- தமிழ்நாடு
- இந்தியா
- உலகம்
- அரசியல்
- நூல் அறிமுகம்
- சினிமா
- தமிழ்
- தொடர்கள்
- நலவாழ்வு
- உணவு
- வரலாறு
- வினோதங்கள்
- Public Post
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: Admin
கொரோனா தொற்று நாட்டில் பரவ தொடங்கியது முதல் நாட்டு மக்களிடம் பலமுறை பிரதமர் மோடி உரையாற்றி உள்ளார். தற்போது கொரனோ 2-வது அலை பாதிப்பு குறைந்து வரும் சூழலில் பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் பிரதமர் கூறியது என்ன? பிரதமரின் உரையாடல் சுருக்கம்: கொரோனா பெருந்தொற்றால் நமக்கு பிரியமான பலரை இழந்துள்ளோம். கொரோனா 2ஆவது அலைக்கு எதிராக இந்தியா போராடி வருகிறது. இந்த நவீன உலகம், இது போன்ற கொரோனா பெருந்தொற்றை கண்டதில்லை {நன்றி ani} ஏப்ரல், மே மாதங்களில் கொரோனா பாதிப்பும் ஆக்சிஜன் தேவையும் அதிகரித்தன. ரயில்கள், விமானங்கள், மூலம் ஆக்சிஜன் தேவை பூர்த்தி செய்யப்பட்டது. ஆக்சிஜன் தேவைக்காக பாதுகாப்புப் படையினரையும் பயன்படுத்தினோம். மனித குலத்தின் பெரும் எதிரி கொரோனா அதனை தடுக்க ஒரே பேராயுதம் தடுப்பூசி. இந்தியாவில் கொரோனா 2ஆம் அலை எதிர்த்துப் போராட தடுப்பூசி தான் உதவியுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை…
வாட்ஸ்அப் நிறுவனம் அடுத்ததாக தனது பயனாளர்களுக்கு 3 புதிய அப்டேட்களை வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பேஸ்புக் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான மார்க் ஜுக்கர்பெர்க், வாட்ஸ்அப் செயலியில் விரைவில் மூன்று புதிய வசதிகள் அறிமுகம் செய்யப்படும் என்பதை தெரிவித்திருந்தார். ஏற்கனவே கடந்த ஆண்டு அறிமுகம் செய்திருந்த உரையாடல்களை தானாக அழியும் disappearing வசதியை எல்லா உரையாடல்களிலும் பயன்படுத்தும் விதமாகவும், நீங்கள் ஒருவருக்கு தகவல் அனுப்புவதற்கு முன் அதனை சரிபார்க்க “view once” வசதியும் ஏற்படுத்தப்பட உள்ளன. மூன்றாவதாக multi device எனப்படும் ஒரே நேரத்தில் நான்கு சாதனங்களில் இயங்கும் வண்ணம் அந்த புதிய வசதி உருவாக்கப்பட்டுள்ளது. விரைவில் வாட்ஸ்அப் பீட்டா வழியாக iOS பயனர்களுக்கு இது கிடைக்கும் என்பதும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருவாடு மீன் ஆனாலும் அதிமுகவை சசிகலா கைப்பற்ற முடியாது என்று முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார். சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு அரசியலை விட்டு ஒதுங்குவதாக அறிவித்த சசிகலா தொண்டர்களுடன் போனில் பேசும் ஆடியோ வெளியாகி கடந்த 10 நாட்களாக தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனிடையே விழுப்புரத்தில் அதிமுக மாவட்ட தலைமை அலுவலகத்தில் ஒன்றிய செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் சசிகலா குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த சி.வி.சண்முகம், சசிகலாவுக்கும் அதிமுகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும், அவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு உதவியாளராக இருந்தவர் அவ்வளவு தான் என்றும் ஆவேசமாக கூறினார். மேலும் கருவாடு மீன் ஆனாலும் அதிமுகவை சசிகலாவால் கைப்பற்ற முடியாது எனவும் அவர் கூறினார். மூவேந்தன்
