Author: Admin

இந்திய அணியின் புதிய கேப்டன் தொடர்பான சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி பிசிசிஐ விளக்கமளித்து முற்றுப்புள்ளி வைத்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி விரைவில் டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் இந்தியாவை வழிநடத்தும் பொறுப்பில் இருந்து விலக உள்ளதாக நேற்று தகவல் வெளியானது. அவருக்கு அடுத்தாக ரோகித் ஷர்மா இந்தியாவின் டி20 கிரிக்கெட் கேப்டனாக செயல்படுவார் எனவும் தகவல்கள் வெளியாகி இருந்தனர். இந்த மாற்றம் டி20 கிரிக்கெட் உலகக்கோப்பை தொடருக்கு பிறகு இருக்கும் எனவும் கூறப்பட்டது. இதை இந்திய கிரிக்கெட் வாரியத்தின் பொருளாளர் அருண் துமால் திட்டவட்டமாக மறுத்துள்ளார். இதெல்லாம் மிகவும் சிறுபிள்ளைத்தனமாக உள்ளது. இது ஒரு வதந்தி. அவ்வளவு தான். கேப்டன் பொறுப்பு விவகாரம் குறித்து எதுவும் கலந்தாலோசிக்க படவில்லை என்று அவர் கூறியுள்ளார். மேலும் மூன்று வகையான கிரிக்கெட்டிலும் விராட் கோலி தான் இந்திய அணியின் கேப்டன் என அருண் துமால் தெரிவித்துள்ளார்.

Read More

தஞ்சையில் திமுகவினர் சிகரெட் கொடுக்க தாமதம் கடையை அடித்து நொறுக்கிய திமுகவினர் அடித்து நொறுக்கிய சம்பவம் அரங்கேறியுள்ளது. தஞ்சை அருகே உள்ள சூரக்கோட்டையை சேர்ந்த ஆனந்தன் என்பவர் மன்னார்குடி – பட்டுக்கோட்டை பிரிவு சாலையில் பேக்கரி கடையும், டீக்கடையும் நடத்தி வருகிறார். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பிருந்தா நகரை சேர்ந்த மன்னார்குடி திமுக நான்காவது வட்டப் பிரதிநிதி பாண்டவர் , அவரது நண்பர்கள் மன்னார்குடி திமுக நகர இளைஞரணி அமைப்பாளர், முருகேசன், மற்றும் மன்னார்குடியை சேர்ந்த திமுக நிர்வாகிகளான சுரேஷ் பிரபு, இசையரசன் ஆகியோர் கந்தர்வகோட்டை பகுதியில் நடைபெற்ற கறி விருந்துக்கு சென்று விட்டு சூரக்கோட்டையில் உள்ள ஒரு ஆற்றில் குளித்து விட்டு மன்னார்குடி பிரிவு சாலையில் உள்ள பேக்கரியில் உள்ள பெட்டிக்கடையில் சிகரெட் கேட்டுள்ளனர். அப்போது கடையில் இருந்த பெண் சிகரெட் கொடுக்க காலதாமதம் செய்ததால் அந்த பெண்ணை தகாத வார்த்தைகளால் திட்டி அந்தப் பெண்ணின் உடையை பிடித்து இழுத்ததாக…

Read More

அண்ணாத்த படத்தின் மோஷன் போஸ்டர் கொண்டாடத்தில் ஆட்டை பலியிட்டு அபிஷேகம் செய்த ரசிகர்களை கண்டிக்காத நடிகர் ரஜினி மீது நடவடிக்கை எடுக்ககோரி சென்னை டிஜிபி அலுவலகத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினி அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் குஷ்பு, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சூரி, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். டி.இமான் இசையமைக்கும் இப்படம் தீபாவளி அன்று வெளியாகவுள்ளது. அண்ணாத்த படத்தின் ஷூட்டிங் முடிந்து டப்பிங் பணிகள் நடந்து வரும் நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் கடந்த செப்டம்பர் 10 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இதனிடையே தமிழகத்தில் ஏதோ ஒரு ஊரில் மோஷன் போஸ்டர் வெளியானதை கொண்டாடும் விதத்தில் ரஜினி கட் அவுட்டிற்கு ரசிகர்கள் ஆட்டை பலி கொடுத்து அதன் ரத்தத்தினால் அபிஷேகம் செய்யும் வீடியோ சமூக…

