Air Pollution: இந்தியர்களின் ஆயுளில் 9 ஆண்டுகள் பறிபோகும்: எச்சரிக்கை

காற்று மாசுபாடு
SHARE

இந்திய மக்களின் வாழ்நாளில் 9 ஆண்டுகளை காற்று மாசுபாடு பறிக்கப் போகிறது என்ற எச்சரிக்கை அறிக்கையை சென்னையைச் சேர்ந்த சூழலியல் அமைப்பான பூவுலகின் நண்பர்கள் வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

சிகரெட் பிடிப்பதோ அல்லது காசநோய் மற்றும் எய்ட்ஸ் போன்ற வியாதிகளை விட காற்று மாசுபாடு மனித ஆயுளை வெகுவாகக் குறைக்கிறது என AQLI மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்திய காற்று தர நிர்ணய அளவீட்டின் படி காற்றில் நுண்துகளின் அளவு 60 µg/m3 க்கு உள்ளாக இருத்தல் வேண்டும். இதுவே உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) காற்று தர நிர்ணய அளவீட்டின் படி 25 µg/m3 க்கு உள்ளாக இருத்தல் வேண்டும். ஆனால் சென்னையின் பல பகுதிகளில் நுண் துகளின் அளவு 60 µg/m3 அளவை விட அதிகமாக உள்ளதாக Health Energy Initiative நடத்திய ஆய்வின் முடிவில் நமக்கு தெரிகிறது.


குறிப்பாக திருவொற்றியூர், காசிமேடு, மீஞ்சூர், கொடுங்கையூர், வல்லூர், எண்ணூர், மணலி, அம்பத்தூர், தி.நகர், வேளச்சேரி, ஆகியப் பகுதிகளில் இந்த ஆய்வின் பொழுது நுண்துகள் 60 µg/m3 முதல் 128 µg/m3 வரை இருந்துள்ளன. அதே போல் பாரிமுனை , வியாசர்பாடி போன்ற பகுதிகளில் நுண்துகளில் அளவு 176 µg/m3 முதல் 228 µg/m3 வரை பதிவாகியுள்ளது.


சென்னையின் காற்றின் தரம் இப்படி இருக்கையில், நுண்துகளின் அளவை உலக சுகாதார நிறுவனம் நிர்ணயித்துள்ள 25 µg/m3 அளவுக்கு குறைத்தால் தற்பொழுது இருப்பதை விட மனித ஆயுளை 5 ஆண்டுகள் அதிகரிக்கலாம் என்று AQLI அறிக்கை வலியுறுத்துகிறது.


இது நடைமுறையில் சாத்தியமா?

சீனாவின் காற்று மாசுக்கு எதிரான நடவடிக்கைகள் நமக்கான பதிலாக நிற்கின்றன. 2013ம் ஆண்டு தொடங்கி காற்று மாசை சீன அரசு தீவிரமாக கட்டுப்படுத்தியதன் விளைவாகத் தற்பொழுது 29% வரை நுண்துகளைக் கட்டுப்படுத்தியுள்ளது. இதேப் போல இந்தியாவும் அனல் மின் நிலையங்கள் மற்றும் வாகனப் புகை ஆகியவற்றை கட்டுக்குள் கொண்டு வருமானால் இந்திய மக்களின் ஆயுட்காலமும் 5 ஆண்டுகள் அதிகரிக்க கூடும்.

இதற்கு பல்வேறு ஒருங்கிணைந்த காற்று மாசுக் குறைப்பு முன்னெடுப்புகள் தேவை என்றாலும் காற்று மாசு குறைக்க குறிப்பிட்ட சில துறை சார்ந்த கொள்கைகளை வகுப்பதும் இந்தியாவிற்கு அவசியாமாக உள்ளது. முக்கியமாக இந்தியாவின் மின் கொள்கை புதைப்படிம எரிசக்தியில் இருந்து புதுப்பிக்கத்தக்க ஆற்றலை நோக்கி மாறுவது தற்போதைய அவசரத் தேவையாக உள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள நகரங்களில் காற்றின் தரத்தை உயர்த்த அரசு உடனடியாக செய்ய வேண்டியவை:

