- தமிழ்நாடு
- இந்தியா
- உலகம்
- அரசியல்
- நூல் அறிமுகம்
- சினிமா
- தமிழ்
- தொடர்கள்
- நலவாழ்வு
- உணவு
- வரலாறு
- வினோதங்கள்
- Public Post
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: Admin
தமிழகத்தில் செப்டம்பர் 1-ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் 9, 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், –> 50 % மாணவர்களுக்கு சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்த வேண்டும் –> வாரத்தில் 6 நாட்களுக்கு பள்ளிகள் செயல்பட வேண்டும் மற்றும் ஆன்லைன் வகுப்புகளையும் தொடர வேண்டும் –> ஆன்லைன் வகுப்பில் மட்டும் பங்கேற்க விரும்பும் மாணவர்களுக்கு பள்ளிகள் அனுமதி தர வேண்டும் –> வகுப்பறையில் 20 மாணவர்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும் –> வெப்பநிலை பரிசோதனை, முகக்கவசம் அணிதல், கிருமிநாசினி தெளித்து அடிக்கடி சுத்தம் செய்தல், தனி மனித இடைவெளியை பின்பற்றுதல், கூட்டம் சேராமல் தடுத்தல் போன்றவை கட்டாயமாக பின்பற்றப்பட வேண்டும் –> பயோமெட்ரிக் வருகைப் பதிவேட்டை பயன்படுத்தக் கூடாது…
பாலியல் தொல்லையால் பாதிக்கப்படும் பெண்களுக்கு எப்போதும் நாங்கள் ஆதரவாக இருப்போம் என பாஜகவைச் சேர்ந்த நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார். பாஜகவைச் சேர்ந்த கே.டி.ராகவன் தனது மொபைல்போனில் ஆபாச வீடியோ சாட்டிங் செய்ததாக வீடியோ ஒன்று வெளியாகி ஒட்டுமொத்த தமிழகத்தையும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதுதொடர்பாக பாஜகவில் உள்ள பெண் தலைவர்களான வானதி சீனிவாசன், குஷ்பு, காயத்ரி ரகுராம் போன்றவர்கள்கருத்து எதுவும் தெரிவிக்காதது குறித்து பலரும் இணையத்தில் கேள்வி எழுப்பியிருந்தனர். இதனிடையே நடிகை காயத்ரி ரகுராம் ட்விட்டரில் பெயர் குறிப்பிடாமல் சட்டம் என்பது அனைவருக்கும் பொதுவானது. தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். சட்டத்தின் முன்னிருந்து தப்பினாலும் தெய்வம் தண்டிக்கும். அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும் என தெரிவித்திருந்தார். இந்நிலையில் இணையவாசி ஒருவர் ட்விட்டரில் குஷ்புவின் ஐடியை குறிப்பிட்டு ‘பாஜக பெண் தொண்டர்களின் நிலை உண்மையாகவே பரிதாபத்திற்குரிய நிலைல தான் இருக்கு. அவங்களுக்கு ஆதரவா நீங்க எல்லாம் முன் வரனும்ன்னு நினைக்கிறோம்’ என…
நடிகர் சூர்யாவின் தயாரிப்பு நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்ட நபரால் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகனாக உள்ள நடிகர் சூர்யா 2டி எண்டெர்டெயின்மெண்ட் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறார். இதன்மூலம் ஏராளமான படங்களை தயாரித்து வெளியிட்ட நிலையில் தற்போது ‘உடன் பிறப்பே’, ‘ஓ மை டாக்’, ‘ராமே ஆண்டாலும், ராவணே ஆண்டாலும்’, ‘ஜெய் பீம்’ ஆகிய படங்களை தயாரித்து வருகிறார். இந்நிலையில் 2டி நிறுவனத்தின் பெயரில் போலி மின்னஞ்சல் முகவரி, லோகோவைப் பயன்படுத்தி அடையாளம் தெரியாத நபர்கள் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக 2டி நிறுவனம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், நடிக்க வாய்ப்பு தேடும் நபர்களை குறிவைத்து போலி மின்னஞ்சல் முகவரி, 2டி நிறுவனத்தின் லோகோ உள்ளிட்டவற்றை பயன்படுத்தி சிலர் அழைப்பு விடுப்பதாக எங்களுக்கு தெரியவந்துள்ளது. எங்கள் பெயரைத் தவறாகப் பயன்படுத்தி பணம் பறிக்க…