நடிகர் தனுஷ் நடித்துள்ள ஜகமே தந்திரம் படத்தின் அனைத்துப் பாடல்களும் இன்று வெளியாகியுள்ள நிலையில் அவற்றின் வெற்றி குறித்து இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் விளக்கமளித்துள்ளார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ‘ஜகமே தந்திரம்’ படம் நெட்ஃபிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் ஜூன் 18 ஆம் தேதி நேரடியாக ஒளிபரப்பாகிறது. ஏற்கனவே படத்தின் ‘ரகிட ரகிட’, ‘புஜ்ஜி’, ’நேத்து’ பாடல்கள் வெளியாகி சூப்பர் ஹிட்டான நிலையில், இன்று ‘ஆல ஓல’ பாடலும், ‘தீங்கு தாக்கா’ பாடலும் வெளியாகின. இந்நிலையில் படத்தின் ஒவ்வொரு பாடலையும், மிகப்பெரும் உழைப்பில், அதிக நேரம் செலவழித்து உருவாக்கினோம் என இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தெரிவித்துள்ளார். மேலும் “ரகிட ரகிட” பாடல் வெளியான போது பலர் தங்களை மன அழுத்தத்திலிருந்து அப்பாடல் மீட்டதாக கூறியது பெரும் மகிழ்ச்சியை அளித்ததாகவும் அவர் கூறினார்.
மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு புதுச்சேரியில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார். கொரோனாவின் இரண்டாம் அலையில் மக்கள் சிக்கி தவிக்கின்றனர். கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனால் சிபிஎஸ்இ மாணவர்களுக்கான 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது. இதனைதொடர்ந்து ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில், தமிழகத்திலும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. தமிழகத்தை தொடர்ந்து தற்போது புதுச்சேரியிலும் 2 ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.- மூவேந்தன்
நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் பாதுகாவலர், கார் ஓட்டுநர் மற்றும் அலுவலக உதவியாளர் ஆகியோர் நாளை நேரில் விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தன்னை கடந்த 5 ஆண்டுகளாக திருமணம் செய்துகொள்வதாக ஏமாற்றி மூன்று முறை கட்டாயக் கருக்கலைப்பு செய்ததாக நடிகை சாந்தினி, கடந்த 28 ஆம் தேதி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தலைமறைவாகியுள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து மணிகண்டனுக்கு எதிரான ஆதாரங்களை திரட்டும் நோக்கில் தனிப்படை காவல்துறையினர் ராமநாதபுரம் சென்று முன்னாள் அமைச்சரின் குடும்பத்தாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மணிகண்டனின் பாதுகாப்புப் காவலர், கார் ஓட்டுநர் மற்றும் அலுவலக உதவியாளர் ஆகியோருக்கு நாளை நேரில் ஆஜராகி விளக்கமளிக்க சென்னை அடையாறு அனைத்து மகளிர் கவல்நிலையம் சம்மன் அனுப்பியுள்ளது.
