வெள்ளைக் காகிதம் ஏன் டெம்மி பேப்பர் என அழைக்கப்படுகின்றது?

SHARE

காவிரி டெல்டா பகுதியில் உள்ளவர்கள் வெள்ளைக் காகிதத்தை டெம்மி பேப்பர் என அழைக்கிறார்கள். சிலர் டிம்மி பேப்பர் என்றும் அழைப்பது உண்டு.

காவிரி டெல்டா பகுதியைச் சேர்ந்த திரைப்பட இயக்குநரான லிங்குசாமி இயக்கிய ஆனந்தம் திரைப்படத்தில் மளிகைக் கடைக்கு வரும் ஒருவர் டெம்மி பேப்பரை கேட்டு வாங்கிக் கொண்டு போவதாக ஒரு பின்னணிக் காட்சி இருக்கும்.

வெள்ளைக் காகிதத்தை சென்னை உள்ளிட்ட இடங்களில் ஒயிட் பேப்பர் அல்லது ஒயிட் ஷீட் – என்றுதான் பொதுவாக அழைக்கிறார்கள், டெல்டா பகுதியில் அது எப்படி டெம்மி பேப்பரானது?.

டென்மார்க் நாட்டில் இருந்து தமிழகத்திற்கு வந்த சீகன் பால்கு 1715ஆம் ஆண்டில் ஜெர்மனியில் இருந்து ஒரு அச்சு எந்திரத்தை தரங்கம்பாடிக்கு வரவழைத்தார். அதன் மூலம் இந்தியாவின் மிக முக்கிய அச்சுக்கூடமாக தரங்கம்பாடி ஆனது.

அதன் பின்னர் தரங்கம்பாடியை சுற்றி இருந்த பகுதிகளில் அச்சுக் கூடங்கள் பெருகின. இந்த அச்சுக் கூடங்களில் பணியாற்றிவர்களில் பெரும்பாலானவர்கள் அருகில் இருந்த டெல்டா மக்கள்தான்.

அச்சகத்தில் பயன்படுத்தும் தாளின் அளவுதான் டெம்மி என்பது. 451மில்லி மீட்டருக்கு 572 மில்லி மீட்டர் என்ற அளவைத்தான் ஒரு டெம்மி என்பார்கள். நாம் படிக்கும் சிறிய புத்தகங்களின் அளவு பொதுவாக ⅛ டெம்மி.

அதாவது ஒரு டெம்மி காகிதத்தில் 8 பக்கங்களை அச்சடித்து மடித்தால் இந்த புத்தகத்தின் அளவு கிடைக்கும் என்பது பொருள்.

இப்படியாக அச்சகத்தில் பயன்படுத்தும் காகிதத்தை டெம்மி பேப்பர் என்று அழைத்தவர்கள் வெளியிலும் அப்படியே அழைக்க, அதன் தொடர்ச்சியாக அச்சகப் பணியாளர்களின் சந்ததியினரால் வெள்ளைக் காகிதம் டெம்மி பேப்பர் என இன்றும் அழைக்கப்படுகிறது.

ஆனால் டெல்டாவில் உள்ள மிகப் பெரும்பாலான மக்களுக்கு ஏன் வெள்ளைக் காகிதத்தை டெம்மி பேப்பர் என அழைக்கிறோம் என்பதே தெரியாது!.

இரா.மன்னர் மன்னன்


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

சிற்ப இலக்கணம் தொடர். பகுதி 7: தொழிற் கை முத்திரையின் வகைகள் (17 – 20)

அனைத்து உலோகங்களிலும் காசுகள்! – இராஜராஜனின் சாதனை!. பிறந்தநாள் சிறப்புக் கட்டுரை.

இரா.மன்னர் மன்னன்

கீழடியில் 13 எழுத்துகளை கொண்ட பானை ஓடு கண்டெடுப்பு.!!

Admin

கீழடியில் தந்தத்தால் செய்யப்பட்ட பகடை கண்டெடுப்பு.!!

Admin

வள்ளுவர் கிறிஸ்தவரா? – தொல்.திருமாவளவனின் பேச்சு ஏற்புடையதா?

இரா.மன்னர் மன்னன்

ஜெயலலிதா தன் குழந்தையை தத்துக் கொடுத்தாரா? உண்மை என்ன?

Pamban Mu Prasanth

வெம்பக் கோட்டை அகழாய்வு – வெளிவரத் தொடங்கிய தமிழர் பொக்கிஷங்கள்!.

தமிழ் செம்மல் புலவா் இரா.இளங்குமரனார் காலமானார்!

Admin

தமிழும் காதலும்..! – காதலர்தின சிறப்புக் கட்டுரை.

இரா.மன்னர் மன்னன்

சி.வை. தாமோதரம் பிள்ளை: தமிழுக்கு கிடைத்த கொடை – இலக்கிய வீதி நிகச்சியில் பெருமிதம்

Admin

தமிழகத்தை அதிர வைத்த ‘சோளகர் தொட்டி’ – நாவல் மதிப்புரை

ரோசாப்பூ என்று ஏன் ஆண் குழந்தைகளுக்குப் பெயர் வைக்கப்படுகின்றது?

Admin

Leave a Comment