விஜய் இந்த ஜாதி தான்… கோபத்தில் பள்ளியை மிரட்டிய எஸ்.ஏ.சந்திரசேகர்…

SHARE

நடிகர் விஜய்யின் சாதி சான்றிதழ் வரலாறு குறித்து அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் பட விழா ஒன்றில் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

ஒயிட் லேம்ப் புரொடக்சன்ஸ்’ தயாரிப்பில் அந்தோணிசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘சாயம்’. இதில் நடிகர் அபி சரவணன் தனது பெயரை விஜய் விஷ்வா என மாற்றிக் கொண்டு கதாநாயகனாக நடித்துள்ளார்.

இந்தப்படத்தில் சைனி கதாநாயகியாக நடித்துள்ளார்.சலீம் மற்றும் கிறிஸ்டோபர் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப்படத்திற்கு நாக உதயன் இசையமைத்துள்ளார்.

படிக்கும் மாணவர்கள் மீது சாதி சாயம் பூசுவதால் அவன் வாழ்க்கையே எப்படி திசை மாறுகிறது என்பதை மையப்படுத்தி சாயம் படம் உருவாகியுள்ளது. இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர்கள் எஸ்.ஏ.சந்திரசேகர், ஆர்.வி.உதயகுமார், சாய்ரமணி, ஜாக்குவார் தங்கம், நடிகர் போஸ் வெங்கட், தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்க தலைவர் டி.எஸ்.ஆர் சுபாஷ், நடிகைகள் கீர்த்தனா, கோமல் சர்மா, ஷாஸ்வி பாலா, பாடலாசிரியர்கள் கம்பம் குணாஜி, சொற்கோ உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் இயக்குனர் எஸ்.ஏ.சந்திர சேகர் பேசும்போது மாணவர்களிடம் சாதி சாயம் பூசக்கூடது என்பதை வலியுறுத்தும் விதமாக இந்தப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

சமூகத்திற்கு பயன்தரும் விதமான படங்களை எடுப்பவர்களை எனக்கு ரொம்ப பிடிக்கும். ஜாதியை ஒழிப்பதற்கு நாம் நமது வாழ்க்கையில் பிராக்டிகலாக என்ன செய்திருக்கிறோம்..? என் மகன் விஜய்யை பள்ளியில் சேர்க்கும்போது விண்ணப்பத்தில் மதம், சாதி என்கிற இடத்தில் தமிழன் என்று குறிப்பிட்டேன். முதலில் ஏற்றுக்கொள்ள மறுத்தார்கள்.

பள்ளியையே மூடும் அளவுக்கு போராட்டம் நடத்துவேன் என கூறியதும், பின் அமைதியாக ஒப்புக்கொண்டனர். அப்போதிருந்து விஜய்யின் சான்றிதழில் சாதி என்கிற இடத்தில் தமிழன் என்றுதான் தொடர்ந்து வருகிறது.

சாதிக்கு நாம் தான் முக்கியத்துவம் கொடுக்கிறோம்.. நாம் நினைத்தால், இதுபோல பள்ளியில் சேர்க்கும்போதே சாதியை குறிப்பிடாமல் தவிர்த்தால் இன்னும் இருபது வருடங்களில் சாதி என்கிற ஒன்றே இல்லாமல் போய்விடும் என தெரிவித்தார்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

குத்துப் பாட்டு மூலம் பாடகியாக அறிமுகமான லாஸ்லியா!

Admin

சிம்புவின் படம் நாளை ஓடிடியில் ரிலீஸ்!

Admin

“பிக்பாஸ்” ஓவியாவின் புதிய வெப் தொடர் இன்று ரிலீஸ்

Admin

உலகளவில் சிறந்த 25 படங்கள்! யோகிபாபு , தனுஷ் நடித்த படங்கள் தேர்வு!

Admin

மாஸ் லுக்கில் ரஜினி… பட்டையை கிளப்பும் அண்ணாத்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்…

Admin

மூன்றாவதாக ஒரு நகைச்சுவை நடிகர் மாரடைப்பால் பலி… தொடரும் சோகம்…

கோப்ரா ரிலீஸ் தள்ளிப்போகிறது: இயக்குநர் அறிவிப்பு

Admin

மாஸ் காட்டிய அண்ணாத்த… விரைவில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு..

Admin

யுத்தத்தால் விடியுது சத்தத்தால் அராஜகம் அழியுது:விக்ரம் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

Admin

விஜய் ஆண்டனி மன்னிப்பு கேட்டே ஆகணும் :இந்து மக்கள் கட்சியினர் கொந்தளிப்பு

Admin

ரோல்ஸ் ராய்ஸ் கார் விவகாரம் : மேல்முறையீடு செய்கிறாரா நடிகர் விஜய்?

Admin

நடிகை மீரா மிதுனுக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசார் சம்மன்… விரைவில் கைது நடவடிக்கை?

Admin

Leave a Comment