Read More

உத்தரப்பிரதேச மாநில அரசு வளர்ச்சி திட்டங்கள் குறித்த விளம்பரத்திற்கு மேற்கு வங்கத்தில் உள்ள படத்தை பயன்படுத்தியதால் கடும் விமர்சனத்தை பெற்றுள்ளது. மேற்கு வங்கம் தலைநகர் கொல்கத்தாவில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் அரசு கட்டிய மேம்பாலம் ஒன்றின் புகைப்படங்களை தங்கள் மாநில அரசின் விளம்பரத்துக்காக உத்தரப்பிரதேச பாஜக அரசு பயன்படுத்தியுள்ளது. கொல்கத்தாவில் உள்ள இந்த பாலம் நகரின் மத்தியப் பகுதியையும், சால்ட் லேக் , ராஜர்ஹட் ஆகியவற்றை இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் கொல்கத்தாவின் அடையாளங்களாகக் கூறப்படும் மஞ்சள் டாக்சி, 5 நட்சத்திர ஓட்டல் ஆகியவற்றுக்கு அடுத்து இதுவும் அமைந்துள்ளது. இந்நிலையில் உத்தரப்பிரதேசத்தில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு நேற்று ஆங்கில நாளேடு ஒன்றில் இந்த மேம்பாலத்தின் புகைப்படத்தை தங்கள் மாநிலத்தின் வளர்ச்சித் திட்டங்களாக சித்தரித்து விளம்பரம் வெளியிட்டு உள்ளது. இதற்கு திரிணாமூல் காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள திரிணாமூல் காங்கிரஸ்…

Read More

சுவிஸ் வங்கியில் உள்ள கறுப்பு பணத்தை மீட்க தொடர் நடவடிக்கைகளை இந்திய அரசு எடுத்து வருகிறது.இதன் ஒரு பகுதியாக சுவிட்சர்லாந்து அரசுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதன்படி சுவிட்சர்லாந்தில் இந்தியர்கள் செய்யும் முதலீடுகள் குறித்த பட்டியல் பகிர்ந்து கொள்ளப்படும். சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் இந்தியர்களின் முதல் பட்டியல், 2019 செப்.,ல் வழங்கப்பட்டது. கடந்த வருடம் அக்டோபரில் இரண்டாவது பட்டியல் ஒப்படைக்கப்பட்டது.தற்போது மூன்றாவது பட்டியல் இந்த மாத இறுதிக்குள் ஒப்படைக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முதல் முறையாக சுவிட்சர்லாந்தில் இந்தியர்கள் வாங்கியுள்ள சொத்துக்கள் குறித்த தகவலும் அளிக்கப்பட உள்ளதாக தெரிகிறது. இந்த பட்டியலின் மூலம்  பல்வேறுதலைவர்கள்,தொழிலதிபர்கள் உள்ளிட்டோரின் மோசடிகள் வெளிச்சத்துக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Read More

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் குறித்த அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 6 மற்றும் அக்டோபர் 9 ஆகிய தேதிகளில் நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. சென்னை கோயம்பேட்டிலுள்ள மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தில் மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் செய்தியாளர்களை சந்தித்தார். இந்தத் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் செப்டம்பர் 15-ஆம் தேதி முதல் தொடங்கும் என்றும், மனு தாக்கல் செய்ய கடைசி தினம் செப்டம்பர் 22 என்றும் தெரிவித்துள்ளது. வேட்புமனு பரிசீலனை செப்டம்பர் 23 என்றும், வேட்பு மனுவை வாபஸ் பெற கடைசி நாள் செப்டம்பர் 25 என்றும், அக்டோபர் 6 மற்றும் 9 களில் பதிவாகும் வாக்குகள் அக்டோபர் 12ஆம் தேதி எண்ணப்பட்டு அன்று மாலையே முழு ரிசல்ட் வெளியாகும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவிக்கப்பட்டுள்ளது .மேலும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய 9…

Read More

முடி திருத்தும் கடையில் குழந்தை ஒன்று முடி வெட்டும் போது அழுதுள்ளது. அக்குழந்தையின் அழுகையை நிறுத்த அந்த முடி திருத்தும் தொழிலாளர்கள் செய்த செயல் வீடியோவாக ட்விட்டரில் வைரலாகி வருகின்றது. அந்த வீடியோவில் குழந்தை முடி வெட்டும் போது மிகவும் பயந்துஅழத்தொடங்கியுள்ளது அதற்கு அங்கு இருந்த முடி திருத்தும் நபர்கள் அனைவரும் பாட்டு பாடி குழந்தையை மகிழ்ச்சி அடைய செய்து அந்த குழந்தையின் அழுகையை நிறுத்தி அந்த நபர்கள் பாட்டுவதை அழகாக வேடிக்கை பார்க்கிறது. தற்போது இந்த வீடியோவினை பார்த்த ட்விட்டர் வாசிகள் அந்த நபர்களின் செயல் பார்க்கவே எவ்வளவு கியூட்டாக உள்ளதாக ருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Read More

