Author: Admin

அரசுத் துறைகளில் 100% தமிழ்நாடு இளைஞர்களை நியமனம் செய்யும் வகையில் தமிழ்மொழி பாடத்தாள் கட்டாயமாக்கப்படும் என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று தமிழ்நாடு அரசு துறைகள் மற்றும் மாநில பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள பணியிடங்கள் அனைத்திலும் தமிழ்நாட்டை சேர்ந்த இளைஞர்களை 100% தேர்வு செய்ததற்காக அனைத்து போட்டி தேர்வுகளிலும் தமிழ் மொழி படத்தாள் கட்டாயமாக்கப்படும் என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார். மேலும்,அரசுப் பணி நியமனங்களில் பெண்களுக்கான இடஒதுக்கீடு 40% ஆக உயர்த்தப்படும் என்றும் கொரோனாவால் பெற்றோரை இழந்தவர்கள், முதல் தலைமுறை பட்டதாரிகள், அரசுப் பள்ளிகளில் தமிழ் மொழியில் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும் எனவும் கூறினார்.

Read More

திமுக எம்பி ஆ. ராசா நீட் குறித்து பேசிய பழைய வீடியோ ஒன்றை காட்டி எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி திமுக அரசினை குற்றம் சாட்டியுள்ளார். நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரும் மசோதா தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று அவையில் மசோதா தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பாக அதிமுக அவையில் இருந்து வெளிநடப்பு செய்தது. அவைக்கு வெளியே பேசிய எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது எங்களை பேச அனுமதிக்காத காரணத்தால் நாங்கள் அவையில் இருந்து வெளியேறினோம். ஏற்கனவே நீட் தேர்வு குறித்து பல விவாதங்கள் நடைபெற்று உள்ளன. முதல்வராக ஜெயலலிதா இருந்த போது தமிழ்நாடு அரசு தீர்மானம் கொண்டு வந்தது. இப்போது மீண்டும் தீர்மானம் கொண்டு வர திமுக முடிவு செய்துள்ளது. மாணவர்களையும், பெற்றோர்களையும் ஏமாற்றிய அரசு திமுக அரசு. மாணவர்களை நம்ப வைத்து திமுக ஏமாற்றி உள்ளது எனக் குற்றம்…

Read More

பிரதமர் மோடி ஆட்சியில் ஞாயிறுக்கும் திங்களுக்கும் வித்தியாசம் இல்லை என்று ட்விட்டரில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி விமர்சித்துள்ளார். காங்கிரஸ் முக்கிய தலைவர் ராகுல்காந்தி தனது ட்விட்டர் பதிவில் : இந்தியாவில் உள்ள இரண்டு தொழிற்சாலைகளை மூட உள்ளதாக அமெரிக்காவை சேர்ந்த முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனமான ஃபோர்டு அறிவித்துள்ளது. சென்னை மறைமலை நகரிலும் குஜராத் மாநிலத்தில் அகமதாபாத்தில் உள்ள கார் தயாரிப்புப் ஆலைகளை மூடப்போவதாக அறிவித்துள்ளது. இந்திய சந்தையில் ஃபோர்டு நிறுவனத்தின் கார் விற்பனை சரிவை நோக்கி சென்றதையடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்தது. இந்தப்பத்திரிக்கை செய்தியை ட்விட்டரில் பகிர்ந்துள்ள ராகுல் காந்தி ‘சண்டே தாட்ஸ்’என்ற ஹேஷ்டேக்கில் . ஃபோர்ட் நிறுவனம் இந்தியாவை விட்டு வெளியேறுவதால் 4000 சிறு நிறுவனங்கள் மூடப்படும் என தொழிற்துறையினர் கூறியிருக்கும் செய்தி அதில் இடம்பெற்றுள்ளது. இது குறித்து ராகுல் தனது பதிவில் : வார விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமைக்கு, வேலை நாளான திங்கட்கிழமைக்கும் இடையிலான…

