”சங்கரய்யாவின் தியாகத்தையும் எளிமையையும் போற்றுகிறேன்” மு.க.ஸ்டாலின் வாழ்த்து

SHARE

இந்திய விடுதலைக்காக பிரிட்டிஷ் காலனிய ஆட்சியை எதிா்த்துப் போராடிய போராளி முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவர் என். சங்கரய்யா. இன்று தனது 100 ஆவது பிறந்த நாளில் அடியெடுத்து வைக்கிறாா்.

இதையடுத்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், சங்கரய்யா அவர்களின் இல்லத்திற்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார்.

பின்னர் சங்கரய்யா குறித்து முதல்வர் ஸ்டாலின் கூறுகையில், தமிழக அரசியல் தலைவர்களில் 100 ஆவது பிறந்தநாளை கொண்டாடும் மூத்த தோழர் சங்கரய்யா

பொதுவாழ்வில் உள்ள அனைவருக்கும் வழிகாட்டும் தியாக வாழ்வுக்கு சொந்தக்காரராக அடையாளமாக விளங்குபவர்.

சுதந்திரப் போராட்ட வீரராக, இந்தி ஆதிக்க எதிர்ப்புப் போராட்டக் களம் கண்டவராக, மாணவர்கள் அமைப்பைக் கட்டமைத்தவராக,

பொதுவுடைமை இயக்கத்தின் போராளியாக, ஜனசக்தி – தீக்கதிர் ஏடுகளில் பொறுப்பு வகித்த பத்திரிகையாளராக, மக்கள் உரிமைக்காக சங்கநாதம் எழுப்பிய சட்டமன்ற உறுப்பினராக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழுச் செயலாளராக சங்கரய்யாவின் பொதுவாழ்க்கை பல்வேறு பரிமாணங்களைக் கொண்டது

வாழும் வரலாறாக நூறாவது பிறந்தநாள் காணும் சங்கரய்யா மேலும் பல்லாண்டுகள் நலமுடன் வாழ்ந்து என்னைப் போன்றவர்களுக்கு பொதுவாழ்க்கைப் பயணத்தில் வழிகாட்டிட வேண்டும் என்ற அன்புடனும் ஆவலுடனும் நேரில் வந்து வாழ்த்தி – வாழ்த்துகளைப் பெற்றுக் கொள்கிறேன். மூத்த தோழர் சங்கரய்யாவின் தியாகத்தையும் எளிமையையும் போற்றுகிறேன்.

முதலமைச்சர் என்ற முறையில் தமிழ்நாட்டு மக்களின் சார்பில் நூற்றாண்டு வாழ்த்துகளை அவருக்கு வழங்கி மகிழ்கிறேன். இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

இயல் இசை நாடக மன்ற தலைவராக வாகை சந்திரசேகர் நியமனம்!

Admin

திமுகவில் டாக்டர் மகேந்திரனுக்கு புதிய பொறுப்பு….!

Admin

விநாயகர் சதுர்த்திக்கு கட்டுப்பாடுகள் எதற்கு : முதல்வர் ஸ்டாலின் விளக்கம்

Admin

பதவியை ராஜினாமா செய்த பிரசாந்த் கிஷோர்… அதிர்ச்சியில் பாஜக… அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் என்ன?

Admin

ஆன்லைனில் மது விற்பனை – அமைச்சர் கூறியது என்ன?

Admin

பெட்ரோல், டீசல் வரி குறைப்பது தற்போது சாத்தியம் இல்லை: பி.டி.ஆர்

Admin

எம்ஜிஆரை தவறாக சித்தரிப்பதா..? கோபமானமுன்னாள் அமைச்சர்

Admin

அஞ்சலை அம்மாள் முதல் அப்துல் கலாம் வரை – யார் யாருக்கு சிலைகள்?

Admin

மீண்டும் சைக்கிளிங் தொடங்கிய ஸ்டாலின்!

Admin

ராஜேந்திர பாலாஜி கம்பி எண்ணுவது உறுதி- அமைச்சர் நாசர்

Admin

இந்த கொரோனா காலத்திலும் அதிகார வெறியா? பாஜக மீது சீறும் உத்தவ் தாக்ரே

Admin

பொதுச் செயலாளரும் விலகினார்!… கலகலத்தது மக்கள் நீதி மய்யம்.

Leave a Comment