- தமிழ்நாடு
- இந்தியா
- உலகம்
- அரசியல்
- நூல் அறிமுகம்
- சினிமா
- தமிழ்
- தொடர்கள்
- நலவாழ்வு
- உணவு
- வரலாறு
- வினோதங்கள்
- Public Post
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: Admin
எம்ஜிஆர் நடித்த உலகம் சுற்றும் வாலிபன் படம் மீண்டும் தியேட்டரில் வெளியாகியுள்ளதால் அவரது ரசிகர்கள் தியேட்டரை நோக்கி படையெடுத்து வருகின்றனர். கொரோனா இரண்டாம் அலை தாக்கத்தால் தமிழகம் முழுவதும் 4 மாதங்களாக மூடப்பட்ட தியேட்டர்கள் கடந்த வாரம் திறக்கப்பட்டன. ஆனால் விநாயகர் சதுர்த்தி முதலே புதுப்படங்கள் வெளியாக உள்ள நிலையில், தமிழகத்தில் உள்ள அனைத்து தியேட்டர்களிலும் பழைய திரைப்படங்களை தற்போது ரீ ரிலீஸ் செய்து வருகின்றனர். அந்த வகையில் எம்ஜிஆர் நடிப்பில் உருவாகி மாபெரும் வெற்றி பெற்ற உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம் மீண்டும் வெளியாகியுள்ளது. அதனை எம்ஜிஆர் ரசிகர்கள் பட்டாசுகளை வெடித்தும் எம்ஜிஆரின் பதாகைகளுக்கு பால் அபிஷேகம் செய்ததும் கொண்டாடி வருகின்றனர். எம்ஜிஆர் மறைந்து 35 ஆண்டுகள் ஆன நிலையிலும் அவரது திரைப்படத்தை திரையில் காண மக்கள் குவிந்து வருவது திரையுலகினர் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் மாநில தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை நடத்தவுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தமிழகத்தில் உள்ள 27 மாவட்டங்களில் மட்டும் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. புதிய மாவட்டங்கள் பிரிப்பு,வார்டு வரையறை பணிகள் முடிவடையாதது காரணமாக 9 மாவட்டங்களில் தேர்தல் இதுவரை நடக்கவில்லை. இதனிடையே செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் விடுபட்ட 9 மாவட்டங்களிலும் ஊரக உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.அதை செயல்படுத்துவதற்கான முன்னேற்பாடுகளை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் மாநில தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை நடத்துகிறது. உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட வேண்டிய காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், நெல்லை, தென்காசி, ஆகிய 9 மாவட்டங்களின் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் உதவி அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதுடன்…
சர்வபள்ளி இராதாகிருஷ்ணனின் பேரனும், முன்னாள் மத்திய சுகாதார துறை செயலளருமான கேசவ் தேசிராஜா உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார்.
டெல்லியில் 21 வயதே ஆன ஒரு காவல்துறை பெண் அதிகாரி, கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் தலைநகரான டெல்லியிலேயே இந்த கோர சம்பவம் நடந்துள்ளது. சம்பவம் நடந்து ஒரு வாரம் ஆனதாக கூறப்படுகிறது, ஆனால் காவல்துறை, இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் இல்லை எனவும் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் சமூக வலைதளங்களில் #justiceforsabiya, #justiceforsabiyasaifi என்ற ஹேஷ்டேக்குகளில் நெட்டிசன்கள் நீதிக்கேட்டு போராடிவருகின்றனர். பணிக்கு சேர்ந்த நான்கு மாதங்களே ஆன அந்த பெண் காவல் அதிகாரி, ஒரு கும்பலால் கடத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். மேலும் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். அவர் உடலில் குறைந்தபட்சம் 50 இடங்களில் கத்தியால் குத்தப்பட்டிருப்பதாகவும், மார்பகங்கள் அறுத்தெறியப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது இந்த நிலையில் டெல்லியில் காவல்துறை பெண் அதிகாரி ராஃபியாவை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாக கொலை செய்த குற்றவாளிகளை தூக்கிலிட வேண்டுமென காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி…
