உலகில் வெளியான சிறந்த 25 திரைப்படங்களின் பட்டியலை Letterboxd இணையதளம் வெளியிட்டுள்ளது.
உலகளாவிய பட்டியலான இதில் இந்தியாவைச் சேர்ந்த 5 திரைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. இந்தப் பட்டியலில் மலையாளத்தில் வெளிவந்த மூன்று திரைப்படங்களும், தமிழில் வெளிவந்த இரண்டு திரைப்படங்களும் இடம்பெற்றுள்ளன.
பத்தாவது இடத்தில் தனுஷின் கர்ணன் படம் இடம்பெற்றது. மாரி செல்வராஜ் இயக்கிய இப்படம் சாதி ரீதியாக ஒடுக்கப்பட்டவர்களின் வலியையும், அவர்கள் நிமிர்ந்து பார்த்து, திருப்பி அடிப்பதையும் கூறியது. திரையரங்கில் வசூலை தட்டிச்சென்ற இப்படம் ஓடிடியிலும் அதிக பார்வையாளர்களை பெற்றது.
அடுத்ததாக 17 வது இடத்தில் யோகி பாபு நடித்த மண்டேலா திரைப்படம் இடம்பெற்றுள்ளது. ஒரு சாமானியனின் வலிமையை அரசியல் கதையுடன் வெளிப்படுத்தியுள்ளது. இப்படமும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்