பெட்ரோல், டீசல் மீதான மாநில வரியை தற்போது குறைப்பது சாத்தியம் இல்லை, என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பெட்ரோல், டீசல் விலையில் மாநிலங்களுக்கு பங்கு கொடுக்காமல் அதிகமான வரியை ஒன்றிய அரசே எடுத்து கொள்வதாக குற்றம் சாட்டினார்
ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 10 ரூபாயாக இருந்த வரியை 32 ரூபாய் 90 காசுகளாக, ஒன்றிய அரசு உயர்த்தியுள்ளதால் மாநில அரசுக்கு தான் பாதிப்பை ஏற்படுத்தும் என கூறினார்.
மேலும், சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைவாக இருக்கும் நிலையில் இந்தியாவில் மட்டும் அதிக விலைக்கு விற்கப்படுவதாகவும் தமிழக அரசின் நிதிநிலை குறித்து விரைவில் வெள்ளை அறிக்கை விடப்படும் என தெரிவித்தார்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்