துபாயில் சிகிச்சை பெற்று வரும் விஜயகாந்த் தான் நலமாக இருப்பதாக ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். கடந்த சில வருடங்களாக உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வரும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் அரசியலில் ஈடுபடாமல் இருந்து வருகிறார். இந்த நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் உயர் சிகிச்சைக்காக கடந்த மாதம் 25ம் தேதி வீட்டிலேயே தனது பிறந்தநாளை எளிமையாக கொண்டாடி முடித்து 31ம் தேதி சென்னையிலிருந்து துபாய் வழியாக அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார். இந்த நிலையில் அமெரிக்கா சென்ற பிறகு அவரது உடல்நிலை பற்றிய எந்த தகவலும் வெளியாகாமல் இருந்த நிலையில் தான் நலமாக இருப்பதாக விஜயகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் அதில் நான் நல்ல உடல் நலத்துடன் உள்ளேன். நான் நடித்த ‘சத்ரியன் திரைப்படத்தை, எனது சிகிச்சைக்கு உதவிபுரியும் செவிலியர் சகோதரிகளுடன் பார்த்த போது எடுத்த படம்” என்று அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார். கால் மேல் கால் போட்டுக் கொண்டு…
தாலிப்ன்கள் பஞ்ச்ஷீர் போராளிகளுடனான சண்டையில் 600 தாலிபான்கள் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தானில் பல ஆண்டுகளாக உள்நாட்டு அரசு படைகளுக்கும் தலிபான் அமைப்புகளுக்கும் இடையே போர் நடைபெற்று வந்தது. இதில் ஆப்கானுக்கு ஆதரவாக அமெரிக்க படைகள் இருந்து வந்த நிலையில் அமெரிக்க அதிபராகபதவியேற்ற ஜோ பைடன்அமெரிக்க படைகள் ஆப்கனில் இருந்து விலக்கிக்கொள்ளப்படுவதாகஅறிவித்தார். அதைத்தொடர்ந்து அமெரிக்க படைகள் படிப்படியாக ஆப்கானை விட்டு வெளியேறினர் இதனால் , ஆப்கானை தலிபான்கள் கைப்பற்றினர். உடனடியாக அதிபர் அஷ்ரப் கனி நாட்டை விட்டு தப்பி ஓடினார். இதைத்தொடர்ந்து ஆப்கனின் இடைக்கால அதிபராக துணை அதிபர் அமருல்லா சாலே தன்னைத் தானே அதிபராக அறிவித்துக் கொண்டார். ஆப்கானிஸ்தானில் மொத்தம் உள்ள 34 மாகாணங்களில் 33 மாகாணங்களை தலிபான்கள் கைப்பற்றிய நிலையில், இந்துகுஷ் மலைத்தொடருக்கு அருகில் உள்ள பஞ்ச்ஷீர் மாகாணத்தை மட்டும் அவர்களால் கைப்பற்ற முடியாத நிலை இருந்தது. அந்த பகுதியை கைப்பற்றும் முயற்சியில் தலிபான் படைகள் ஈடுபட்டுள்ளன. அவர்களை…
ஒரு கையில் பிரம்பையும் மற்றொரு கையில் சாக்பீசையும் வைத்துக்கொண்டு பள்ளியில் கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டு அன்றைய பாடத்தை நடத்திவிட்டு மாணவர்களுக்கு கிளிப்பிள்ளை போல் சொல்லிக் கொடுப்பவர் ஆசிரியர் அல்ல தன் மாணவர்களை முன் நின்று நல்வழியில் நடத்திச் செல்ல வேண்டிய ஒருவர் அது ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்த இந்தியா .1890 காலக்கட்டத்தில் திருத்தணியில் இயங்கிய பள்ளிக்கு பிரைமரி போர்டு ஸ்கூல்’ என்று பெயர். அப்போது இந்தியா முழுவதும் பெரும்பாலான பள்ளிகள் வாடகை வீடுகளில்தான் இயங்கின. உட்காருவதற்கு மண் தரைதான். மழை வந்தால் ஒழுகும் கூரைகள். திருத்தணியில் அப்படி ஒரு பள்ளியில்தான் அந்தப் பையன் படித்தான். அவன் பெயர், ராதா அந்த பையன் தான் பிற்காலத்தில் உலகின் தலைசிறந்த அறிஞர்களில் ஒருவராக மாறி பல்கலைக்கழகங்களில் ‘சக்கரவர்த்தி’ என் புகழோடு இந்தியாவின் குடியரசுத் துணைத் தலைவராக பதவியேற்றார் அவர்தான் சர்வ பள்ளி ராதாகிருஷ்ணன் ராதாகிருஷ்ணன் தந்தை வீராசாமி, திருத்தணி ஜமீன்தார் ஒருவரிடம் கணக்கராக வேலை…
