- தமிழ்நாடு
- இந்தியா
- உலகம்
- அரசியல்
- நூல் அறிமுகம்
- சினிமா
- தமிழ்
- தொடர்கள்
- நலவாழ்வு
- உணவு
- வரலாறு
- வினோதங்கள்
- Public Post
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: Admin
பாஜக ராகவனின் பாலியல் குற்றத்தை, சுரண்டலை சிறிதும் வெட்கம் இல்லாமல் அப்பட்டமாக ஆதரிக்கும் திரு.சீமானின் செயல்பாடு வெட்கக்கேடானது என காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி கண்டணம் தெரிவித்துள்ளார். பாஜகவின் மாநில பொதுச் செயலாளராக இருந்த கே.டி.ராகவன் தொடர்பான பாலியல் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியானது. இந்த வீடியோ விவகாரம் சர்ச்சையானதால் ,தான் வகித்த மாநில பொதுச் செயலாளர் பதவியை கே.டி. ராகவன் ராஜினாமா செய்தார். இந்த குற்றச்சாட்டு தொடர்பாக விசாரிக்க பாஜகவில் குழு அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் இந்த சம்பவம் தொடர்பான கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், இது சமூக குப்பை. ராகவனின் அனுமதியில்லாமல் அவரது தனிப்பட்ட இடங்களில் வீடியோ வைத்து எடுப்பது என்பதுதான் சமூக அவலம். இந்த வீடியோவை வெளியிட்ட நபரை (மதன் ரவிச்சந்திரன்) கைது செய்திருக்க வேண்டும். உலகில் எங்குமே நடக்காத ஒன்றை…
இந்திய பிரதமர் மற்றும் மத்திய அமைச்சரின் பெயர்களுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்படும் யூ-டியூப் சேனல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பா.ஜ.க வழக்கறிஞர் பிரிவு சார்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் பா.ஜ.க வழக்கறிஞர் பிரிவு சார்பில் புகார் ஒன்று அளிக்கப்பட்டது. அந்தப் புகாரில் பாஜகவின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் இந்திய பிரதமர் மற்றும் மத்திய அமைச்சரை அவதூறாக சித்தரித்து மார்ஃப் செய்யப்பட்டுள்ள புகைப்படத்தை பரப்பும் யூ-டியூப் சேனல் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தெரிவிக்கப்பட்டுள்ளது. புகார் அளித்த பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த பாஜக வழக்கறிஞர் பிரிவைச் சேர்ந்த பால் கனகராஜ், இந்திய பிரதமர் நரேந்திர மோடியை பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி பின்னால் இருந்து கட்டியணைப்பதுபோல் ஒரு புகைப்படத்தை கடந்த 6ஆம் தேதி Modern Times என்ற யூ-டியூப் சேனல் வெளியிட்டு…
டோக்கியோ பாராலிம்பிக் போட்டியில், இந்தியா ஒரே நாளில் 4 பதக்கங்கள் வென்றுள்ளதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஜப்பானில் நடைபெற்று வரும் பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய சார்பில் வீரர்கள் பங்கேற்று அசத்தி வருகின்றனர். இன்று ஒரே நாளில் மட்டும் துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் அவனி லெகாரா தங்கமும், வட்டு எறிதலில் யோகேஷ் கதுனியா வெள்ளியும், ஈட்டி எறிதலில் தேவேந்திர ஜஜாரியா, சுந்தர்சிங் ஆகியோர் முறையே வெள்ளி மற்றும் வெண்கலமும் வென்றிருந்தனர். இந்தநிலையில் இவர்களுக்கு பாராட்டு தெரிவித்து டிவிட்டரில் பதிவிட்டிருந்த ராமதாஸ், பாரா ஒலிம்பிக் போட்டிகளில் ஒரே நாளில் இந்தியா 4 பதக்கங்களை வென்றது இதுவே முதல்முறை எனவும், இந்தியா அதிக பதக்கங்களை வென்றிருப்பதும் இந்தப் போட்டியில் தான் எனவும் பாராட்டியுள்ளார்.
ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த செய்தி வாசிப்பாளர் துப்பாக்கி முனையில் செய்தி வாசிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, ஆட்சி நடத்தி வருகின்றன. ஆப்கானிஸ்தானில் மக்கள் மீதான தாலிபான்களின் அடக்கு முறையை வெளிப்படுத்தும் பல வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வருகின்றன. அதன்வரிசையில் தற்போது புதிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் தாலிபான்களை பார்த்து பயப்பட வேண்டாம், அவர்கள் தீங்கற்றவர்கள் என ஆப்கன் செய்தி வாசிப்பாளர் ஒருவர் மரண பீதியில் செய்தி வாசிக்க அவர் பின்னால் துப்பாக்கிகளுடன் தாலிபான்கள் நிற்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
பழுதான ரயிலை பொதுமக்கள் தள்ளிக்கொண்டு செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பொதுவாக பைக், கார், லாரி மற்றும் பேருந்து போன்ற வாகனங்கள் திடீரென பழுதாகி நின்றால் அதனை பொதுமக்கள் தள்ளிக்கொண்டு போவது வழக்கம். ஆனால் சில தினங்களுக்கு முன்பு உக்ரைனில் உலகின் பெரிய மற்றும் அதிக பாரம் சுமந்து செல்லும் சரக்கு விமானத்தை 8 பேர் கொண்ட குழு இழுத்து சென்று சாதனைப் படைத்தனர். இவர்களுக்கு நாங்கள் ஒன்றும் சற்றும் சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபிப்பது போன்ற சம்பவம் மத்திய பிரதேசத்தில் நடந்துள்ளது. அங்குள்ள ஹர்த் என்ற இடத்தில் ரயிலில் சென்று மின்சார வயர்களை சீரமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். அப்போது ரயிலில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால் ரயில்வே ஊழியர்கள் மற்றும் சுற்றுப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் என 30க்கும் மேற்பட்டோர் அந்த ரயிலை கைகளால் தள்ளி சென்றனர். ஒரு தண்டவாளத்தில் இருந்து மற்றொரு தண்டவாளத்துக்கு மக்கள் ரயிலை தள்ளிக்கொண்டு…
தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவ சிகிச்சைக்காக விமானம் மூலம் இன்று துபாய் சென்ற நிலையில் அதன் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது. நடிகரும்,தேமுதிக நிறுவனத் தலைவருமான விஜயகாந்த் கடந்த சில வருடங்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வருகிறார். இதன் காரணமாக சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அவர் போட்டியிடவில்லை. அவ்வப்போது அவரின் புகைப்படங்கள் வெளியாகி வரும் நிலையில், தேமுதிக பொதுக் கூட்டங்கள் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதையும் அவர் தவிர்த்து வந்தார். இதனிடையே சில தினங்களுக்கு முன்பு விஜயகாந்த் தனது 69வது பிறந்தநாளை கொண்டாடினார். அப்போது வெளியிடப்பட்ட அறிக்கையில் கூட தன்னை யாரும் நேரில் வந்து சந்திக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். கொரோனா ஊரடங்கால் வெளிநாட்டு சிகிச்சையை தவிர்த்து வந்த நிலையில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவ்வப்போது விஜயகாந்த் மருத்துவ பரிசோதனைகளை செய்து வந்தார். இந்நிலையில் மருத்துவ சிகிச்சைக்காக இன்று காலை விஜயகாந்த் விமானம் மூலம் துபாய் சென்றார். விமான நிலையத்தில் அவரை உதவியாளர்கள்…
.நியூயார்க் டைம்ஸ் சர்வதேச திரைப்பட பட்டியலில் சார்பட்டா பரம்பரை படம் இடம் பெற்று சாதனை படைத்துள்ளது. பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, பசுபதி, துஷரா விஜயன்,ஜி.எம்.சுந்தர் உள்ளிட்ட பலர் நடித்திருந்த படம் சார்பட்டா பரம்பரை கடந்த ஜூலை 22 ஆம் தேதி அமேசான் ஓடிடி தளத்தில் வெளியானது. அவரசநிலை காலக்கட்டத்தில் வடசென்னையில் இரண்டு பரம்பரைகளுக்கு இடையேயான குத்துச் சண்டையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் இடம்பெற்ற காட்சி ஒன்று மீம்ஸ் கிரியேட்டர்களின் டெம்பிளேட்டாக மாறியுள்ளது. இந்நிலையில் நியூயார்க் டைம்ஸ் நாளிதழின் இணையதளத்தில் ஒளிபரப்பப்பட்ட 5 சர்வதேச திரைப்படங்களின் பட்டியலில் சார்பட்டா பரம்பரை படமும் இடம் பெற்றுள்ளது. மேலும் இந்த படம் பற்றியும், இயக்குநர் பா.ரஞ்சித் பற்றியும் பெரிய அளவில் பாராட்டி செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் இடம்பெற்ற ஒரே இந்திய திரைப்படம் சார்பட்டா பரம்பரை தான் என்பது குறிப்பிடத்தக்கது.
