அமெரிக்காவில், 100வது வயதை எட்டிய மூதாட்டிகள் 3 பேர் குடும்பமாக ஒன்று சேர்ந்து பிறந்த நாளை கொண்டாடியுள்ளனர்.
நியூயார்க் நகரில் உள்ள மன்ஹாட்டன் பகுதியில் வசிக்கும் 3 மூதாட்டிகள் சமீபத்தில் தடுப்பூசிகளுக்கான இரு டோஸ்களை செலுத்திக்கொண்டுள்ளனர்.
தற்போது ஆரோக்கியமாக இருக்கும் அவர்கள் ஜூன் மாத தொடக்கத்தின் ஒரே வாரத்தில் அடுத்தடுத்து 3 பேரும் நூறாவது பிறந்த நாளை கண்டுள்ளனர்.
இந்த 100வது பிறந்த நாளை மூவரும் கொண்டாட விரும்பினர்.
அவர்களுள் ஒருவரான ரூத் ஸ்வார்ட்ஸ் என்பவரின் வீட்டில் கடந்த ஜூன் 8-ம் தேதி குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து பிறந்தநாளை கொண்டாடினர்.
நீண்ட நாள் ஊரடங்கிற்கு பின் இந்த சந்திப்பு மகிழ்ச்சியை அளித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்