  1. வருடத்தில் 130 நாட்களுக்கு மேல் காற்றின் தரம் மோசமான நிலையில் உள்ள சென்னை நகரத்தையும் ஒன்றிய அரசின் NCAP-National Clean Air Program திட்டத்தின் கீழ் இணைக்க வேண்டுமென தமிழக அரசு கோரிக்கை வைக்க வேண்டும்.
  2. காற்றை மாசுப்படுத்தும் நுண் துகள்கள், சாம்பல்கள், சல்பர் டை ஆக்சைட், நைட்ரஜன் ஆக்சைடு போன்ற நச்சு வாயுக்களை அதிக அளவில் வெளியிடும் அனல் மின்நிலையங்களைப் படிப்படியாக மூடுவதற்கான முயற்சிகளையும் புதுப்பிக்கக்கூடிய எரிசக்தியில் இருந்து தமிழ்நாட்டின் மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்வதை நோக்கிய முன்னெடுப்புகளை எடுக்க வேண்டும்.
  3. எண்ணூர்-மணலி தொழிற்பேட்டையில் மேலும் தொழிற்சாலைகளை புதிதாக அமைக்கவோ, விரிவாக்கம் செய்யவோ தடை விதிக்க வேண்டும். சென்னை மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் காற்று மாசுப்படுத்தும் தொழிற்சாலைகளைக் கண்டறிந்து அதனை குறைக்கும் நடவடிக்கைகளை தமிழ்நாட்டு மாசுக்கட்டுபாட்டு வாரியம் எடுக்க வேண்டும். சென்னையில் புதிதாகக் காற்று மாசுப்படுத்தும் எந்தத் தொழிற்சாலைகளுக்கும் அனுமதி வழங்கப்படாது என்று அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும்.
  4. காற்று மாசைக் கண்காணிப்பதற்கும் அதைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளுக்கு நிதிநிலையில் (budjet) அதிக நிதி ஒதுக்க வேண்டும். காற்று மாசை கண்காணிக்கும் தொடர் கண்காணிப்பு நிலையங்களின் (Continuous Monitoring Stations) எண்ணிக்கையினை அதிகரிக்க வேண்டும்.
  5. அரசு நகரத் திட்டமிடுதலின் பொழுது காலநிலை மாற்றம், அப்பகுதியின் தட்பவெட்பம், புவியியல், மக்கள் தொகை, போக்குவரத்து, அதனால் உண்டாகும் மாசு ஆகியவற்றை கணக்கில் கொண்டு சென்னை மற்றும் அதன் துணை நகரங்களை விரிவாக்கும் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
  6. சென்னை தனிநபர் வாகன பயன்பாட்டினை குறைக்கப் பொதுப் போக்குவரத்தை மேலும் மேம்படுத்த வேண்டும். சென்னை மெட்ரோ ரயில் கட்டணக் குறைப்பு, பாதுகாப்பான சாலைகள், முக்கிய வழித்தடங்களில் அதிக அரசு பேருந்துகளை இயக்குவது போன்ற வாகனப் புகை குறைக்கும் வழிமுறைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்.

இந்த முன்னெடுப்பகுகள் காற்றுமாசுபாட்டைக் குறைத்து மக்களின் உடல்நலனையும் ஆயுளையும் அதிகரிப்பதோடு நீண்ட கால அளவில் சுகாதாரத்திற்காக அரசு செய்யும் செலவீனங்களின் சுமையைக் குறைக்கும்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

வைரலான அணில் சர்ச்சை… புகைப்படத்தோடு பதிலடி கொடுத்த அமைச்சர் செந்தில் பாலாஜி..!

Admin

துப்பாக்கி முனையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை: எஸ்.ஐ போக்சோ சட்டத்தில் கைது!

Admin

ரவுடிகளுக்கு எதிரான சட்டம்… பேரவையில் நிறைவேறிய சுதர்சனத்தின் கோரிக்கை…

தமிழகத்தில் புதிதாக 4 மாநராட்சிகள்…

Admin

அக்டோபர் நவம்பர் மாதங்களில் கொரோனா 3ஆம் அலை தீவிரமடையும் : எச்சரிக்கும் நிபுணர்கள்

Admin

விசிக துணை பொதுசெயலாளர் வீட்டில் ED ரெய்டு… ஏன்?

Admin

கொரோனா பரிசோதனை கட்டணம் குறைப்பு.

தமிழகத்தில் கொரோனா விதிமுறைகளை மீறிய 37 லட்சம் பேர்…இதுவரை ரூ.67 கோடி வசூல்..

Admin

உலகின் மூன்றாவது சிறந்த திரைப்படம்!: சாதித்த ‘சூரரைப் போற்று’

இந்தியாவுக்குள் மீண்டும் நுழைகின்றதா டிக்டாக்?

Admin

மற்றொரு கீழடியா இலந்தைக்கரை? அகழாய்வில் கிடைத்த முக்கிய தடயம்!

Admin

பெற்றோரை இழந்த குழந்தைகள்.. வங்கி கணக்கில் ரூ.5 லட்சம் வைப்பு நிதி

Admin

Leave a Comment