நான் ஏன் இவர்களோடு திரிகிறேன்? காலை ஒரு பழங்குடி ஊரை (தெருக்களை) முழுமையாக சுற்றிப்பார்க்க முடிந்தது. ஆனால் மக்களின் எண்ணம் குறித்து புரிந்துகொள்வதற்கு இன்னும் நேரமெடுக்கும். அதற்குள் ஜன்பத் அலுவலகம் சென்றோம். காலையில் வந்த ஒருவர் இன்னும் நிர்வாக அதிகாரியைச் சந்திக்காமல் அவர் நிர்வகிக்கும் பகுதிகளுக்குள் சுற்றித் திரிவதா? இந்த தொனியில்தான் அந்த அழைப்பு வந்ததாக தகவல். அந்த ஜன்பத் சி.இ.ஓ.வைச் சந்திக்கத்தான் இங்கு வந்துள்ளோம். இங்குள்ள 109 கிராமங்களையும் நிர்வகிக்கும் அந்த ஜான்பாத்தின், தலைமை அலுவலர் ஒரு பெண் என்றார்கள். வைஜயந்தி மாலா ரேஞ்சுக்கு நினைத்துக்கொண்டு போனேன். TD (ட்ரைபல் டெவலப்மெண்ட்) ஆபிஸ் வாசலில் வெகுநேரம் நானும், அகிலேஷும் பேசிக்கொண்டிருந்தோம். அவர் அவருக்கு வராத ஆங்கிலத்திலும், நான் எனக்கு தெரியாத இந்தியிலும். அப்போதுதான் அறிமுகமானார் மீத் ராம். நெற்றியில் குங்கும திலகம். கையில் கயிறு என விநாயகர் சதுர்த்தி ஜோரில் இருந்தார். இந்த உலகம்தான் எவ்வளவு கொடுமையானது. இந்தி தெரியாதவனுக்கு…

Read More

தமிழக சட்டப்பேரவையில் நீட் தேர்வுக்கு விலக்கு கோரி கொண்டுவரப்பட்ட மசோதா நிறைவேறிய நிலையில், பாஜக வெளிநடப்புசெய்துள்ளது. தமிழக சட்டப்பேரவையில் நீட் தேர்வுக்கு விலக்கு கோரி முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கொண்டுவந்த மசோதா தற்போது நிறைவேற்றப்பட்டன. இந்த மசோதாவிர்கு அதிமுக உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன், குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டது. நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் மசோதாவை அதிமுக அதிரிப்பதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேரவையில் தெரிவித்துள்ளார். மேலும், நீட் விலக்கு மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பேரவையில் இருந்து பாஜக வெளிநடப்பு செய்துள்ளது. நீட் தேர்வால் பல நன்மைகள் உண்டு என பாஜகவின் நயினார் நாகேந்திரன் பேசிய நிலையில், வெளிநடப்பு செய்தனர். கூட்டணி கட்சியின் முடிவு வேறு எங்களின் முடிவு வேறு என்றும் குறிப்பிட்டார். தமிழக சட்டப்பேரவையில் நீட் விலக்கு மசோதா ஒருமனதாக நிறைவேறிய நிலையில், குடியரசு தலைவரின் ஒப்புதலை பெற தமிழக அரசு முடிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Read More

பெகாசஸ் மென்பொருள் ஒட்டுக் கேட்பு விவகாரத்தில் விரிவான பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய விரும்பவில்லை என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இஸ்ரேல் நாட்டின் பெகாசஸ் உளவு மென்பொருள் விவகாரம் இந்திய அரசியலில் பேசு பொருளான கதை நாம் அறிந்ததே ,இந்த விவகாரம் தொடர்பாக சுதந்திரமான விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு தரப்பினர் சார்பில் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா, நீதிபதிகள் சூர்யகாந்த், அனிருதா போஸ் ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்து வருகிறது. இந்த நிலையில் கடந்த 7-ம் தேதி மத்திய அரசு தாக்கல் செய்தமனுவில், பெகாசஸ் விவகாரம் தொடர்பாக மத்திய அரசில் மூத்த அதிகாரிகளைச் சந்திப்பதில் சிக்கல் இருந்து வருகிறது. ஆதலால், மனுதாரர்களுக்கு பதில் அளிக்கும் வகையில் 2-வது பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்ய அவகாசம் தேவை எனக் கோரப்பட்டது. இந்தச் சூழலில்…

Read More