Author: Admin

இந்திய மக்களின் வாழ்நாளில் 9 ஆண்டுகளை காற்று மாசுபாடு பறிக்கப் போகிறது என்ற எச்சரிக்கை அறிக்கையை சென்னையைச் சேர்ந்த சூழலியல் அமைப்பான பூவுலகின் நண்பர்கள் வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: சிகரெட் பிடிப்பதோ அல்லது காசநோய் மற்றும் எய்ட்ஸ் போன்ற வியாதிகளை விட காற்று மாசுபாடு மனித ஆயுளை வெகுவாகக் குறைக்கிறது என AQLI மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்திய காற்று தர நிர்ணய அளவீட்டின் படி காற்றில் நுண்துகளின் அளவு 60 µg/m3 க்கு உள்ளாக இருத்தல் வேண்டும். இதுவே உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) காற்று தர நிர்ணய அளவீட்டின் படி 25 µg/m3 க்கு உள்ளாக இருத்தல் வேண்டும். ஆனால் சென்னையின் பல பகுதிகளில் நுண் துகளின் அளவு 60 µg/m3 அளவை விட அதிகமாக உள்ளதாக Health Energy Initiative நடத்திய ஆய்வின் முடிவில் நமக்கு தெரிகிறது. குறிப்பாக திருவொற்றியூர், காசிமேடு, மீஞ்சூர்,…

Read More

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் எடப்பாடி, சசிகலாவை விசாரிக்க கோரிய மனு மீது இன்று பிற்பகலில் விசாரணை நடைபெற உள்ளது. ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கிய இந்த வழக்கு திமுக அரசு ஆட்சிக்கு வந்தபிறகு மீண்டும் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில், சசிகலா மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரும் ஒருவருக்கொருவர் சந்தித்துக் கொள்ளாமல் இருக்கும் நிலையில், இருவரையும் விசாரிக்க கோரிய மனு இன்று விசாரணைக்கு வருவது கவனிக்கத்தக்கது. ஆதாரங்களும், முகாந்திரங்களும் வலுவாக இருக்கும் நிலையில், இருவரையும் விசாரிக்க உத்தரவு இன்று பிறப்பிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Read More

தமிழகத்தில் உள்ள சுங்கச்சாவடிகளை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ள 6,606 கி.மீ. தேசிய நெடுஞ்சாலைகளில் 5,134 கி.மீ. சாலைகளை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நேரடியாக பராமரித்து வருகிறது. மீதமுள்ள 1,472 கி.மீ. சாலைகள் மத்திய அரசின் நிதியில், மாநில நெடுஞ்சாலைத் துறையால் பராமரிக்கப்பட்டு வருகின்றன. தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களிடம் கட்டணம் வசூலிப்பதற்காக 48 இடங்களில் சுங்கச்சாவடிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் ஆண்டுதோறும் 8 முதல் 10% வரை கட்டணம் உயர்த்தப்பட்டு வருகிறது. இதில் 24 சுங்கச்சாவடிகளில் இந்தாண்டுக்கான கட்டணம் நேற்று (செப்டம்பர் 1) முதல் உயர்த்தப்பட்டது. இது வாகன ஓட்டிகள், சரக்கு லாரி உரிமையாளர்கள் என பலரையும் அதிருப்திகுள்ளாக்கியது. இந்நிலையில் சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டது தொடர்பாக சட்டப்பேரவையில் மனிதநேய மக்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டுவந்தார். இதற்கு பதலளித்து பேசிய பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு, மத்திய…

