- தமிழ்நாடு
- இந்தியா
- உலகம்
- அரசியல்
- நூல் அறிமுகம்
- சினிமா
- தமிழ்
- தொடர்கள்
- நலவாழ்வு
- உணவு
- வரலாறு
- வினோதங்கள்
- Public Post
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: Admin
ஜெயலலிதா பல்கலைகழக இணைப்பு மசோதாவிற்கு எதிராக சாலையில் தர்ணா செய்த ஓபிஎஸ் உள்ளிட்ட அதிமுக எம்.எல்.ஏக்கள் கைது செய்யப்பட்டனர். வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தைப் பிரித்து விழுப்புரத்தை தலைமையிடமாக கொண்டு டாக்டர். ஜெ.ஜெயலலிதா பல்கலைக்கழகம் கடந்த அதிமுக ஆட்சியில் அமைக்கப்பட்டது. அதன்பின் தமிழகத்தில் புதிதாக ஆட்சிக்கு வந்த திமுக அரசு இந்தப் பல்கலைக்கழகம் அண்ணாமலை பல்கலைக் கழகத்துடன் இணைக்கப்படும் என்று அறிவித்திருந்தது. சட்டப்பேரவையில் ஜெயலலிதாபல்கலைக்கழக விவகாரம் குறித்து பேசிய உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பெயர் வைக்க வேண்டும் என்பதற்காகவே அதிமுக அரசு ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை கொண்டு வந்தது என்று குறிப்பிட்டார். இந்நிலையில் ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கும் மசோதா சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர் பின்னர் சட்டப்பேரவை நடக்கும் கலைவாணர் அரங்கத்துக்கு வெளியே வாலாஜா சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஓபிஎஸ் உள்ளிட்ட அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கைது…
ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படைகள் முழுவதும் வெளியேறியுள்ளதால் அங்கு தாலிபான்கள் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆப்கானிஸ்தானில் நேட்டோ மற்றும் அமெரிக்கப் படைகள் வெளியேறத் தொடங்கியதால் 20 ஆண்டுகளாக அடங்கி இருந்த தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை முழுவதுமாக கைப்பற்றியுள்ளனர். இதனால் அங்கு உயிர்வாழ அச்சப்பட்டு வேறு நாடுகளுக்கு அகதிகளாக தஞ்சம் அடைய தலைநகர் காபூல் விமான நிலையத்தில் குவிந்த நிலையில் அங்கு ஐஎஸ்ஐஎஸ்-கே தீவிரவாதிகள் நடத்திய இரட்டை வெடிகுண்டு தாக்குதலில் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள், அமெரிக்க இராணுவத்தினர், தாலிபான்கள் என அனைவரும் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமெரிக்காவும் வெடிகுண்டு தாக்குதலை நடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபரை தாக்க விமான நிலையம் அருகே உள்ள கட்டடம் மீது ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தியது. இதனால் அங்கு உச்சக்கட்ட பதற்றநிலை நிலவி வருகிறது. இதனிடையே ஆப்கானில் இருந்து அமெரிக்கப்படைகள் ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குள் வெளியேற்றப்படும் என அதிபர் ஜோ பைடன் அறிவித்திருந்தார். அதன்படி கடந்த…
புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு பேரவைக்கு வந்த சபாநாயகருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் – பா.ஜ.க. கூட்டணி ஆட்சி அமைக்கப்பட்ட பிறகு, கடந்த 26 ஆம் தேதி முதல் சட்டசபைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. புதிய அரசின் முதல் கூட்டத்தில் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உரையாற்றினார். அதன்பின் அன்று மாலை 2021-22-ம் நிதியாண்டிற்கான முழு பட்ஜெட்டை நிதி துறை பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் ரங்கசாமி தாக்கல் செய்தார். அதைத் தொடர்ந்து மானியக் கோரிக்கைகளில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று புதுச்சேரி சட்டப்பேரவை நிகழ்வில் கலந்து கொள்வதற்கு பேரவைக்கு வந்த சபாநாயகர் செல்வத்திற்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதையடுத்து புதுச்சேரி அரசு பொதுமருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்து சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றது.
பெட்ரோல் டீசல் விலை நாளுக்கு நாள் ஏற்ற இறக்கத்துடன் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில், ஆகஸ்ட் 31ஆம் தேதியான இன்று சென்னையில் பெட்ரோல் விலை 99.20ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. . அதேபோல டீசல் விலை லிட்டருக்கு 93.52 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. நேற்றைய விலையில் இருந்து இன்று எந்த மாற்றமுமில்லை என்பது கவனிக்கத்தக்கது.
அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் கொரோனா மூன்றாம் அலை தீவிரமடையும் என்று ஐஐடி கான்பூர் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் தற்போது பரவி வரும் கொரோனா குறித்த புள்ளி விவரங்களை ஐஐடி கான்பூர் ஆராய்ச்சியாளர்கள் குழு ஆய்வு மேற்கொண்டது. அதன்படி , கொரோனா தொற்று செப்டம்பரில் மேலும் உருமாற்றம் அடைந்தால் வரும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் இடையே மூன்றாம் அலை தீவிரமடையும என்றும், ஆனால் இதன் தீவிரம் இரண்டாம் அலையை போல கடுமையான பாதிப்பை ஏற்படுத்ததாது என்றும் தெரியவந்துள்ளது. கொரோனா இரண்டாம் அலையை விட குறைவாகவே பாதிப்பு இருக்கும் என ஐஐடி கான்பூர் ஆராய்ச்சியாளர்கள் குழுவிலிருக்கு மகேந்திரா அகர்வால் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்று தொடர்பான கட்டுப்பாடுகள் செப்டம்பர் 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்: தமிழகத்தில் கொரோன தொற்று பரவல் தடுப்பு கட்டுப்பாடுகள் தொடர்பாக இன்று தலைமை செயலகத்தில் அலோசனைக் கூட்டம் நடைபெற்றது . மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில்,அண்டை மாநிலங்களில் ஏற்பட்டுவரும் தொற்றின் உயர்வு, அதனை எதிர்கொள்வதற்கான முன்னேற்பாடுகள் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது. அதன்படி கொரோனா நோய் பரவல் தடுப்பிற்கான கட்டுப்பாடுகள் வரும் செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி காலை 6 மணி வரை நீட்டிக்கப்படுகிறது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமைகளில் கடற்கரையில் பொதுமக்களுக்கு அனுமதி ரத்து. மத வழிப்பாட்டு தலங்களில் வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை சமய விழாக்களை முன்னிட்டு மத சார்பான ஊர்வலங்கள், திருவிழாக்கள் நடத்த தடை பொது இடங்களில் உறியடி உள்ளிட்ட விளையாட்டுக்களை நடத்துவதற்கு தடை விநாயகர் சதுர்த்திக்காக பொது இடங்களில்…
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் நடைபெற்று முடிந்ததையடுத்து தற்போது மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக்ஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில்டோக்கியோ பாராலிம்பிக்ஸ் போட்டியில் ஈட்டி எறிதலில் இந்தியாவின் சுமித் அண்டில் உலக சாதனையுடன் தங்கம் வென்று அசத்தியுள்ளார். டோக்கியோவில் நடைபெற்றுவரும் பாராஒலிம்பிக் போட்டியின் இன்றைய ஈட்டி எறிதல் போட்டியில் எஃப்64 பிரிவில் இந்தியாவின் சுமித் அன்டில் பங்கேற்றார். தனது முதல் வாய்ப்பிலேயே 66.95 மீட்டருக்கு ஈட்டி எறிந்து அவர் அசத்தினார். பின்னர், அடுத்தடுத்த வாய்ப்புகளில் முறையே, 68.08, 65.27, 66.71, 68.55 மீட்டர் தூரத்துக்கு ஈட்டி எறிந்து பிரமிக்க வைத்தார். இந்த நிலையில் தற்போது 5-வது முயற்சியில் 68.55 மீ. தூரம் எறிந்து மூன்றாவது முறையாக உலக சாதனை படைத்தார். இதையடுத்து இறுதிச்சுற்றின் முடிவில் அவர் வென்றதாக அறிவிக்கப்பட்டது. டோக்கியோ பாராலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற 2-வது இந்தியர் சுமித் அண்டில். ஒரே போட்டியில் மூன்று முறை உலக சாதனை படைத்து அனைவர்…
பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான பாஜக முன்னாள் மாநில நிர்வாகி கே.டி.ராகவன் விவகாரம் தொடர்பாக, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியது இணையத்தில் வைரலாகி வருகிறது. யாரும் செய்யாததையா செய்து விட்டார் என்றும் இதில் எது அநாகரீகமானது என்றும் கவனிக்க வேண்டும் என்று பேசத் தொடங்கி, சீமான் பேசிய கருத்துகள் பலவாறாகப் பரவி வருகின்றன. முதலில் அவர் பேசியது என்ன என்பதைப் பார்ப்போம். சட்டப் பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட வயதையுடைய இருவரின் தனிநபர் விருப்பத்தில் தலையிடுதல் ஒருபோதும் அறம் கிடையாது. இதைப் பதிவு செய்பவர்கள் ஏதோ தனிப்பட்ட காரணங்களுக்காக செய்திருக்கலாம். அதுவும் பொதுவெளிக்கான அறமற்ற செயல்தான். இதுதான் இந்த விவகாரத்தில் அநாகரீகமான செயல். சீமானும் ராகவனும் பெண்களுக்கு பேராபத்தை விளைவிப்பவர்கள் : காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி ஆவேசம் இந்த விவகாரத்தில், பாதிக்கப்பட்டதாக சொல்லப்படும் பெண்ணோ அல்லது கே.டி.ராகவனின் மனைவியோ புகாரளித்தால் ஒழிய இது ஒரு பிரச்சினை அல்ல என்பதுதான் இதில் தேவையான புரிதல்.…
டோக்கியோ பாராலிம்பிக்ஸில் இந்திய வீரர் வினோத் குமார் வென்ற பதக்கம் திரும்ப பெறப்பட்டதாக செய்தி வெளியாகியுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கான 16வது பாராலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று எறிதல் வீரர் வினோத்குமார் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார். அவர், எஃப்52 பிரிவில் ) 19.91 மீட்டர் தூரம் வட்டு எறிந்து வெண்கலப்பதக்கத்தை வென்றதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், நேற்று இரவே அவரது வெற்றி முடிவு நிறுத்திவைக்கப்படுவதாக தகவல் வெளியானது. இந்த நிலையில், வினோத் குமாரின் வெண்கலப் பதக்கம் திரும்பப் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்பக்குழுவினர் எடுத்த முடிவின் அடிப்படையில் வினோத்குமாரின் பதக்கம் திரும்பப்பெறப்பட்டுள்ளது. காரணம் என்ன இதற்கான காரணமாக குறிப்பிடப்பட்டுள்ளது. . வினோத் குமார் ஆடிய அந்த F52 பிரிவுக்கு ஏற்ற உடல் பாதிப்போடு அவர் இல்லை. அந்த வகைமைப்படுத்துதலுக்குள் அவர் அடங்கமாட்டார் என சொல்லப்பட்டிருக்கிறது. அந்த F52 பிரிவு தசைகளில் பாதிப்புடையவர்கள், மூட்டுகள் செயலிழந்தவர்களுக்கான பிரிவு. இதையெல்லாம் சரியாக பரிசோதித்துதான் வினோத் குமார் விளையாட…
கீழடியில் நடைபெற்று வரும் ஏழாம் கட்ட அகழாய்வை நீட்டிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்: மதுரை அருகே கீழடியில் தமிழ்நாடு மாநிலத் தொல்லியல் துறை நடத்தி வரும் ஏழாம் கட்ட அகழாய்வில் கண்டெடுக்கப்பட்டுள்ள பொருட்கள் ‘உலகின் மூத்த நாகரிகம் தமிழ் நாகரிகம்’ என்பதை நிரூபிக்கத் தேவையான அளவுக்கு இருக்கும் என்ற நம்பிக்கை தமிழர்கள் மனதில் ஏற்பட்டிருக்கிறது. அதே சமயம் இதுவரை நடத்தப்பட்ட 6 அகழாய்வுகளில் 5 ஆய்வுகளின் அறிக்கை வெளியாகாதது வருத்தமளிக்கிறது. தமிழ்நாட்டில் ஆதிச்சநல்லூர் அகழாய்வுக்குப் பிறகு மிகப்பெரிய அளவிலான அகழாய்வு சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த அகழாய்வுகளின் ஏழாம் கட்டம் கடந்த பிப்ரவரி மாதம் 13ஆம் தேதி தொடங்கியது. கரோனா இரண்டாவது அலை காரணமாக அகழாய்வுப் பணிகள் சற்று பாதிக்கப்பட்டாலும், தமிழர் நாகரிகம் மிகவும் தொன்மையானது என்பதை நிரூபிக்கும் வகையில் ஏராளமான பொருட்கள் அங்கு கிடைத்து வருகின்றன. கீழடி…
