அதிமுகவை சசிகலா கைப்பற்ற முடியாது – முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் விமர்சனம்

SHARE

கருவாடு மீன் ஆனாலும் அதிமுகவை சசிகலா கைப்பற்ற முடியாது என்று முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு அரசியலை விட்டு ஒதுங்குவதாக அறிவித்த சசிகலா தொண்டர்களுடன் போனில் பேசும் ஆடியோ வெளியாகி கடந்த 10 நாட்களாக தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

இதனிடையே விழுப்புரத்தில் அதிமுக மாவட்ட தலைமை அலுவலகத்தில் ஒன்றிய செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவரிடம் சசிகலா குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த சி.வி.சண்முகம், சசிகலாவுக்கும் அதிமுகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும், அவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு உதவியாளராக இருந்தவர் அவ்வளவு தான் என்றும் ஆவேசமாக கூறினார்.

மேலும் கருவாடு மீன் ஆனாலும் அதிமுகவை சசிகலாவால் கைப்பற்ற முடியாது எனவும் அவர் கூறினார்.

  • மூவேந்தன்

SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

மைக் சின்னம்: நாம் தமிழர் கட்சிக்கு இதெல்லாம் ஒரு சவாலே அல்ல.

Pamban Mu Prasanth

மீனவர்கள் தூக்கி சென்றது ஏன்? அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் விளக்கம்!

Admin

தேர்தல் ஆணையர் திடீர் ராஜினாமா… பத்திரிகையாளர் ராதாகிருஷ்ணன் எழுப்பும் கேள்விகள்

Admin

தலைவர்களை புகழ்ந்து பேச தடை போட்ட முதல்வர்… காரணம் என்ன?

Admin

அதிமுக பிரமுகர் வெற்றிவேலின் தந்தை வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

Admin

மேற்கு வங்க அரசியல்: 42 தொகுதிகளுக்கு, வேட்பாளர்களை அறிவித்த மமதா பானர்ஜி

Admin

ஜாதிவெறிக்கு சீட் கொடுக்கும் திமுக – சமுக நீதி எல்லாம் நடிப்புதானா?

Admin

CSK vs RCB: அரசு என்ன சொன்னாலும் நம்பி விட வேண்டுமா?

Pamban Mu Prasanth

மக்களின் பொருளாதார வல்லுநர்… யார் இந்த ஜெ.ஜெயரஞ்சன்?

யாரை பழிவாங்க இந்த கருப்பு உடை: நயன்தாரா உடைக்குப் பின் இப்படி ஒரு வரலாறா?

Admin

மூன்றாவது அலை வருமா என தெரியாது? ஆனால் கவனாம இருக்கணும் – ராதாகிருஷ்ணன் பேட்டி!

Admin

Leave a Comment