Read More

ஆப்கானிஸ்தானில் தாலிபான்களுக்கும், வடக்கு கூட்டணி படையினருக்கும் இடையே நடந்த சண்டையில் பலர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் முழுவதுமாக திரும்ப பெறப்பட்டுள்ள நிலையில் அங்கு ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள தாலிபான்கள் கடும் அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் அங்குள்ள பஞ்ச்ஷிர் பள்ளத்தாக்கை மட்டும் தாலிபான்களால் கைப்பற்ற முடியவில்லை. காரணம் அங்கு மறைந்த ஆப்கானிஸ்தான் அரசியல்வாதி அஹ்மத் ஷா மசூத்தின் மகன் அஹ்மத் மசூத் தலைமையில் ‘வடக்கு கூட்டணி’ என்ற எதிர்ப்பு படை ஒன்று உருவாகியுள்ளது. இந்த அமைப்பு தாலிபான்களுக்கு பெரும் தலைவலியாக அமைந்துள்ள நிலையில் கடந்த 2 தினங்களாக தாலிபான்களுக்கும், வடக்கு கூட்டணிக்கும் இடையே கடும் மோதல் நடைபெற்று வருகிறது. இதில் 350 தாலிபான்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், 40 பேரை சிறைபிடித்துள்ளதாகவும் வடக்கு கூட்டணி படையின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இருபடைகளும் தொடர்ந்து சண்டையிட்டு வருவதால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.

Read More

கேரளாவில் வரதட்சணை கொடுமை காரணமாக மீண்டும் இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்திருப்பது அம்மாநில மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபகாலமாக கேரளாவில் வரதட்சணை கொடுமை காரணமாக இளம்பெண்கள் தற்கொலை செய்வது அதிகரித்து வருகிறது. சில மாதங்களுக்கு முன்பு விஷ்மயா,அர்ச்சனா,சுசித்ரா என அடுத்தடுத்து மூன்று இளம்பெண்கள் இறந்தனர். இதனையடுத்து வரதட்சணை கொடுமை தொடர்பாக புகார் எழுந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கேரள அரசு எச்சரித்திருந்தது. அப்படி இருந்தும் அங்கு மீண்டும் தற்கொலை சம்பவம் நிகழ்ந்துள்ளது. சுனிஷாவுக்கும் கன்னூர் மாவட்டம் பையனூரை பூர்வீகமாக கொண்ட விஜீஷ் என்ற நபருக்கும் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. அன்றிலிருந்தே சுனிஷாவுக்கு புகுந்த வீட்டில் பல்வேறு கொடுமைகள் நிகழத் தொடங்கியுள்ளது. அடிக்கடி பிறந்த வீட்டுக்கு போன் செய்து சுனிஷா நடக்கும் கொடுமையை எல்லாம் கூறி அழுவாராம். பெற்றோரும் சுனிஷாவுக்கு ஆறுதல் சொல்லி வந்துள்ளனர்.இதனைக் கண்டு ஆத்திரமடைந்த கணவர் குடும்பத்தினர் அவரது செல்போனையும் உடைத்துள்ளனர். கடந்த…

Read More

மீண்டும் படப்பிடிப்பில் நடிகர் வடிவேலு கலந்து கொண்டதாக புகைப்படங்கள் வெளியான நிலையில் அவரது தோற்றம் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. சமீபத்தில் நடிகர் வடிவேலுவுக்கும் இயக்குநர் ஷங்கருக்கும் இடையேயான ‘இம்சை அரசன் 24-ம் புலிகேசி’ படம் தொடர்பாக எழுந்த சர்ச்சையில் அவர் புதிய படங்களில் நடிக்க தயாரிப்பாளர்கள் சங்கம் தடை விதித்தது. தற்போது அந்த பிரச்சினை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்பட்டுள்ளதை தொடர்ந்து கிட்டதட்ட 10 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் முழுநேர படப்பிடிப்பில் கலந்து கொள்ள தொடங்கியுள்ளார். இதனிடையே சுராஜ் இயக்கத்தில் வடிவேலு நடிக்க இருக்கும் கம்பேக் படமான நாய்சேகருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதே தலைப்பில் காமெடி நடிகர் சதீஷ், குக் வித் கோமாளி பவித்ரா நடிப்பில் புதிய படம் உருவாகியுள்ளது. இந்த படத்தை கிஷோர் ராஜ்குமார் இயக்கியுள்ளார். இந்த படப்பிடிப்பை முழுமையாக முடித்துவிட்டு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்டரை வெளியிடும் போது நாய்சேகர் என்ற படத்தின் தலைப்பை வெளியிடலாம் என்று திட்டமிட்டு இருந்தனர். ஆனால்…

Read More