இந்தியாவின் முதல் சுதேசிக்கப்பல், சுயசார்பு இந்தியா ‘வின் முன்னோடித் தமிழராக புரட்சி செய்த கப்பலோட்டிய தமிழன் வ . உ . சிதம்பரனாரின் 150 வது பிறந்தநாள் இன்று அவரை பற்றி விளக்குகின்றது இந்த தொகுப்பு. ‘’வ . உ . சியின் பிரசங்கத்தை கேட்டால் செத்த பிணம் கூட உயிர் பெற்று எழும். புரட்சி ஓங்கும். அடிமைப்பட்ட நாடு ஐந்தே நிமிடங்களில் விடுதலை பெறும்’’ இதனை கூறியது நம் மக்கள் அல்ல1908ஆம் ஆண்டு சிதம்பரனாருக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கிய தீர்ப்பில் நீதிபதி ஃபின்ஹே எழுதியுள்ள வரிகள்தான் இவை. வ.உ.சி.யின் விடுதலை உணர்வுக்கும், அவரின் தியாக வாழ்க்கைக்கும் இந்த வார்த்தைகளை விடவும் பெரிய சான்று எதுவும் தேவையில்லை. 1872ஆம் ஆண்டு செப்டம்பர் 5ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரத்தில் உலகநாத பிள்ளை, பரமாயி அம்மாளுக்கு மூத்த மகனாக பிறந்தவர் வ.உ.சி. இளம் வயதிலேயே தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நற்புலமை பெற்ற…
திருமணம் செய்வதாக கூறி ஜெர்மனி பெண்ணை ஏமாற்றியது நடிகர் ஆர்யா கிடையாது என சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். ஜெர்மனி வாழ் இலங்கையை சேர்ந்த தமிழ் பெண்ணான வித்ஜா நடிகர் ஆர்யா தன்னை காதலித்து ஏமாற்றிவிட்டதாகவும், தன்னிடம் ரூ.70 லட்சம் வரை பண மோசடி செய்துவிட்டதாகவும் குடியரசு தலைவர் அலுவலகம் மற்றும் பிரதமர் அலுவலகத்திற்கு ஆன்லைன் மூலமாக கடந்த பிப்ரவரி மாதம் புகார் அளித்தார். சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திலும் புகார் அளிக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கடந்த ஆகஸ்ட் 10 ஆம் தேதி ஆர்யாவை நேரில் வரவழைத்து விசாரணை நடத்தினர். இதனிடையே ஆர்யா போல் நடித்து ஜெர்மனி பெண்ணிடம் மோசடியில் ஈடுபட்டதாக புளியந்தோப்பை சேர்ந்த முகமது அர்மான் மற்றும் அவரது மைத்துனர் முகமது ஹுசைனி பையாக் ஆகியோரை ஆகஸ்ட் 24 ஆம் தேதி போலீசார் கைது செய்தனர்.கைதான இருவரும் ஜாமீன் கோரி…
தூத்துக்குடியில் ஓய்வூதியம் கிடைக்காததால் சுதந்திரப் போராட்டத் தியாகியின் மகள் பாத்திரம் கழுவும் நிலை அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் இந்திரா நகரை சேர்ந்தவர் சுதந்திர போராட்டத் தியாகி மாடசாமி. இவர் சுதந்திரபோராட்டத்தின் போது சுபாஷ் சந்திர போஸின் ஐ.என்.ஏ அமைப்பில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர். இதனால் இந்திரா காந்தி பிரதமராக இருந்த போது மாடசாமிக்கு தாமரை பட்டயமும், விடுதலை போராட்ட தியாகிகளுக்கான ஓய்வூதியமும் வழங்கப்பட்டது. இதனிடையே கடந்த 2002 ஆம் ஆண்டு மாடசாமி காலமானதால் அவரது ஓய்வூதியத்தை மனைவி வள்ளியம்மாள் பெற்று வந்தார். இதனையடுத்து 2013 ஆம் ஆண்டு வள்ளியம்மாள் மரணம் அடைந்ததால் தந்தைக்கு வழங்கி வந்த ஓய்வூதியத்தை திருமணம் ஆகாத தமக்கு வழங்க வேண்டும் என மாடசாமியின் மகள் இந்திரா அரசுக்கு விண்ணப்பம் செய்தார். ஆனால் அதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டதால் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் இந்திராவுக்கு ஓய்வூதியம்…
