையில் நடிகர் விஜயின் ரோல்ஸ் ராய்ஸ் கார் விவகாரம் கடந்த சில தினங்களாக சமூக வலைதளங்களில் பேசும் பொருளாக மாறியுள்ள நிலையில், நடிகர் விஜயின் வழக்கறிஞர் குமரேசன் கூறுகையில், வரி விலக்கு கேட்பது…
அசாம் மாநிலத்தில் சிறுவனைக் கொன்ற வழக்கில் தாய் யானை மற்றும் குட்டியானையை காவல்துறையினர் கைது செய்தனர். கோலகாட் மாவட்டத்தின் போகாகாட் பகுதியைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ, ஜிதேன் கோகாய் இந்த யானைகளை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்த யானை சிறுவன் ஒருவனை மிதித்துக் கொன்றது. இதையடுத்து யானையின் மீது இந்திய தண்டனைச் சட்டம் 304 ஏயின் கீழ் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், யானையையும் குட்டியையும் கைது செய்து காவல்நிலையத்துக்கு அழைத்து வந்தனர். அதன்பின்னர் இரண்டையும் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். யானை துன்புறுத்தப்பட்டால் கைது நடவடிக்கை எடுக்கப்படுவதை போன்று யானை செய்த குற்றத்திற்கு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
உத்தரகாண்ட் மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வரும்நிலையில், அம்மாநில அமைச்சரான சுவாமி யத்தீஸ்வர் ஆனந்த் முகக் கவசத்தை தனது காலில் அணிந்திருப்பது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது இந்த புகைப்படம் எப்போது எடுக்கப்பட்டது என்பது குறித்த தெளிவான தகவல் தெரியவில்லை. ஒரு அரசு சார்ந்த கூட்டத்தில்,பிஸான் சிங் சுப்பால், சுபோத் யூனியல் ஆகிய அமைச்சர்களும் இந்த புகைப்படத்தில் இடம் பெற்றுள்ளனர். உடன் இருந்த அமைச்சர்கள் இருவரும் முகக்கவசம் அணியாத நிலையில், காலில் முகக்கவசத்தை மாட்டியிருந்த அமைச்சர் யத்தீஸ்வர் ஆனந்த்தை இணையத்தில் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளார்.
கொரோனாவின் 3வது அலை தொடர்பாக தமிழகம் உள்ளிட்ட 6 மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி இன்று காணொளி மூலமாக ஆலோசனை நடத்தினார். கொரோனா 2-வது அலையின் தாக்கம் படிப்படியாக குறைய தொடங்கிய பின், மாநிலங்கள் ஊரடங்கு தளர்வுகளை அறிவித்து, இயல்பு நிலை திரும்பி வருகிறது. நாடு முழுவதும் குறைந்து வந்த கொரோனா பரவல் மீண்டும் தலைதூக்க ஆரம்பித்துள்ளது. இதனிடையே 3வது அலைக்கான எச்சரிக்கையும் விடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் 3-வது அலைக்கான தயார் நிலை குறித்து மாநிலங்கள் வாரியாக பிரதமர் மோடி ஆலோசித்து வருகிறார். இந்தநிலையில் இன்று தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, கேரளா, ஒடிசா, மகராஷ்டிரா உள்ளிட்ட மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினார்
மே 15 முதல் ஜூன் 15 வரை 20 லட்சம் வாட்ஸ்அப் கணக்குகளை முடக்கியுள்ளதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது இந்தியாவில் தற்போது புதிய ஐடி விதிகளை மத்திய அரசு அமல்படுத்தியதால் சமூக வலைதள நிறுவனங்கள் இந்த விதிகளை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என்று அரசு ஆணையிட்டது. அதன்படி மத்திய அரசின் இந்த புதிய ஐடி விதிகளை வாட்ஸ்அப் ஏற்றுக்கொள்வதாக அறிவித்தது . இந்நிலையில்புதிய தொழில்நுட்ப விதிகளின்படி எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த கேள்விக்கு பதிலளித்த பேஸ்புக் , இந்தியாவில் மே 15 முதல் ஜூன் 15 வரை 20 லட்சம் வாட்ஸ்அப் கணக்குகளை முடக்கியுள்ளதாக தெரிவித்துள்ளது. தவறான தகவல்களை தடுக்கும் விதமாக, இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பேஸ்புக் தெரிவித்துள்ளது. இதற்காக மூன்று கட்டங்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவல் குறைய தொடங்கியுள்ள நிலையில், பல்வேறு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 19ம் தேதி வரை அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போதைய ஊரடங்கில் பள்ளி, கல்லூரிகள் மற்றும் திரையரங்குகள் என சிவற்றுக்கு தடை உள்ளது. இந்த ஊரடங்கு 19ம் தேதியுடன் முடியவுள்ள நிலையில், தற்போது சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தலைமை செயலாளர், பொதுத்துறை, வருவாய்த்துறை செயலர்கள், மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலாளர், டிஜிபி உள்ளிட்ட உயரதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இந்த ஆலோசனையில் தமிழகத்தில் அமலில் உள்ள ஊரடங்கில் மேலும் தளர்வுகள் அளிப்பது குறித்து வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
உலகில் வெளியான சிறந்த 25 திரைப்படங்களின் பட்டியலை Letterboxd இணையதளம் வெளியிட்டுள்ளது. உலகளாவிய பட்டியலான இதில் இந்தியாவைச் சேர்ந்த 5 திரைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. இந்தப் பட்டியலில் மலையாளத்தில் வெளிவந்த மூன்று திரைப்படங்களும், தமிழில் வெளிவந்த இரண்டு திரைப்படங்களும் இடம்பெற்றுள்ளன. பத்தாவது இடத்தில் தனுஷின் கர்ணன் படம் இடம்பெற்றது. மாரி செல்வராஜ் இயக்கிய இப்படம் சாதி ரீதியாக ஒடுக்கப்பட்டவர்களின் வலியையும், அவர்கள் நிமிர்ந்து பார்த்து, திருப்பி அடிப்பதையும் கூறியது. திரையரங்கில் வசூலை தட்டிச்சென்ற இப்படம் ஓடிடியிலும் அதிக பார்வையாளர்களை பெற்றது. அடுத்ததாக 17 வது இடத்தில் யோகி பாபு நடித்த மண்டேலா திரைப்படம் இடம்பெற்றுள்ளது. ஒரு சாமானியனின் வலிமையை அரசியல் கதையுடன் வெளிப்படுத்தியுள்ளது. இப்படமும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
புதுச்சேரியில் நாளை பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பள்ளிகள் திறப்பு சிறிது காலம் தள்ளி வைக்கப்படுவதாக அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார். புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வரும் நிலையில், நாளை பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்கிடையே கொரோனா தொற்று குறையாத நிலையில் பெற்றோர்கள், மாணவர்கள் பள்ளி, கல்லூரிகள் திறப்பு குறித்து மறு பரிசீலனை செய்ய வேண்டுமென கோரிக்கை வைத்தனர். இந்நிலையில் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை செளந்தரராஜனுடன் பள்ளிகள் திறப்பு குறித்து அமைச்சர் நமச்சிவாயம் ஆலோசனை நடந்தினார். இதனையடுத்து புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகள் திறப்பு சிறிது காலம் தள்ளி வைக்கப்படுவதாக அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.
