அதிகரித்த கொரோனா: பிரான்சில் மீண்டும் ஊரடங்கு

SHARE

பாரிஸ்:

24 மணி நேரத்தில் 45,000 நபர்களைக் கொரோனா தாக்கிய சூழலில் பிரான்ஸ் நாட்டில் மீண்டும் நாடு தழுவிய ஊரடங்கு அமலானது.

ஐரோப்பிய நாடான பிரான்ஸ்சில் மார்ச் 26ஆம் தேதிமுதல் நாடு தழுவிய ஊரடங்கு அமலுக்கு வந்தது. கடந்த சில நாட்களாக பிரான்சில் தொடர்ந்து அதிகரித்து வந்த கொரோனா தொற்று மார்ச் 26ஆம் தேதியன்று 24 மணிநேரத்தில்  45,000 நபர்களுக்குப் பரவியது கண்டறியப்பட்டது. இதனையடுத்து பிரான்சில் நாடுதழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அந்நாட்டு நலவாழ்வுத்துறை அமைச்சர் ஆலிவர் வெரான் அறிவித்தார்.

இந்த ஊரடங்கின் படி பிரான்ஸ் நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கடுமையான விதிமுறைகள் அமலாகி உள்ளன. உணவகங்கள், அருங்காட்சியகங்கள், கேளிக்கை விடுதிகள் – உள்ளிட்டவை இனி இரவில் மூடப்படுகின்றன. வரும் நாட்களில் இந்தக் கெடுபிடிகள் இன்னும் அதிகரிக்கப்பட வாய்ப்புகள் உள்ளன.

பிரான்ஸ்சில் உள்ள மருத்துவ அமைப்புகளுக்கு இனி அழுத்தம் படிப்படியாக அதிகரிக்கும் என பிரான்ஸ் நாட்டின் நலவாழ்வுத்துறை அமைச்சர் ஆலிவர் வெரான் கூறி உள்ளதும் இங்கு குறிப்பிடத் தக்கது ஆகும்.

நமது நிருபர்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

ஒலிம்பிக்கில் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை?

Admin

ஆப்கனை விட்டு வெளியேறும் மக்கள் – விமானத்தில் தொங்கிக்கொண்டு செல்லும் அவலம்

Admin

”எங்கள் நாடு இந்தியாதான்… நான் மலாலா அல்ல” – இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் காஷ்மீர் பெண் பத்திரிகையாளர் உரை

Pamban Mu Prasanth

கொரோனாவை கையாளத் தவறிய ஜப்பான் பிரதமர் பதவி விலக முடிவு..!

Admin

தாலிபான்கள் பிடியில் ஆப்கான் ..விரைந்தது ஏர் இந்தியா விமானம்!

Admin

நடக்க முடியாத மகனுக்காக தந்தை உருவாக்கிய ரோபோ உடை

Admin

ஆப்கானிஸ்தானின் முன்னாள் அமைச்சர்.. ஜெர்மனியில் டெலிவரி பாய்.!!

Admin

ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் தலைமையில் புதிய அரசு.!!

Admin

சீன கம்யூனிஸ்ட் கட்சியில் இணைகின்றாரா ஜாக்கி சான்?

Admin

அமெரிக்காவில் 80% டெல்டா கொரோனா வெளியான அதிர்ச்சி தகவல்!

Admin

ஆன்லைனில் வறுத்த கோழி ஆர்டர் செய்த பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!

Admin

கமலா ஹாரீஸுக்கு நன்றி தெரிவித்த பிரதமர் மோடி!

Leave a Comment