ராபியாவைக் கொன்றவர்களை தூக்கிலிட வேண்டும் : கொதித்தெழுந்த ஜோதிமணி

SHARE

டெல்லியில் 21 வயதே ஆன ஒரு காவல்துறை பெண் அதிகாரி, கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் தலைநகரான டெல்லியிலேயே இந்த கோர சம்பவம் நடந்துள்ளது. சம்பவம் நடந்து ஒரு வாரம் ஆனதாக கூறப்படுகிறது, ஆனால் காவல்துறை, இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் இல்லை எனவும் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் சமூக வலைதளங்களில் #justiceforsabiya, #justiceforsabiyasaifi என்ற ஹேஷ்டேக்குகளில் நெட்டிசன்கள் நீதிக்கேட்டு போராடிவருகின்றனர்.

பணிக்கு சேர்ந்த நான்கு மாதங்களே ஆன அந்த பெண் காவல் அதிகாரி, ஒரு கும்பலால் கடத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். மேலும் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். அவர் உடலில் குறைந்தபட்சம் 50 இடங்களில் கத்தியால் குத்தப்பட்டிருப்பதாகவும், மார்பகங்கள் அறுத்தெறியப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது

இந்த நிலையில் டெல்லியில் காவல்துறை பெண் அதிகாரி ராஃபியாவை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாக கொலை செய்த குற்றவாளிகளை தூக்கிலிட வேண்டுமென காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி தனது ட்விட்டர் பக்கத்தில் கண்டண்ம் தெரிவித்துள்ளார்.

அந்த பதிவில், ராஃபியா ஒரு சிவில் டிபென்ஸ் அதிகாரி. கூட்டுபாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு,மார்பகங்கள் வெட்டப்பட்டு, தொண்டை அறுக்கப்பட்டு, அந்தரங்க உறுப்புகள் சிதைக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்கிற செய்தியைப் படிக்கவே பயங்கரமாக உள்ளது.

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அச்சமூட்டும் அளவிற்கு அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதை தடுப்பதற்கு ஆரம்பகல்வி முதலே பெண்கள் சமத்துவம்,மரியாதை,பெண்கள் வெறும் உடல் அல்ல என்பது பற்றி குழந்தைகளுக்கு போதிக்க வேண்டும். குற்றவாளிகளை விரைவாக விசாரித்து கடுமையாக தண்டிக்கவேண்டும்

பாலியல் குற்றவாளிகளை தண்டிப்பதோடு மட்டுமல்லாமல் பாலியல் குற்றவாளிகளை மனசாட்சியில்லாமல் காப்பாற்ற முயற்சிப்பதும், வெட்கமில்லாமல் பொதுவெளியில் ஆதரிப்பதும் தண்டனைக்குரிய குற்றமாக கருதப்படவேண்டும்.சமூகம் இதுபோன்ற ஆபத்தான நபர்களை புறக்கணிக்கவேண்டும். அப்பொழுதுதான் குற்றங்கள் குறையும் என்று குறிப்பிட்டுள்ளார்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

ஏன்யா கருப்பு பூஞ்சை மஞ்சள் பூஞ்சை என பீதிய கிளப்புறீங்க..? கொந்தளித்த தெலங்கானா முதல்வர்

Admin

திருமணமான பெண்ணை மீண்டும் ஓடும் ரயிலில் மணந்த நபர்..வைரல் பதிவு!

Admin

மைக் சின்னம்: நாம் தமிழர் கட்சிக்கு இதெல்லாம் ஒரு சவாலே அல்ல.

Pamban Mu Prasanth

8 சிங்கங்களுக்கு கொரோனா!

சாகித்ய அகாடமி விருது பெறுகிறார் எழுத்தாளர் இமையம்

Admin

22 மாவட்டங்களில் கொரோனா அதிகரித்துள்ளது:மத்திய அரசு!

Admin

காலில் மாஸ்க்போட்ட அமைச்சர்.. வைரலாகும் புகைப்படம்

Admin

போலார்ட் அதிரடியில் சென்னை சூப்பர் கிங்ஸ் தோல்வி!

ஜி.டி.பி. வளர்ச்சி விகிதத்தில் இந்தியா முதல் இடம் பெறும்!: வெளியானது மதிப்பீட்டு அறிக்கை!.

சூழ்ச்சி செய்கிறது வாட்ஸ்அப்! – மத்திய அரசு குற்றச்சாட்டு!

ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை- ஆர்பிஐ

கோவாக்சின் தடுப்பூசிக்கு அனுமதி? – உலக சுகாதார அமைப்பு தீவிர பரிசீலனை

Admin

Leave a Comment