Read More

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் கோவை தொகுதியில் பாஜக சார்பாக வானதி சீனிவாசன் போட்டியிட்டார். அவரை எதிர்த்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் போட்டியிட்டார். இறுதியில் வானதி ஸ்ரீனிவாசன் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சேலத்தில் கோவை தெற்கு எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் மகன் சென்ற கார் மேம்பாலத் தடுப்புச் சுவர் மீது மோதியதில் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. கோவை தெற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் வானதி சீனிவாசன் மகன் ஆதர்ஸ்(வயது 22) நேற்று நள்ளிரவு கோயம்புத்தூரில் இருந்து சென்னைக்கு கார் மூலமாக சென்று கொண்டிருந்தாா். அப்போது கொண்டலாம்பட்டி பகுதியில் உள்ள பட்டர்பிளை மேம்பாலத்தின் வழியாக அதிவேகமாக வந்துபோது, மேம்பாலத்தின் தடுப்பு சுவர் மீது கார் மோதியது. இதனால் கட்டுப்பாட்டை இழந்து கார் தலைகீழாக கவிழ்ந்து, சிறிது தூரத்துக்கு இழுத்துச் சென்றதால் கார் கடும் சேதமடைந்தது. இதனையடுத்து அன்னதானப்பட்டி காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அப்போது விபத்து நடந்த…

Read More

மளிகை பொருட்கள் விநியோகிக்கும் சேவையை வருகிற 17ம் தேதியுடன் சொமேட்டோ நிறுவனம் நிறுத்த போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இணையவழியில் ஆர்டர் செய்யும் உணவுகளை விநியோகித்து வரும் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான சொமேட்டோ, கொரோனா சூழலை முன்னிட்டு, கடந்தாண்டு முதல் வீடுகளுக்கு மளிகை பொருட்களை விநியோகிக்கும் சேவையை தொடங்கியது. வாடிக்கையாளர்களுக்கு துரிதமாக மளிகை பொருட்களை டெலிவரி செய்த போதிலும், நுகர்வோரின் தேவைகளை பூர்த்தி செய்வதில் நீண்ட இடைவெளி இருந்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த சேவையை வருகிற 17ம் தேதியுடன் நிறுத்திக்கொள்வதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இதனை மளிகை கடைகளுக்கு எழுதிய மின்னஞ்சலில் சொமேட்டோ குறிப்பிட்டுள்ளது.

Read More

மியாமி கால்பந்து விளையாட்டு அரங்கின் ஸ்டேடியத்தில் பூனை ஒன்று தடுமாறி விழ, பார்வையாளர்கள் பத்திரமாக மீட்கும் வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. மியாமியில் கல்லூரி கால்பந்து விளையாட்டு அரங்கில் ஏராளமான பார்வையாளர்கள் கால்பந்து போட்டியை ரசித்துக் கொண்டிருக்க, விளையாட்டு அரங்கின் ஸ்டேடியத்தில் சைடில் இருந்த சுவரில் நடந்து சென்ற பூனை ஒன்று கால் தடுமாறி அந்தரத்தில் தொங்கியுள்ளது. இதனை பார்த்த கால்பந்தாட்ட பார்வையாளர்கள் போட்டியை விட்டு விட்டு பூனையை காப்பாற்றும் முயற்சியில் இறங்கினர். பூனையானது கீழே விழ அதனை பார்வையாளர்கள் பிடித்து காப்பாற்றினர். இதன் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

Read More

தமிழ் சினிமாவில் ரீ எண்ட்ரி கொடுக்கும் நடிகர் வடிவேலு தனது பிரச்சனையை தீர்த்து வைத்தது யார் என தெரிவித்துள்ளார். இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி படம் தொடர்பாக இயக்குநர் ஷங்கர் – நடிகர் வடிவேலு இடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அவருக்கு கடந்த 4 வருடங்களாக சினிமாவில் நடிக்க ரெட் கார்டு போடப்பட்டது. இந்த பிரச்சனை சமீபத்தில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தால் தீர்த்து வைக்கப்பட்டது . இதனை தொடர்ந்து நடிகர் வடிவேலு மீண்டும் முழுவீச்சில் சினிமாவில் நடிக்க உள்ளார். அவர் இயக்குநர் சுராஜ் இயக்கவுள்ள நாய் சேகர் படத்தின் மூலம் ரீ எண்ட்ரி கொடுக்க உள்ளார். இதனை தமிழ் திரையுலகே எதிர்பார்த்து காத்திருக்கிறது. இதனிடையே வடிவேலு நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடினார்.அவருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்தனர். இந்த நிலையில் தனது புதிய படம் குறித்து நடிகர் வடிவேலு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது இந்த பிரச்சினையை முடித்து வைத்தது…

