தமிழகத்தில் உள்ள 32 சுங்கச்சாவடிகளை நீக்க நடவடிக்கை – அமைச்சர் எ.வ.வேலு

SHARE

தமிழகத்தில் உள்ள சுங்கச்சாவடிகளை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் உள்ள 6,606 கி.மீ. தேசிய நெடுஞ்சாலைகளில் 5,134 கி.மீ. சாலைகளை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நேரடியாக பராமரித்து வருகிறது.

மீதமுள்ள 1,472 கி.மீ. சாலைகள் மத்திய அரசின் நிதியில், மாநில நெடுஞ்சாலைத் துறையால் பராமரிக்கப்பட்டு வருகின்றன. தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களிடம் கட்டணம் வசூலிப்பதற்காக 48 இடங்களில் சுங்கச்சாவடிகள் இயங்கி வருகின்றன.

இவற்றில் ஆண்டுதோறும் 8 முதல் 10% வரை கட்டணம் உயர்த்தப்பட்டு வருகிறது. இதில் 24 சுங்கச்சாவடிகளில் இந்தாண்டுக்கான கட்டணம் நேற்று (செப்டம்பர் 1) முதல் உயர்த்தப்பட்டது. இது வாகன ஓட்டிகள், சரக்கு லாரி உரிமையாளர்கள் என பலரையும் அதிருப்திகுள்ளாக்கியது.

இந்நிலையில் சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டது தொடர்பாக சட்டப்பேரவையில் மனிதநேய மக்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டுவந்தார்.

இதற்கு பதலளித்து பேசிய பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு, மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் சார்பாக போடப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையிலே ஆண்டுதோறும் கட்டணம் உயர்த்தப்படுவதாக கூறினார்.

மேலும் சென்னையை சுற்றியுள்ள பரனூர், நெமிலி ,சென்னசமுத்திரம், சூரப்பட்டு உள்ளிட்ட 5 சுங்கச்சாவடிகளை அகற்ற விரைவில் மத்திய அமைச்சரை சந்திக்க இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

அப்போது தமிழ்நாட்டில் உள்ள சாலைகளின் அடிப்படையில் 16 சுங்கச்சாவடிகள் மட்டுமே இருக்க வேண்டும் எனவும் ஆனால் 48 சுங்கச்சாவடிகள் இருப்பது கண்டறியப்பட்டிருப்பதாகவும், இதனை நீக்க மத்திய அமைச்சரை சந்திக்கும் போது வலியுறுத்தப்படும் எனவும் அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

பொதுச் செயலாளரும் விலகினார்!… கலகலத்தது மக்கள் நீதி மய்யம்.

எம் ஜி ஆர் ஜெயலலிதா பெயர்களை தவிர வேறு யார் பெயரையும் கோஷமிட வேண்டாம் – ஓபிஎஸ் வேண்டுகோள்

Admin

“கள்ளக்காதலன் மீதான கோபத்தில் தான் குழந்தையை அடித்தேன்’ – கொடூர தாய் பகீர் வாக்குமூலம்

Admin

ஆடி அமாவாசையும் முன்னோர் வழிபாடும்…

வானதி சீனிவாசன் மகன் சென்ற கார் கவிழ்ந்து விபத்து

Admin

செட்டியார் பாரம்பரிய அருங்காட்சியகம் – நகரத்தார் வரலாறு குறித்த ஆவணக் காப்பகம்!.

Nagappan

கொரோனா பரிசோதனை கட்டணம் குறைப்பு.

தேநீர் கடைகளை திறக்க தமிழக அரசு அனுமதி!

Admin

முதல் தங்க நாணயத்தை வெளியிட்ட சோழ அரசர் மதுராந்தகனா? இராஜராஜனா? – சிறப்புக் கட்டுரை

ஆதிச்ச நல்லூர் அகழாய்வில் கிடைத்த சங்ககாலப் பாண்டியர் நாணயம்!. பாண்டியரின் கடல் வணிகத்தின் ஆதாரம்.

வங்கக்கடலில் புயல்: தமிழகத்திற்கு மத்திய சுகாதாரத்துறை எச்சரிக்கை

தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை இன்று பொறுப்பேற்பு!

Admin

Leave a Comment