ஆம்போடெரிசின் உள்ளிட்ட உயிர்காக்கும் மருந்துகளை கொள்முதல் செய்ய 25 கோடி ரூபாயை முதல்வர் ஸ்டாலின் ஒதுக்கீடு செய்துள்ளார். தமிழத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வந்தநிலையில், அதனை கட்டுப்படுத்த மாநில அரசு சார்பில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தமிழக அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில், மக்கள் அனைவரும் முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு நன்கொடைகள் வழங்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டிருந்தார். மேலும் இந்த நிதி கொரோனா நிவாரண பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் என அவர் தெளிவாக அறிவித்திருந்தார். அதன்படி இன்றுவரை சுமார் 280 கோடியே 20 லட்சம் நன்கொடையாக பெறப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வ தகவல் மாநில அரசு சார்பில் வெளியிடப்பட்டது. இந்த நிலையில் ரெம்டெசிவிர் மருந்தினை கொள்முதல் செய்து அரசு மருத்துவமனைகளுக்கு வழங்கவும், மற்ற மாநிலங்களிலிருந்து ரயில் மூலம் திரவ ஆக்சிஜனை கண்டெய்னரில் கொண்டு வரும் வகையில் கண்டெய்னர்கள் வாங்கவும் 50 கோடி ரூபாய் ஏற்கனவே வழங்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து ஆர்டி-பிசிஆர் பரிசோதனை…
நாடு முழுவதும் கொரோனாவின் தாக்கம் தற்போது குறைந்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. ஒரு பக்கம் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தி வந்தாலும், மறுபுறம் மாநில அரசு சார்பில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு கிட்டதட்ட 2 மாதங்களுக்கு பிறகு ஒரு லட்சம் என்ற அளவுக்கு குறைந்துள்ளது. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை 5 மணிக்கு நாட்டு மக்களிடம் உரையாற்றவுள்ளார். மக்களிடம் பிரதமர் மோடி உரையாற்றும்போது முக்கியமான சில அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடி கடந்த சில வாரங்களாகவே மாநில முதலமைச்சர்களுடன் கொரோனா தொடர்பாக தடுப்பு பணிகள் குறித்தும், தடுப்பூசிகள் செலுத்தக் கூடிய பணிகள் குறித்தும் பல்வேறு கட்டமாக ஆலோசனை நடத்தினார்.- மூவேந்தன்
பேமிலி மேன் 2 தொடருக்கு தடைவிதிக்க தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லையென அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். மக்கள் மத்தியில் பிரபலமான ஃபேமிலி மேன் தொடரின் இரண்டாம் பாகம் கடந்த 3ம் தேதி அமேசானில் வெளியானது. இந்தப் படம் ஈழத்தமிழர்களை தவறாக சித்தரிப்பதாக சர்ச்சை எழுந்தது இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டணம் தெரிவித்த நிலையில், ஃபேமிலி மேன் 2 தொடரை தடை செய்ய வேண்டும் என இயக்குனர் சேரன், நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான், இயக்குனர் பாரதிராஜா, வேல்முருகன் உள்ளிட்ட பலர் கோரிக்கை வைத்தனர். இந்த நிலையில், ஃபேமிலி மேன் 2 தொடரை தடை செய்வதற்கான அதிகாரம் தமிழக அரசுக்கு இல்லையென அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.- மூவேந்தன்
இங்கிலாந்து இளவரசர் சார்லஸ்- டயானா தம்பதியின் 2-வது மகன் ஹாரி. இவர் அமெரிக்காவைச் சேர்ந்த மேகன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இங்கிலாந்து அரச அரண்மனையில் வாழ்ந்து இவர்கள் குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் அரச குடும்பத்திலிருந்து விலகி, அரச குடும்பத்திற்கு உரிய அடையாளங்களை துறந்து அமெரிக்கா சென்று வாழ்ந்து வருகின்றனர் ஹாரி மேகன் தம்பதியினர். ஏற்கனவே இந்த தம்பதிக்கு 2019-ம் ஆண்டு பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு எலிசபெத் ராணியின் பெயர் சூட்டப்பட்டிருந்தது. இந்த நிலையில் கடந்த 4-ந்தேதி (நேற்றுமுன்தினம்) இந்த தம்பதிக்கு கலிபோர்னியாவில் மேலும் ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த குழந்தைக்கு ஹாரி, மறைந்த தனது தாயார் டயானாவின் பெயரை சூட்டியுள்ளார். இது சமூக வலைத்தளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஹரி ஒரு இணைய நிகழ்சி ஒன்றில் தான் இளம் வயதில் தனது அம்மாவின்(டயானா) மரணத்தால் மனம் வெறுத்து போய்…
