தாலிப்ன்கள் பஞ்ச்ஷீர் போராளிகளுடனான சண்டையில் 600 தாலிபான்கள் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் பல ஆண்டுகளாக உள்நாட்டு அரசு படைகளுக்கும் தலிபான் அமைப்புகளுக்கும் இடையே போர் நடைபெற்று வந்தது.
இதில் ஆப்கானுக்கு ஆதரவாக அமெரிக்க படைகள் இருந்து வந்த நிலையில் அமெரிக்க அதிபராகபதவியேற்ற ஜோ பைடன்அமெரிக்க படைகள் ஆப்கனில் இருந்து விலக்கிக்கொள்ளப்படுவதாகஅறிவித்தார். அதைத்தொடர்ந்து அமெரிக்க படைகள் படிப்படியாக ஆப்கானை விட்டு வெளியேறினர்
இதனால் , ஆப்கானை தலிபான்கள் கைப்பற்றினர். உடனடியாக அதிபர் அஷ்ரப் கனி நாட்டை விட்டு தப்பி ஓடினார். இதைத்தொடர்ந்து ஆப்கனின் இடைக்கால அதிபராக துணை அதிபர் அமருல்லா சாலே தன்னைத் தானே அதிபராக அறிவித்துக் கொண்டார்.
ஆப்கானிஸ்தானில் மொத்தம் உள்ள 34 மாகாணங்களில் 33 மாகாணங்களை தலிபான்கள் கைப்பற்றிய நிலையில், இந்துகுஷ் மலைத்தொடருக்கு அருகில் உள்ள பஞ்ச்ஷீர் மாகாணத்தை மட்டும் அவர்களால் கைப்பற்ற முடியாத நிலை இருந்தது.
அந்த பகுதியை கைப்பற்றும் முயற்சியில் தலிபான் படைகள் ஈடுபட்டுள்ளன. அவர்களை எதிர்த்து பஞ்ச்ஷீர் போராளிகள் ஈடுபட்டு வருகின்றன. இதுவரை தலிபான்களுடன் நடைபெற்ற சண்டையில் சுமார் 600 பேர் கொல்லப்பட்டுள்ளதாக பஞ்ச்ஷீர் போராளிகள் குழு அறிவித்துள்ளது.