ஆப்கானில் நேற்று காபூல் விமான நிலையத்தில் நடந்த வெடிகுண்டுதாக்குதலுக்கு உலக நாடுகள் பலவும் தங்களின் கண்டணத்தை தெரிவித்து வருகின்றன. நேற்று இந்த குண்டுவெடிப்பில் ஆப்கானிஸ்தானிலிருந்த அமெரிக்கப் படைகளைச் சேர்ந்த 13 கொல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வெடிகுண்டு தாக்குதல் குறித்து காட்டமாகப் பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன்: இந்தத் தாக்குதலை யார் முன்னின்று நடத்தினார்களோ, யார் அமெரிக்கா பாதிக்கப்பட வேண்டும் என்று விரும்பினார்களோ அவர்கள் இதனை தெரிந்துகொள்ளவேண்டும். நாங்கள் இதை மன்னிக்க மாட்டோம். நாங்கள் இதை மறக்க மாட்டோம். நாங்கள் உங்களை வேட்டையாடுவோம். ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கர்கள் மற்றும் நட்பு நாட்டைச் சேர்ந்தவர்களை மீட்கும் பணி தொடரும் என கூறியுள்ளார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என காங்கிரஸ் எம்.பி.ஜோதிமணி காட்டமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழக பாஜக மாநில பொதுச்செயலாளராக இருந்த கே.டி. ராகவனுக்கு எதிரான பாலியல் ரீதியிலான வீடியோ அரசியல் களத்தில் கடும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தனது பதவியை ராஜினாமா செய்த கே.டி.ராகவன் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்ததோடு இதனை சட்டப்படி சந்திப்பேன் என்றும், தர்மம் வெல்லும் என்றும் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக விசாரிக்க பாஜக சார்பாக மாநில செயலாளர் மலர்க்கொடி தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியிருந்தார். இந்த வீடியோவை வெளியிட்ட பாஜக நிர்வாகியான மதன் ரவிச்சந்திரனும் கட்சியை விட்டு நீக்கப்பட்டுள்ளார். இதனிடையே கே.டி.ராகவன் வீடியோ குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலையிடம் பேசியதாக கூறி மதன் ரவிச்சந்திரன் நேற்று வீடியோ ஒன்றையும் வெளியிட்டு இருந்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இது தொடர்பாக காங்கிரஸ்…
நடிகரும், சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலினின் மகன் இன்பன் உதயநிதி கால்பந்து தொடருக்கான அணி ஒன்றில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேரனும்,சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலினின் மகனுமான இன்பன் உதயநிதி கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது தந்தையுடன் இருந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலானது. தாத்தா, பெரியப்பா, அப்பா, அத்தை என அனைவரும் அரசியலில் ஆளுமைகளாக வலம் வர இன்பன் உதயநிதியோ சென்னையிலுள்ள மேக்ஸ் கால்பந்து அகாடமியில் பயிற்சி பெற்று வருகிறார். கால்பந்தில் டிபெண்டர் ரோலில் பயிற்சி செய்து வரும் அவரை ஐலீக் தொடருக்காக நேரடியாக ஒரு அணி ஒப்பந்தம் செய்துள்ளது. இந்தியளவில் பிரபலமான ஐ லீக் தொடர் 2007 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இதில் 21 கிளப் பணிகள் கலந்துகொள்வது வழக்கம். இந்தாண்டுக்கான தொடர் ஆரம்பமாக உள்ள நிலையில் புதிய வீரர்களை ஒப்பந்தம் செய்யும் பணிகளில் கிளப் அணிகள் ஈடுபட்டு வருகிறது.…
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் விமான நிலையத்தில் நேற்று, இரண்டு இடங்களில் நடத்தப்பட்ட மனித வெடிகுண்டு தாக்குதலில் 12 அமெரிக்க ராணுவ வீரர்கள் உட்பட, 90 பேர் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது ஆப்கானில் தாலிபான்கள் கைபற்றியதிலிருந்து பதட்ட நிலைதான் நீடித்து வருகிறது. இந்த நிலையில் காபூல் விமான நிலையத்திற்கு மக்கள் யாரும் செல்ல வேண்டாம் என்று பிரிட்டன் வெளியுறவுத் துறை அமைச்சகம் கூறியிருந்தது. இந்நிலையில், நேற்று மாலை காபூல் விமான நிலையம் அருகே தற்கொலை வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்காவின் பெண்டகன் அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலில் சிறுவர்கள் உட்பட அப்பாவி மக்கள் பலர் உடல் சிதறி பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. காபூல் விமான நிலையத்தின் நுழைவு வாயில்இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. இது தற்கொலைத் தாக்குதலாக இருக்கலாம் என்று அமெரிக்க பெண்டகன் அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த தற்கொலை வெடிகுண்டு தாக்குதலில் 3 அமெரிக்க ராணுவத்தினரும், தாலிபான்களில் சிலரும் படுகாயமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. ஆப்கானிஸ்தானை…
பிரபல யாகூ’நிறுவனம், இந்தியாவில்,தனது செய்தி இணையதள சேவையை நிறுத்திவிட்டதாக அறிவித்துள்ளது. இந்தியாவில், டிஜிட்டல் ஊடக நிறுவனங்களில் மேற்கொள்ளப்படும் வெளிநாட்டு முதலீட்டு வரம்பை குறைத்ததை அடுத்து, யாகூ நிறுவனம் இந்த முடிவுக்கு வந்திருப்பதாக தெரிவித்துள்ளது. ஆகவே யாகூ செய்திகள், யாகூ கிரிக்கெட், நிதி, பொழுதுபோக்கு மேக்கர்ஸ் இந்தியா’ ஆகிய சேவைகள் நிறுத்தப்படுவதாக கூறியுள்ளது. அதே சமயம் யாகூ மின்னஞ்சலை பயன்படுத்துபவர்களுக்கு எந்த பாதிப்பும் இருக்காது என்றும், அதன் சேவைகள் வழக்கம் போலவே தொடரும் என்றும் யாகூ’நிறுவனம் தெரிவித்துள்ளது. .யாகூ நிறுவனம் கடந்த 20 ஆண்டுகளாக செய்தி சேவைகளை வழங்கி வந்தது குறிப்பிடத்தக்கது.
சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பிய வழக்கில், நடிகை மீரா மிதுனை இரண்டாவது வழக்கில் போலீசார் கைது செய்தனர். மிஸ் சவுத் இந்தியா, மிஸ் தமிழ்நாடு என அழகிப் போட்டிகளில் பட்டம் வென்றவர் நடிகை மீரா மிதுன். தான் ஒரு சூப்பர் மாடல் என்றும், தன்னுடைய ஸ்டைலை தான் மற்ற நடிகைகள் பின்பற்றுகிறார்கள் என்றும் சொல்லி கொண்டு வலம் வருபவர்மீரா மிதுன். சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் பட்டியலினத்தவர் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் நடிகை மீரா மிதுன் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த ஜோ மைக்கேல் பிரவீன் என்பவர் கடந்தாண்டு அளித்திருந்த புகாரில், மீரா மிதுன் சமூக வலைத்தளங்களில் தனது பெயரையும், புகைப்படத்தையும் தவறாக பயன்படுத்தி தொடர்ந்து அவதூறு பரப்பி வருகிறார் எனக்கூறி, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் மீரா மிதுன் மீது மீண்டும் கைது செய்யப்பட்டார்.
ஆப்கானிஸ்தான் முன்னாள் அமைச்சர் காலசூழ்நிலை காரணமாக ஜெர்மனியில் ‘பீட்சா டெலிவரி’ செய்யும் வேலை பார்த்து வருகிறார். ஆப்கானிஸ்தானில் முன்னாள் அதிபர் அஷ்ரப் கனியின் அமைச்சரவையில் தகவல் தொடர்பு மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சராக சையது அகமது சதாத் பணியாற்றியவர் . கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அதிபருடன் ஏற்பட்ட பிரச்சனையால் தனது பதவியை ராஜினாமா செய்தார். பின்பு இவர் ஆப்கானிஸ்தானை விட்டும் வெளியேறினார். பின் ஐரோப்பிய நாடான ஜெர்மனியின் சக்சோனி மாகாணத்தில் உள்ள லெய்ப்சிக் நகரில் தஞ்சமடைந்தார். அவரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதையடுத்து டெலிவரி பாய் வேலையை பார்த்து வருவது தற்போது தெரியவந்துள்ளது. பீட்சா டெலிவரி செய்ய அவர் சைக்கிளில் செல்லும் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. பணம் இல்லாத காரணத்தால் டெலிவரி பாய் வேலையில் சேர்ந்ததாக அவர் தெரிவித்துள்ளார். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் இரண்டு முதுநிலை பட்டங்களை பெற்றுள்ள சையது சவுதி அரேபியா உள்ளிட்ட 13 நாடுகளில் தகவல் தொடர்புத் துறையில்…