பாலியல் வீடியோ விவகாரத்தில் முன்னாள் பாஜக மாநில செயலாளர் கே.டி.ராகவனுக்கு ஆதரவாக சீமான் கருத்து தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வாரம் பாஜக மாநில பொதுச்செயலாளராக இருந்த கே.டி.ராகவன்இடம் பெற்றதாக பாலியல் சர்ச்சைக்குள்ளான வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தை பாஜகவைச் சேர்ந்த யூ-ட்யூபர் மதன் வெளிச்சத்துக்கு கொண்டு வர பல்வேறு தரப்பில் இருந்தும் கே.டி. ராகவனுக்கு கண்டனங்கள் குவிந்த நிலையில் அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். மதனும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இதனிடையே கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு சென்னை வளசரவாக்கம் பகுதியில் அமைந்துள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகமான ராவணன் குடிலில் ‘ மாயோன் பெருவிழா’ நிகழ்ச்சி நடைபெற்றது . அங்கு வைக்கப்பட்டிருந்த மாயோன் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்திய பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சீமானிடம் கே.டி.ராகவன் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், உலகத்தில் நடக்காத ஒன்றையா…
விழுப்புரம் அருகே பெற்ற குழந்தையை தாய் கொடுமைப்படுத்திய விவகாரத்தில் திடீர் திருப்பமாக அவரது வாக்குமூலம் அமைந்துள்ளது. சில தினங்களுக்கு முன்பு பெற்ற குழந்தையை தாய் கொடுமைப்படுத்திய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி தமிழக மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. விழுப்புரம் மாவட்டம் மணலப்பாடி அடுத்த மோட்டூர் கிராமத்தைச் சேர்ந்த வடிவழகன், ஆந்திர மாநிலம் ராம்பள்ளியைச் சேர்ந்த துளசி என்பவரை கடந்த 2016 ஆம் ஆண்டு திருமணம் செய்தார். ஊரடங்கால் சொந்த ஊர் திரும்பிய தம்பதியினர் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. அதேசமயம் வேறு ஒருவரிடம் தொடர்ந்து தொலைபேசியில் துளசி பேசி வந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து இருவருக்குள்ளும் சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால் துளசியை ஆந்திராவில் உள்ள அவரது தாய் வீட்டுக்கு வடிவழகன் அனுப்பிவிட்டார். இதில் ஏற்பட்ட வெறுப்பு காரணமாக 2 வயதான குழந்தை பிரதீப்பை துளசி கொடுமைப்படுத்தி வந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட தாய் துளசி மீது…
கொரோனா தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டிருந்த நிலையில், வரும் செப்1ஆம் தேதி முதல் திறப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்காக முன் தயாரிப்புகள், வழிகாட்டு நடைமுறைகள், தொடர் ஆலோசனைக் கூட்டங்கள் என அரசுத் தரப்பில் ஏராளமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதே சமயம், பெற்றோர்கள் தரப்பிலும் குழந்தைகள் நலன் குறித்த கவலை அதிகரித்துள்ளதைப் பார்க்க முடிகிறது. இதன் விளைவாக பள்ளிகளைத் திறக்க வேண்டாம் என்ற கோரிக்கையும் பரவி வருகிறது. இதுகுறித்து அரசுப்பள்ளி தலைமை ஆசிரியரும், எழுத்தாளருமான இரா.எட்வின் அவர்களிடம் பேசினோம். அவர் தெரிவித்ததாவது, “ஆசிரியர்களுக்கு இரண்டு டோஸ் கட்டாயம். 6 அடி இடைவெளி அனைவருக்கும் கட்டாயம் என கண்டிப்பான விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளன. ஆனால், இவை எதுவும் தொற்றுப் பரவாமல் இருப்பதை உறுதி செய்யும் புதிய திட்டங்கள் அல்ல. இன்னும் ஒரு படி மேலே சொன்னால், ஏற்கனவே பல்வேறு இடங்களில் அமலில் இருந்து தோற்றுப்போன நடைமுறைகள் தான். மைசூரு…
