பாரிஸ்:
24 மணி நேரத்தில் 45,000 நபர்களைக் கொரோனா தாக்கிய சூழலில் பிரான்ஸ் நாட்டில் மீண்டும் நாடு தழுவிய ஊரடங்கு அமலானது.
ஐரோப்பிய நாடான பிரான்ஸ்சில் மார்ச் 26ஆம் தேதிமுதல் நாடு தழுவிய ஊரடங்கு அமலுக்கு வந்தது. கடந்த சில நாட்களாக பிரான்சில் தொடர்ந்து அதிகரித்து வந்த கொரோனா தொற்று மார்ச் 26ஆம் தேதியன்று 24 மணிநேரத்தில் 45,000 நபர்களுக்குப் பரவியது கண்டறியப்பட்டது. இதனையடுத்து பிரான்சில் நாடுதழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அந்நாட்டு நலவாழ்வுத்துறை அமைச்சர் ஆலிவர் வெரான் அறிவித்தார்.
இந்த ஊரடங்கின் படி பிரான்ஸ் நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கடுமையான விதிமுறைகள் அமலாகி உள்ளன. உணவகங்கள், அருங்காட்சியகங்கள், கேளிக்கை விடுதிகள் – உள்ளிட்டவை இனி இரவில் மூடப்படுகின்றன. வரும் நாட்களில் இந்தக் கெடுபிடிகள் இன்னும் அதிகரிக்கப்பட வாய்ப்புகள் உள்ளன.
பிரான்ஸ்சில் உள்ள மருத்துவ அமைப்புகளுக்கு இனி அழுத்தம் படிப்படியாக அதிகரிக்கும் என பிரான்ஸ் நாட்டின் நலவாழ்வுத்துறை அமைச்சர் ஆலிவர் வெரான் கூறி உள்ளதும் இங்கு குறிப்பிடத் தக்கது ஆகும்.
நமது நிருபர்.