Read More

தமிழகம் நீட் தேர்விலிருந்து விலக்கு பெறும் வகையில் புதிய சட்ட மசோதாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்கிறார். இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு தமிழகத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் பல மாணவர்களின் மருத்துவர் கனவு நனவாகி போனது தான் தொடர்கதையாகி வருகிறது. குறிப்பாக நீட் தேர்வால் தமிழகத்தில் மட்டும் இதுவரை 14 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர். கொரோனா காரணமாக தாமதமாக இந்தாண்டு நீட் தேர்வு நேற்று நடைபெற்றது. இந்த தேர்வுக்கு தயாராகி வந்த சேலம் கோழையூர் மாணவர் தனுஷ் தேர்வு எழுத செல்வதற்கு முன்பே தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் நடப்பு சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடரின் கடைசி நாளான இன்று முதல்வர் ஸ்டாலின் நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானத்தை நிறைவேற்ற உள்ளார். இந்த தீர்மானம் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு…

Read More

நீட் தேர்வு தொடர்பாக தன்னை குறிப்பிட்டு பாஜக ஆதரவாளர் பதிவிட்ட கருத்துக்கு நடிகர் சித்தார்த் பதிலடி கொடுத்துள்ளார். நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு நேற்று நடைபெற்றது. தமிழகத்தில் இந்த தேர்வை 1.10 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர். இதனிடையே இன்று தமிழக சட்டசபையில் நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்நிலையில் செல்வகுமார் என்ற பாஜக ஆதரவாளர் ட்விட்டரில் நடிகர் சித்தார்த்தை குறிப்பிட்டு, “நீட் தேர்வை முதல் சட்டமன்ற கூட்டத்திலேயே ரத்து செய்வோம் – தேர்தல் வாக்குறுதி…இன்று நீட் நடக்கிறது…. பொய் சொன்னால் முதல்வராக இருந்தாலும் கன்னத்தில் அறைவேன் -Actor Siddharth…ஐயா சித்தார்த் என்ன பண்ண போறீங்க ?” என கேள்வி எழுப்பியிருந்தார். இதனை கண்டு கடுப்பான சித்தார்த், “மூதேவி. கோவமோ சந்தேகமோ வந்தா, துப்பிருந்தா போய் நீ கேளு. இல்ல உங்கப்பன போய் கேளு. நான் என் வேலையத்தாண்டா பாக்கறன்.…

Read More

நடிகர் விஜய்யின் சாதி சான்றிதழ் வரலாறு குறித்து அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் பட விழா ஒன்றில் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். ஒயிட் லேம்ப் புரொடக்சன்ஸ்’ தயாரிப்பில் அந்தோணிசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘சாயம்’. இதில் நடிகர் அபி சரவணன் தனது பெயரை விஜய் விஷ்வா என மாற்றிக் கொண்டு கதாநாயகனாக நடித்துள்ளார். இந்தப்படத்தில் சைனி கதாநாயகியாக நடித்துள்ளார்.சலீம் மற்றும் கிறிஸ்டோபர் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப்படத்திற்கு நாக உதயன் இசையமைத்துள்ளார். படிக்கும் மாணவர்கள் மீது சாதி சாயம் பூசுவதால் அவன் வாழ்க்கையே எப்படி திசை மாறுகிறது என்பதை மையப்படுத்தி சாயம் படம் உருவாகியுள்ளது. இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர்கள் எஸ்.ஏ.சந்திரசேகர், ஆர்.வி.உதயகுமார், சாய்ரமணி, ஜாக்குவார் தங்கம், நடிகர் போஸ் வெங்கட், தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்க தலைவர் டி.எஸ்.ஆர் சுபாஷ், நடிகைகள் கீர்த்தனா, கோமல் சர்மா, ஷாஸ்வி பாலா, பாடலாசிரியர்கள்…

Read More